Discoverஒலியோடை - Oliyodai Tamil Podcast
ஒலியோடை - Oliyodai Tamil Podcast
Claim Ownership

ஒலியோடை - Oliyodai Tamil Podcast

Author: Nimal & Arunan

Subscribed: 64Played: 158
Share

Description

நம் வாழ்முறையை மாற்றவல்ல தொழில்நுட்பங்கள் பற்றியும் பன்முகப்பட்ட தலைப்புக்களிலும் உரையாடும் ஒரு தமிழ் வலையொலி வழிகாட்டி.
17 Episodes
Reverse
சமூக ஊடகங்களிலும் செய்திகளிலும் நாம் அடிக்கடி கேள்விப்படும் பிட்கோயின் அல்லது கிறிப்டோ கரன்சி அல்லது மறையீட்டு நாணயம் என்றால் என்ன? எவ்வாறான தொழில்நுட்ப பின்புலத்தில் இது உருவானது? இதன் இன்றைய பயன்பாட்டு நிலை எவ்வாறானது? இவற்றில் முதலீடு செய்வது ஆபத்தானதா? போன்ற விடயங்களைப் பற்றி இன்றைய பதிவில் விபரமாகப் பார்க்கலாம். இந்தத் தலைப்புத் தொடர்பான மேலதிக குறிப்புக்கள்: Visualisation of blockchain - https://www.youtube.com/watch?v=_160oMzblY8 Basic concepts of cryptocurrencies - https://www.youtube.com/c/Bitcoinwithpaypal Coverage of latest developments and analysis - https://www.youtube.com/c/CoinBureau
குதிரைப் பந்தையத்தைப் போன்ற ஒரு சூதாட்டம் என்றில்லாமல் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வது எப்படி? பங்கு வர்த்தகத்தின் அடிப்படைகள் என்ன? அதிலுள்ள ஆபத்துக்கள் என்ன? அவதானமாக இருக்கவேண்டிய விடையங்கள் என்ன? போன்ற விடயங்களைப் பற்றி இன்றைய பதிவில் விபரமாகப் பார்க்கலாம். இந்தத் தலைப்புத் தொடர்பான மேலதிக குறிப்புக்கள்: Lessons from A Grand Master: Anticipating Key Market Moves - https://youtu.be/vl0mDJwwV5I Fractal Flow pro trading strategies - https://www.fractalflowpro.com/ Language of Markets by Shane Blankenship - https://languageofmarkets.com/
நீங்கள் வேலை செய்து உழைக்கும் பணத்தை வருங்காலத்தில் பயன்படும் வகையில் எடுத்து வைப்பது சேமிப்பு என்றால், அந்தப் பணத்தை தொடந்து எமக்குப் பயன்தரும் வகையில் வேலை செய்ய வைப்பதை முதலீடு எனலாம். அவ்வாறாக முதலீடு செய்வது எப்படி? எங்கு ஆரம்பிப்பது? எதில் முதலீடு செய்வது? போன்ற விடயங்களைப் பற்றி இன்றைய பதிவில் விபரமாகப் பார்க்கலாம். இந்தத் தலைப்புத் தொடர்பான மேலதிக குறிப்புக்கள்: Value vs Price - https://m.youtube.com/watch?v=hMEvkP4Y3uM&feature=youtu.be Series on Cash-flow based Valuation - https://m.youtube.com/playlist?list=PLUkh9m2BorqnKWu0g5ZUps_CbQ-JGtbI9 Circle of Competence - https://m.youtube.com/watch?v=agjWNNLXbuY Security Models - https://www.khanacademy.org/economics-finance-domain/core-finance/derivative-securities Courses on Valuation and Fundamentals - https://corporatefinanceinstitute.com/ Further Learning - https://www.investopedia.com
உங்கள் கணினியிலுள்ள தகவல்களின் பாவனையைத் தடுத்து அவற்றைப் பணயமாக வைத்து உங்களிடமிருந்து பணம் பெற முயற்சிக்கும்  ரான்சம்வேர் அல்லது பணயத் தீநிரல் என்றால் என்னவென்று இன்றைய பதிவில் விபரமாகப் பார்க்கலாம். இந்தத் தலைப்புத் தொடர்பான மேலதிக குறிப்புக்கள்: https://ta.wikipedia.org/wiki/பணயத்_தீநிரல் https://www.mcafee.com/enterprise/en-us/security-awareness/ransomware.html https://illinois.touro.edu/news/the-10-biggest-ransomware-attacks-of-2021.php https://anchor.fm/oliyodai/episodes/3-2-1-Backup-Strategy-e16e9mp/a-a6dl5ef
இணையப் பயன்பாட்டில் உங்களை ஏமாற்றி உங்கள் கணக்கு விவரங்கள், கடவுச் சொற்கள், கடனட்டை விவரங்கள் போன்றவற்றைத் தந்திரமாகத் திருடும் மின்-தூண்டிலிடல் அல்லது ஃபிஷிங் தாக்குதல் என்றால் என்னவென்று இன்றைய பதிவில் விபரமாகப் பார்க்கலாம். இந்தத் தலைப்புத் தொடர்பான மேலதிக குறிப்புக்கள்: https://ta.wikipedia.org/wiki/மின்-தூண்டிலிடல் https://www.comptia.org/content/articles/what-is-phishing/ https://www.cloudflare.com/en-gb/learning/access-management/phishing-attack/
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த ஒலியோடை பதிவில் Google I/O 2018 நிகழ்ச்சியில் என்ன புதிய விடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்று பார்க்கலாம்.
அண்மைய செய்திகளில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் அதிகளவான தகவல்களை சேமித்து, அவற்றை எமக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றனவா என்பது பற்றி விவாதிக்கப்பட்டு வருகின்றன. அதன் பின்னணியில் இருக்கும் இந்த Big Data என்ற சொற்தொடரைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
உங்கள் கணினியிலோ கைபேசியிலோ சேமிக்கப்பட்டிருக்கும் தகவல்களை பாதுகாத்துக்கொள்வதற்கான 3-2-1 தகவல் காப்புத் திட்டம் அதாவது 3-2-1 Backup Strategy என்றால் என்வென்று இந்த ஒலியோடை பதிவில் பார்க்கலாம்.
இன்றைய கைபேசிகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் அண்ட்ராய்டு இயங்குதளத்தின் சிறப்புப் பதிப்புக்களாக உள்ள Android Go பதிப்பையும் Android One பதிப்பையும் பற்றி இந்த ஒலியோடை பதிவில் பார்க்கலாம்.
பேஸ்புக் – கேம்பிறிச் அனலிடிகா: கடந்த வாரம் முழுவதும் செய்திகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இந்த இரண்டு நிறுவனக்களின் பெயர்களும், அதற்கு பின்னால் இருக்கும் தொழில்நுட்ப விளக்கங்களும். இந்த வார ஒலியோடை பதிவில் ஒரு சுருக்கமான அறிமுகத்தை பார்க்கலாம்.
இன்றைய நவீன உலகில் கணினியும் இணையமும் சேர்ந்து உருவாக்கியுள்ள புதிய போர் முனை எத்தகையது? இது ஏன் எதிர்காலம் இல்லை, நிகழ்காலம்...
கடவுச்சொல் பாதுகாப்பு ஏன் முக்கியம்? நாம் அதிகம் பயன்படுத்தும் கடவுச்சொற்களில் என்ன சிக்கல்? என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்?
நான் அவுஸ்திரேலியாவில் மோட்டர் சைக்கிள் ஓடப் பழகி, லைசென்ஸ் எடுத்த கதை.
தகவல் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு - மே 9, 2011 - மே 15, 2011
திறந்த ஆணைமூல இயங்குதளமான லினக்ஸ், குறிப்பாக அதன் அடிப்படை எண்ணக்கருக்கள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பாகவும் பிரபலமான லினக்ஸ் வழங்கலான உபுண்டு பற்றியும் கலந்துரையாடியுள்ளோம்.
இன்றைய இணைய உலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் ஃபயர்ஃபொக்ஸ் இணைய உலாவியின் அதிகமாக பயன்படுத்தப்படும் சில நீட்சிகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் பற்றி முடிந்தளவு இலகுவான முறையில் கதைக்க முயற்சிசெய்துள்ளோம்.
Comments 
Download from Google Play
Download from App Store