யார் நெருக்கமானவர்கள், ஞானத்தின் இரு அடையாளங்கள், மகா மாயையின் கண்ணாமூச்சி விளையாட்டு, உலக மக்களின் அடிமைத்தனம் என படிப்படியாக நிவிருத்தி மார்க்கத்தின் ரகசியங்களை தெய்வ வாக்காக அருள்கிறார் குருதேவர்
இறைபக்தி சர்வ மத சமரச திருஷ்டியை அருளும் என உரைக்கும் குருதேவர், ப்ரஹ்மசமாஜத்தினருடனான உரையாடலில், கண்திறந்த தியானத்தின் அற்புதத்தை கூறுகிறார்... எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் அதி உத்தம நிலையை அனுபவத்தை அனாயசமாக பகிர்கிறார் அருளோடு!
உண்மை இயல்பை உணர்த்தும் குருவருள் - மாயைக்கும் தயைக்கும் வேறுபாடு - பழுத்த நான் /பழுக்காத நான் என அடுகடுக்காக மண்ணில் வாழும் வகை குறித்து பக்தர்களுக்கு ஞான ஒளி அருள்கிறார் குருதேவர்
எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் நிலை எல்லோருக்கும் சாத்தியமா என்பது குறித்து குருதேவர் விளக்குகிறார். முக்குணங்களின் தன்மையும் சத்வத்தால் பக்தர்கள் உய்யும் வழி பகர்கிறார் குருதேவர்
நாடுபவர் நலம் பேணி, வேண்டும் வடிவில் வேண்டியோர் இதயத்தில் இதமளிக்கும் ஈஸ்வரமூர்த்தியாய் இறைவன் இருப்பதை குருதேவர் இயம்புகிறார் இன்மொழிகளால்!
இறைவன் மீது ஆழ்ந்த நம்பிக்கையும் பக்தியும் கொண்ட இல்லறத்தார்க்கு எல்லாமே அனுகூலமாய் அமையும் என நம்பிக்கை விதைக்கும் அதே நேரம் பதினோரு வெளவால்கள் பிடியிலிருந்து விடுபடுவது எளிதல்ல என எச்சரிக்கவும் செய்கிறார் குருதேவர்...
இறைக்காட்சி இல்லறத்தார்க்கு சாத்தியமா? பக்தியால் விளையும் பலன்களை தனக்கே உரித்தான ஜனரஞ்சக பாணியில் விளக்குகிறார் குருதேவர்
குருதேவரின் கல்கத்தா பயணம் - வித்யாசாகர் இல்லத்தில் வேத சாரத்தை உபதேசம் செய்கிறார்... புன்னகை ததும்ப... கீதாச்சார சாரதியாய் ! கலியுகத்திற்கு பக்தியின் பாதையே பரகதி என்கிறார் குருதேவர்...
குருதேவரின் திரு மொழிகள் தீராத மயக்கம் தருவது ஏன் என உருகுகிறார் ம-. குரு மற்றும் நரேந்திர கானங்களில் தன்னை மறக்கிறார்.. நரேந்திரரை ஹோமா பறவையோடு ஒப்பிடுகிறார் குருதேவர்...
ம-வின் மூன்றாம் வரவு. குருதேவருடன் நரேந்திரரையும் காண்கிறார் -எங்கெங்கும் நிறைந்தவனாய் இருந்தாலும், இருமைத் தன்மையுடன் உலகம் விளங்குவது எப்படி என்றும் அதில் வாழும் வகை குறித்தும் குருதேவர் விவரிக்கிறார்...
ஸ்ரீ ராமகிருஷ்ண தேவரின் வாழ்வையும் வாக்கையும் மானுடத்திற்கு தந்த மகத்தானவர் ம - எனப்படும் மஹேந்திர நாத் குப்தர். தக்ஷினேஸ்வர தவ பூமியை விளக்கிய ம -, தவ சீலரை தரிசிக்கும் முதல் சந்திப்பு... வியப்பும் பரிதவிப்பும் பக்தியாய் பரவசமாய் மிளிர்கின்ற தெய்வ சாந்நித்தியத்தை ம -வுடன் நாமும் அனுபவிப்போமாக!
இறை நினைப்பில் தன்னை இழக்கும் மானுட அனுபவம் அன்னையின் அரவணைப்பிலேதான் சாத்தியம்... பவதாரிணியின் திருவிளையாடல் நிகழ்ந்த ஆனந்த நிக்கேதனமாய் தக்ஷினேஸ்வரம் விளங்குவதை அழகுற விளக்குகிறார் ம-.
நம் கால ஞானாசிரியராக, மண்ணுலக உயிர்களை தன்னுயிராய் பேணி வாழ்ந்ததோடு நூறாண்டுகளை கடந்து மக்கள் சேவையே மகேசன் சேவையாய் கருதும் ஒரு மகத்தான ஆன்மீக நிலையம் - உலகெங்கும் அமைய ஆதர்சமாய் இருந்த மகான் - ஸ்ரீ ராமகிருஷ்ணர் - அந்த மகானுபாவரின் திவ்ய சரிதம் அறிவது ஆனந்தம் - அவர் தம் திருவாய் மொழி உணர்வது பேரானந்தம் - அந்த பேறு பெற்றோர் பாக்கியசாலிகளே - அந்த மகானின் திருமொழிகளை மானுடமும் நாமும் தழைக்க நல்கிய நல்லோர் ஸ்ரீ ராமகிருஷ்ண மட சான்றோர் பெருமக்களை தொழுதுப் போற்றுவோம்... ஜெய் குரு!
சிவனடியார்களுக்கு அமுது படைக்க அரண்மனை நெற்கட்டில் நெல் திருடிய திறம், பஞ்சத்திலும் குன்றாத சிவபூஜை, இறைவனுக்குண்டான நெல்குவியலை தொட்ட உறவினர் பாலகர் என அனைவரையும் மாய்த்த வகை என சிவப்பித்தின் தன்மைகள் ஏட்டில் அடங்குபவையா!?
தமிழ் மாலை சூட்டி அழகு சேர்த்த அண்ணல், சமணர் சூழ்ச்சி வென்று சம்பந்தரால் ஞானம் கைவரப்பெற்ற மன்னர், மயிலையின் மன்னனை போற்றியவர், படை நடத்தி திருப்பணி போற்றியவர், அபச்சாரம் செய்த அரசியின் மூக்கை துண்டித்த சிவனடியார் என சூழல் மாறினும் குணம் மாறாத நாயன்மாரின் பக்தி வேட்கைக்கு ஈடு ஏது!?
திருவிளக்கு திருப்பணிக்கு நெய் ஈட்ட வழியின்றி உதிரம் போக்க கழுத்தை அரிந்த அன்பர், அடியாரை பழிப்பவரின் நாக்கினை துண்டாக்கும் அன்பர் என பாசத்தால் பிணித்து ஆடல் ஆயிரம் நடத்தும் அம்பலத்தரசனை உள்ளபடியே அறிந்தவர் உண்டா!?
அடியார் ஒருவரை தம் படை கொன்றதை அறிந்து பொறுக்காது தீயில் மாண்ட பேரன் பாளர், கொடுநோய் உற்றாலும் நீரணிந்தவரை எம்பெருமானாய் போற்றியவர், வறுமை வாட்டிய போதும் பொன் மீனை முதல் மீனாக இறைவனுக்காக கடலில் எறிந்தவர்,அடியார் உருவில் வந்த எதிரி ஒருவரிடம் முகம் கோணிய மனைவியின் கரத்தினை துண்டித்த அன்பர் என அம்பலவாணர் நிகழ்த்தும் ஆடல்கள் கோடி!
சீர்காழி அருளிய கணநாதர், சோழ மணிமகுடம் வேண்டி தில்லைவாழ் அந்தணரை நாடிய கூற்றுவர், சிவனார் புகழ் பாடும் 49 பொய்யடிமையில்லா புலவர்கள் ஆகியோரின் புகழ் அறிவோம்!
இறையன்பர்கள் பக்தியினால் காவிரி விலகி அக்கரை சேர்ந்து இறை தரிசனம் சாத்தியமான வரலாறு அறிவோம்... திருவெண்ணீறு காணும்கால் திருச்சடையான் திருமுகம் காணும் பக்தி நிலை சாத்தியமா!?
சிவனடியார் பிள்ளைக்கறி கேட்டும் சிறிதும் கலங்காமல் சமைத்து பரிமாறும் பக்குவமுடைய சிவ நேசர்களாக இல்லற பெருமக்களை பார்க்க முடியுமா!? நினைக்கவே இயலாதவற்றையும் இயற்றி வைக்கும் ஈசன் வழி வாய்ப்பதுண்டோ!?