DiscoverKadhai Osai - Tamil Audiobooks
Kadhai Osai - Tamil Audiobooks

Kadhai Osai - Tamil Audiobooks

Author: Deepika Arun

Subscribed: 509Played: 19,568
Share

Description

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun.

More details - www.kadhaiosai.com
313 Episodes
Reverse
இந்த மகாபாரதக் கதையின் 19-ஆவது பகுதி. இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.இந்த வாரம்:பீஷ்மன் மந்தாகினி நதிக்கரையில் கந்தர்வ மன்னன் சித்ராங்கதனைச் சந்திக்கிறான். அவரிடம் பணிவுடனும் அடக்கத்துடனும் பேசி, அவருடைய அன்பைச் சம்பாதிக்கிறான். அவரிடமிருந்து தனது எதிர்காலம் பற்றிய சில தகவல்களை அறிந்துகொள்கிறான். அது அவனுக்கு ஒரு நிம்மதியைத் தருகிறது.பீஷ்மன் மீண்டும் தன் நாட்டுக்குத் திரும்பும்போது அவனுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. மன்னருக்கும் சத்தியவதிக்கும் பிறந்த ஆண் வாரிசைக் காண பீஷ்மன் அஸ்தினாபுரம் வருகிறான். அவனது பெயர் தேர்வுக்காக அந்தச் சிசு காத்திருக்கிறது. அக்குழந்தைக்கு பீஷ்மன் இட்ட பெயர் என்ன?மகாபாரதத்தில் சொல்லாமல் விட்ட சுவடிகளில் உள்ள சுவையான கற்பனைகளை இவ்வாரமும் கேட்டு ரசியுங்கள்.#mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology
இது இந்த மகாபாரதக் கதையின் 18 ஆவது பகுதி. இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். துர்வாச முனிவர் ஆலோசனைப்படி பீஷ்மன் இமாலயத்துக்கு ஒரு யாத்திரை செல்கிறான். அங்கே அவன் யார் யாரை சந்திக்கிறான்? அகஸ்தியமுனியில் அவன் என்ன பிரச்சனையை எதிர்கொள்கிறான்?வியாச மகாபாரத்தில் சொல்லாத சில கற்பனைக் காட்சிகளை சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள்.#mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology
இது இந்த மகாபாரதக் கதையின் 17 ஆவது பகுதி. சென்ற வார 16 ஆம் பகுதியுடன் முதல் பாகமான 'புத்ர பீஷ்ம பர்வம்' நிறைவுற்றது. இந்த வாரத்திலிருந்து இரண்டாம் பாகமான 'சகோதர பீஷ்ம பர்வம்' தொடங்குகிறது . இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.தந்தை சாந்தனுவுக்கு சத்தியவதியைத் திருமணம் செய்து வைத்த பின் பீஷ்மன் மீண்டும் எல்லைப்புறங்களுக்கு சென்றுவிடுகிறான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தந்தையையும், சிற்றன்னையையும் விருகஸ்தல நகரில் சந்தித்து ஒரு சில நாட்கள் அவர்களுடன் மகிழ்ச்சியுடன் செலவழிக்கிறான். பின் மீண்டும் பணிக்கு சென்ற பிறகு, எதேச்சையாக துர்வாச முனிவரை சந்திக்கிறான். அவர் அவனுக்குப் பூஒடகமான சில குறிப்புகளைத் தந்து, அவனை இமாலயத்துக்கு ஒரு யாத்திரை சென்றுவர ஆலோசனை சொல்கிறார்.வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றிற்கும் அதிகமாய் சில பல சூட்சுமமான கற்பனைக் காட்சிகளையும், ஆழமான, சுவையான உரையாடல்களையும் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள்.#mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology
இது இந்த மகாபாரதக் கதையின் 16 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.பீஷ்மன் எனும் திருப்பெயர் தேவேந்திரனாலேயே வழங்கப்பட்டு, இனி அப்பெயரிலேயே முழு பாரதத்திலும் இடம்பெறப் போகின்ற கங்கா புத்திரன் தேவவிரதன், சத்தியவதியின் சம்மதத்தைப் பெற்று அவளையும் அவள் பெற்றோர் உற்றார் உறவினருடனும் அஸ்தினாபுரத்துக்கு அழைத்து வந்த காட்சியை இவ்வாரம் கேட்டு ரசியுங்கள். மன்னர் சாந்தனுவின் மனப்பாங்கு எப்படியிருந்தது? அவரை பீஷ்மன் எப்படி சமாளித்தான்? மன்னர் பீஷ்மனுக்கு வழங்கிய வரம் என்ன? வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றின் கூடவே சில சூட்சுமமான கற்பனைக் காட்சிகளையும், ஆழமான, சுவையான உரையாடல்களையும் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள்.இத்துடன் முதற் பாகமாகிய "புத்ர பீஷ்ம பர்வம்" நிறைவுறுகிறது. இனி அடுத்த பாகம் "சகோதர பீஷ்ம பர்வம்" தொடங்கும்.#mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology
இது இந்த மகாபாரதக் கதையின் 15 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.கங்கா புத்திரன் தேவவிரதன், ஒரு மாபெரும் பீஷ்மனாக உருவான பெரும் திருப்புமுனைச் சம்பவத்தை, மகாபாரதத்தின் முக்கியமான ஒரு அங்கமாய் அமைந்துவிட்ட காட்சியை இந்த அத்தியாயத்தில் செவிமடுப்பீர்கள். வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றின் கூடவே சில பல சுவாரசியமான உரையாடல்களையும் கற்பனைக் காட்சிகளையும் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள்.#mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology
loading
Comments