DiscoverSBS Tamil - SBS தமிழ்
SBS Tamil - SBS தமிழ்
Claim Ownership

SBS Tamil - SBS தமிழ்

Author: SBS

Subscribed: 1,794Played: 35,250
Share

Description

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
4236 Episodes
Reverse
Indian Literary and Art Society of Australia சிட்னியில் வெளியிடும் “Home Across The Horizon” ஆங்கில சிறுகதை தொகுப்பு புத்தகத்தில் சிறுகதை எழுதி பங்களித்துள்ள இரண்டு எழுத்தாளர்கள் உமா சீனிவாசன் மற்றும் சுமதி கிருஷ்ணன் ஆகியோருடன் உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 04/03/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
அரசின் அறிவிப்பினையும் மீறி பல பகுதிகளிலும் எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை உலகளாவிய ரீதியில் விமானப்பயணிகளுக்கு உடனடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் காரணமாக சற்று உயர்ந்துள்ள பெட்ரோல் விலை மேலும் உயருமா என அஞ்சப்படுகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
நியூசிலாந்து முன்னாள் பிரதமர் Jacinda Ardern ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்வதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 03/03/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
சிட்னியில் சட்டவிரோதமாக மதுபான இறக்குமதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இரண்டு இந்தியர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
Since its discovery in 2014, the Keeladi excavation near Madurai has emerged as one of India’s most contested archaeological sites – celebrated by some as evidence of an early urban civilisation in South India, and dismissed by others as an exercise in political mythmaking. In her latest book, The Dig: Keeladi and the Politics of India’s Past, journalist Sowmiya Ashok traces the accidental unearthing of this ancient settlement and the political storm that followed. Her journey moves across India’s archaeological landscape – from early Iron Age sites in Tamil Nadu to the Harappan site of Rakhigarhi in Haryana, and the lost port of Muziris in Kerala. Along the way, she speaks with archaeologists while enduring the blazing heat, clings to precarious platforms at a roaring jallikattu arena, and even samples fragments of ancient pottery at an excavation site. Sowmiya Ashok speaks to Kulasegaram Sanchayan about The Dig. - 2014ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, மதுரைக்கு அருகிலுள்ள கீழடி அகழாய்வு, இந்தியாவின் மிக அதிகமாக விவாதிக்கப்படும் தொல்லியல் தளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. தென்னிந்தியாவில் ஒரு நகர்மயமான பண்டைய நாகரிகம் இருந்ததற்கான சான்று என சிலர் இதை போற்றினாலும், மற்றவர்கள் இதை அரசியல் நோக்கமுடைய வரலாற்றுக் கற்பனை என நிராகரிக்கின்றனர். இந்தப் பின்னணியில், The Dig: Keeladi and the Politics of India’s Past என்ற தலைப்பில் சமீபத்தில் ஒரு நூலை வெளியிட்டுள்ள பத்திரிகையாளர் சௌமியா அஷோக், கீழடி என்ற பண்டைய குடியிருப்பு எவ்வாறு தற்செயலாக வெளிப்பட்டது என்பதையும், அதனைத் தொடர்ந்து எழுந்த அரசியல் புயலையும் விரிவாகப் பதிவு செய்கிறார். தமிழ்நாட்டின் இரும்புக் காலத்திற்குரிய ஆரம்பகால தளங்களிலிருந்து, ஹரியானாவின் ஹரப்பா நாகரிகத் தளமான ராக்கிகடி, கேரளாவின் மறைந்துபோன துறைமுக நகரமான முசிறி வரை – இந்தியாவின் பல தொல்லியல் நிலப்பரப்புகள் வழியே அவரது பயணம் விரிகிறது. அந்தப் பயணத்தில், கொளுத்தும் வெயிலில் அகழாய்வு தளங்களில் தொல்லியலாளர்களுடன் உரையாடுகிறார்; ஆர்ப்பாட்டமான ஜல்லிக்கட்டு அரங்கில் நடுங்கும் மேடைகளில் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறார்; அகழாய்வுத் தளத்தில் கிடைத்த பழங்கால பானைச் சில்லுகளையும் சுவைத்துப் பார்க்கிறார். ‘The Dig’ என்ற அவரது நூல் குறித்து, பத்திரிகையாளர் சௌமியா அசோக், குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 02/03/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலியாவில் உள்ள சர்வதேச மாணவர்களின் உடல் மற்றும் மனநலத்தை பாதுகாக்க உதவும் வகையில், புதிய இணையதளம் மற்றும் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் Tys Occhiuzzi எழுதிய விவரணத்தை அடிப்படையாக கொண்டு செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இறந்துவிட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனம், ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் மற்றும் அரசு தொலைக்காட்சி உட்பட பல அதிகாரப்பூர்வ உள்ளூர் செய்தி நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்தப் பின்னணியில், ஈரானின் எதிர்காலம் என்ன என்று Arab News என்ற பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியர் மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து வெளியாகும் Saudi Gazette in Jeddah என்ற பத்திரிகையின் முன்னாள் நிர்வாக ஆசிரியருமான எல். ராம்நாராயண் ஐயர் அவர்களுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (22– 28 பெப்ரவரி 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: செல்வி இன்பசேகரன்.
தற்போது Villawood தடுப்பு மையத்தில் இருக்கும் திலீவரன் பகிர்ந்து கொண்ட கருத்துகளோடு, குடியேற்ற தடுப்பு மையங்களில் இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடம் கோருவோரின் நிலை குறித்தும், அரசின் நிலைப்பாடு குறித்தும் விளக்கும் ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
பிரதமர் இந்த வாரம் கூறிய ஒரு வார்த்தை அவரை பலத்த விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளது. அது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 27/02/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
NSWஇல் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் நடைபெறும் முக்கிய கேமரா திட்ட மாற்றத்தை முன்னிட்டு, மில்லியனுக்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு அவசர எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆா்.நல்லகண்ணு அவர்கள் பெப்ரவரி 25 அன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 101. நல்லக்கண்ணு அவர்கள் கடந்த 2005ம் ஆண்டு SBS தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய நேர்காணலின் மறுபதிவு இது. நிகழ்ச்சித் தயாரிப்பு றைசல்
ஆசியாவின் நோபல் பரிசான ரமோன் மாக்சசே விருதுகளுக்கான 2017ஆம் ஆண்டின் வெற்றியாளர்களில் ஆறு பேரில் ஒருவராக, (அப்போது) 82 வயதான தமிழ் ஆசிரியர் கெத்சீ சண்முகம் (Gethsie Shanmugam) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஒரு ஆசிரியரான கெத்சீ சண்முகம், மூன்று தசாப்தங்களாக இலங்கையில் நடந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள விதவைகள், அனாதைகள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கும், மோதல் வலயங்களில் குண்டு வெடிப்புகளினாலும், அச்சுறுத்தல்ககளினாலும் பாதிக்கப்பட்டோருக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கிவந்தவர். கெத்சீ சண்முகம் தனது செயற்பாடுகள் குறித்தும், விருது வாங்கியது குறித்தும் 2017ஆம் ஆண்டு குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து பேசியிருந்தார். அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.
வீட்டு வசதிகள் குறித்த செனட் விசாரணையில், வரி சீர்திருத்தத்திற்கான அவசர கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய மூலதன ஆதாய சலுகைகள் பணக்கார முதலீட்டாளர்களுக்கு சாதகமாக உள்ள அதே நேரத்தில் இளைய தலைமுறையினர் வீடு வாங்க முடியாமல் செய்கிறது என்று அதற்காகக் குரல் கொடுப்பவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த வரிச் சலுகைகளைக் குறைப்பது வீட்டு உரிமையை நான்கு சதவீதம் அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலிய தொழிற்சங்க சம்மேளனம் வாதிடுகிறது. வீட்டுவசதியை மேம்படுத்த நிதியளிப்பதாலும், போராடும் வாடகைதாரர்களை ஆதரிப்பதாலும் நிதிநிலையில் 6.5 பில்லியன் டொலர்கள் உதிரி முதன்மை நன்மையாக இருக்கும் என்று Grattan Institute நம்புகிறது. SBS செய்திப் பிரிவினருக்காக Briana Charles எழுதிய ஒரு சிறப்புக் கட்டுரையின் ஆதரவுடன், இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
loading
Comments (3)

Yogi Yoganand

கையில் வளையம் மாட்டும் திட்டம் பலன் தரும்.

Apr 11th
Reply

Rajasekaran Lakshumanan

Tamil God Song's to be relayed

Sep 9th
Reply
loading