இது ஒரு புராண கதை. பிரம்ம வைவர்த்த புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பிப்லாதன் யார்? என்ன தவம் செயதான்? எதற்காக செயதான்? யாரை நோக்கி செயதான்? என்ன பலன் கிடைத்தது? விடைகள்.....கதையில்.. கதையை கேளுங்கள்....
இந்த கதை, யூதர்களின்,புனித புஸ்தகமான, டால்மடிலிருந்து எடுக்கப்பட்டது. ஒரு கிரேக்க பிரபு, இஸரேல் நாட்டில், ஒரு யூத ஏழையை ,அடிமையாக விலைக்கு வாங்குகிறார். அடிமைகளுக்கு,விடுதலை கிடைப்பது ரொம்ப கஷ்டம். இந்த அடிமை,தன் புத்திசாலித்தனத்தால், விடுதலை பெறுகிறான். எப்படி? கதையை கேளுங்கள்...
இந்த கதை, மஹாபாரததில் உள்ளது. குரு பக்திக்கு உதாரண புருஷராக இருக்கும், உத்தங்கர் என்ற ரிஷியை பற்றிய கதை. குருவுக்காக தன் வாலிப பருவம் முழுவதையும் செலவழித்த இவருடைய கதையை தெரிந்து கொள்ளலாமா?.....
இது மஹாபாரத்தில் உள்ள ஒரு கதை. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எப்போது சண்டை. கொல்லப்பட்ட அசுரர்கள்,மறுபடி உயிர் பெற்று,தேவர்களை சீண்டுவார்கள். எப்படி? அசுரர்கள் குரு,சுக்கிராச்சாரியாருக்கு சஞிவீனி மந்திரம் தெரியும். அதை வைத்து செத்தவருக்கு உயிர் கொடுக்க முடியும். தேவர்களுக்கு அந்த மந்திரம் தெரியாது. அதை அசுர குருவிடமிருந்து கற்று வர தேவ குருவின். மகன், கச்சனை அனுப்புகிறார்கள். கச்சனும் சுக்கிராச்சார்யரிடம் மாணவனாக சேர்கிறான். கச்சனுக்கு அந்த மந்திரம் கிடைத்ததா? தேவர்கள் பயன் அடைந்தார்களா? தேவயானி யார்? கச்சன்-தேவயானி உறவு என்ன? கதையை கேளுங்கள்.....
இது ஒரு பர்மா (மியன்மார்) நாட்டுகதை. ஒரு பொம்மலாட்ட பொம்மை தயாரிப்பாளர், தன் மகன் தன்னுடன் இருக்க ஆசைபடுகிறார். மகனுக்கு விருப்பமில்லை.வெளி உலகத்தில் தன் அதிர்ஷ்டத்தை தேடி செல்ல விரும்புகிறான். அப்பா ,அதற்கு சம்மதித்து,அவனிடம்,4 Puppets களை கொடுக்கிறார். ஒவ்வொரு பொம்மையும், ஒரு சிறப்பு குணம் உள்ளதாக இருந்தது. மகன் கிளம்புகிறான். அவன் பஅணம் எப்படி இருந்தது? கதையை கேளுங்கள்.....
இது ஒரு துருக்கி நாட்டுக் கதை. துருக்கி நாட்டு பாதுஷா,தன்னுடைய வேலைகாரனுக்கு,வெகுமதியாக 4 தங்க நாணயங்களை கொடுக்கிறார். அப்போது அவர் ,அவனிடம் ஒரு பேரம் பேசுகிறார். ஒவ்வொரு நாணயத்திற்கும், ஒரு Advice ஆலோசனை கொடுப்பதாக சொல்கிறார். வேலைக்காரனும் 4 நாணயங்களை கொடுத்து 4 ஆலோசனைகளை பெற்று கொண்டு விடை பெறுகிறான். அப்புறம் என்ன ஆச்சு? அவனுக்கு ஏதாவது பலன் கிடைத்ததா? கதையை கேளுங்கள்.....
இது ஒரு இந்திய நாட்டு கதை. பெங்கால் மாநிலத்தில் சொல்லப்படும் கதை. ஜோசியத்தில் திறமையான ஒரு பிராமணர் ரொம்பவே ஏழையாக இருந்தார். எவ்வளவோ முயற்சி பண்ணியும். அதிர்ஷ்டம் அவர் பக்கமே திரும்பியதில்லை. அவர் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டார். என் ஜாதகப்படி இன்னும் ஆறு மாதம் நான் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்று. ஆனால் அவர் மனைவி அந்த ஊரு ராஜாவை போய் பார்க்கும்படி வற்புறுத்திக் கொண்டே இருந்தாள் அவள் தொந்தரவு பொறுக்க முடியாமல் அந்த பிராமணர் அந்த ஊர் ராஜாவை போய் பார்த்தார். ஒரு தரம் அல்ல... மூன்று தரம்,. அதனால் அவர் ஏதாவது பயன் அடைந்தாரா? கதையைக் கேளுங்க.
இது ஒரு அயர்லாந்து நாட்டுக் கதை. ஒவ்வொரு ஆண்டு ,அக்டோபர் 31ம் தேதி அன்று ஐரோப்பா,அமெரிக்கா நடுகளில்,ஹாலோவியன் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அன்று, குழந்தைகளுக்கு இனிப்பு பண்டங்கள் கொடுப்பார்கள். இரவில்,வீட்டு வாசல்களில்,பூசணிக்காயை குடைந்து, அதற்குள், விளக்குகளை வைப்பார்கள். பூசணிக்காய்க்கு வெளியே கோரமான உருவங்களை வரைந்திருப்பார்கள். எதற்காகாக? வெளி உலக கெட்ட ஆவிகளை,குறிப்பாக,கஞ்சன் ஜாக்கின் ஆவியை விரட்ட. யார் இந்த கஞ்சன் ஜாக்? who is this Stingy Jack? அவன் கதை என்ன? கதையை கேளுன்கள்......
இது ஒரு ஜப்பானிய நாட்டுக்கதை. இரண்டு சகோதரர்கள்-இரண்டு பேரும் கல்தச்சர்கள். இளையவன்,எளிமையான வாழ்க்கையை விரும்புவன். மூத்தவனுக்கு ,பணக்காரனாக ஆக ஆசை. ஒரு சமயம்,வன தேவதை,அவர்களுக்கு 7 வரங்களை அளிக்கிறாள்.அந்த வரங்களை சகோதரர்கள்,எப்படி உபயோகித்தார்கள்,என்பது தான் கதை.. கதையை கேளுங்கள்...
இது ஒரு ஐரோப்பா நாட்டுக்கதை. ஒரு பலம் பொருந்திய அரசர்,போர் புரியாமல்,மற்ற நாடுகளை அபகரிக்க ஒரு திட்டம் தீட்டுகிறார். எந்த நாட்டை,அவர் அபகரிக்க ஆசை படுகிறாரோ,அந்த நாட்டு அரசருக்குஒரு புதிர் அனுப்புவார். புதிருக்கு சரியான விடை அளிக்காத நாட்டை தன் நாட்டுடன் சேர்த்து கொள்வார். அநேகமாக எல்லா நாடுகளும் அவரிடம் வந்து விட்டன- ஒரே ஒரு குட்டி நாட்டை தவிர- அந்த நாட்டு அரசருக்கும்,பெரிய அரசர், ஒரு புதிர் அனுப்புகிறார். குட்டி ராஜா, சவாலில் வெற்றி பெற்றாரா? கதையை கேளுங்கள்..
இது ஒரு சீன நாட்டுக் கதை. ஒரு சிறு பையனைப் பற்றிய கதை. இந்த பையன்,நேர்மைக்கு உதாரணம். எந்த சூழ் நிலையிலும்,அவன் தப்பான செயல்கள் செய்யாமல், நேர்மையாக இருந்தான். அதற்கு அவனுக்கு கிடைத்த வெகுமதி என்ன? உங்களால்,கற்பனை பண்ண முடியாத பரிசு.. அது என்ன? கதையை கேளுங்கள்...
இது ஒரு கொரியா நாட்டுக்கதை. ஒரு கொரியா நாட்டு பணக்காரரின் ஒரே மகன்- ஜின்.ஒவ்வொரு நாள் இரவும்,அவன் அப்பாவின் வேலைக்காரன் - கிம்- ஒரு கதை சொல்வான். அந்த கதைகளை ஜின் யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டான். அவன் சுயநலம்,அவனுக்கு பெரிய ஆபத்தை கொண்டு வந்தது. கிம் அவனை காப்பாற்றுகிறான். ஜின்னுக்கு அப்படி என்ன ஆபத்து? கிம் எப்படி அவனை காப்பாற்றினான்? கதையை கேளுன்கள்.......
இது ஒரு ஜப்பானிய நாட்டுக் கதை. ஜப்பான் தேசத்து கிராமம் ஒன்றில் ஒரு கோவில் இருக்காம். அதில் வழிபடும் தேவன், ஹோகே ஹாமா கூச்சி,என்ற ஒரு வயதான புத்திசாலியான,கருணை உள்ளம் படைத்த மனிதர். அவரை மரியாதயாக ஓஜிசான் (Grandfather) தாத்தா என்று தான் அழைப்பார்கள். கடவுளாக கும்பிட,அப்படி என்ந செயதார்? கதையை கேளுங்கள்....
இது ஒரு ஜப்பானிய நாட்டுக் கதை. மந்திரங்கள் சொல்லி வழிபடுவது எல்லா மதங்களிலும் உண்டு. அர்த்தம் தெரிந்தோ தெரியாமாலோ முழு நம்பிக்கையோடு சொன்னால், அதற்கு பலன் கிடைக்கும்' என்று ஒரு நம்பிக்கை. இந்த கதையில் ஒரு பாட்டி , ஒன்றும் தெரியாத ஒரு புத்த சன்னியாசியிடமிருந்து அர்த்தமில்லாத சூத்திரத்தை (மந்திரத்தை) கற்று கொண்டு ,நம்மிக்கையோடு ஜபிக்கிறாள்.' அவளுக்கு பலன் கிடைத்ததா? கதையை கேளுங்கள்....
இது ஒரு சீன நாட்டுக் கதை. டாமன்-பிதியாஸ் மாதிரி சீன தேசத்தி ல்,2 நண்பர்கள்- கீ வூ-பா ஷூ -இருந்தார்கள். அவர்கள்,இணைபிரியாமல். ஒரு போதும், சண்டை போடாமலும் வாக்குவாதம் செய்யாமலும் இருந்தார்கள். அவர்கள்,வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை இப்போது கேட்க போகிறீர்கள். கதையை கேளுங்கள்.....
இது ஒரு அரேபிய நாட்டுக் கதை. முகமது ஒரு ஏழை.அழகானவன்.புத்திசாலி. அவன் அப்பா,அவனுக்கு விட்டு போன சொத்து ஒரு தொள தொள ட் ரொவுசர்.பேண்ட்- அதை ஒரு சாக்காக மாற்றி போர்டர் வேலை செய்கிறான். ஒரு நாள், சுல்தானின் மகளை பார்க்கிறான்.அவளுக்கும் அவனை பிடித்திருந்தது. சுல்தான் தன் மகளுக்கு மாப்பிள்ளை தேட ஒரு புதிர் போட்டி நடத்துகிறார். முகமதும் அதில் கலந்து கொள்கிறான் .அவன் வெற்றி பெற்றானா? கதையை கேளுங்கள்....
இது அல்ஜீரியா நாட்டில் வசித்த ஒரு யூத குடும்பத்தை பற்றிய கதை. சபாத் தினம்(Sabbath day) யூதர்களுக்கு ஒரு முக்கியமான நாள். அது ஒவ்வோரு வாரமும், வெள்ளி கிழமை மாலையிலிருந்து சனி கிழமை மாலை வரை கொண்டாடப்படுகிறது. அன்று யூதர்க ஒய்வொடுத்து கொண்டு , கடவுள் பிரார்த்தனைகளில் நேரத்தை செலவழிப்பார்கள். நம்பிக்கையோடு செயபவர்களுக்கு கடவுள் அருள் கிடைக்கும் என்று நம்பிக்கை. அப்படி நம்பின,,ஒரு 10 வயது பையனை பற்றிய கதை இது. கதையை கேளுங்கள்....
இது ஒரு சீன நாட்டுக் கதை. 7 சீன சகோதரர்கள் ஒரு கிராமத்தில் வசிக்கிறார்கள். அவர்கள் 7 பேரும் ஒரே மாதிரி உருவமுள்ளவர்கள். ஒவ்வொருவருக்கும் தனிதனியாக ஒரு அபூர்வ சக்தி Super Power உண்டு. அவர்களுக்கு சீன சக்ரவர்த்தியிடமிருந்து ஆபத்து வந்த போது, எல்லோரும் தங்கள் சூப்பர் பவரை உபயோகித்து , தங்களை காப்பாற்றி கொள்கிறார்கள்.. எப்படி? கதையை கேளுங்கள்....
இது இந்தியாவின் கர்னாடக மாகாணத்தில் கன்னட மொழியில்சொல்லப்பட்ட நாடோடி கதை. ஒரு நாட்டின் ராணி சொல்கிறாள்" ஒரு வீட்டின் ஏழ்மை நிலைக்கு கடவுளை பழி சொல்வது சரியாகாது. வீட்டு தலைவி திறமையோடும் அன்போடும் செயல்பட்டால், லஷ்மி தேவி வீடு தேடி வருவாள்." என்று. அதை நிரூபிக்க ,ராஜாவிடம் ஒரு பந்தயம் வைக்கிறாள். என்ன பந்தயம்? அவள் ஜயித்தாளா? கதையை கேளுங்கள்...
இது ஒரு மாலாவி நாட்டுக்கதை. இது ஒரு Trickster Tale. பெட்ரோ ஒரு தந்திரகாரன். பஞ்ச காலத்தில், தனக்கு வேண்டிய பொருள்களை, தன் புத்திசாலித்தனத்தை உபயோகித்து,மற்றவர்களை ஏமாற்றி அடைகிறான். எப்படி? கதையை கேளுங்கள்...