DiscoverDeep Talks - Tamil Audiobooks
Deep Talks - Tamil Audiobooks
Claim Ownership

Deep Talks - Tamil Audiobooks

Author: Deep Talks Deepan

Subscribed: 141Played: 1,243
Share

Description

Discover the Richness of Tamil Culture, Motivation, Audiobooks and Book summaries!

Unlock Tamil history, culture, and literature in one click. Get inspired with powerful Tamil motivation and enjoy unlimited audiobooks and summaries with immersive sound and crystal-clear audio — your gateway to endless learning and inspiration!

Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏
171 Episodes
Reverse
தினமும் நாம் கேட்கும் மற்றும் பாராயணம் செய்யும் 'கந்த சஷ்டி கவசம்' பாடலின் ஒவ்வொரு வரிக்கும் பின்னால் எவ்வளவு ஆழமான அர்த்தமும் ஆன்மீக தத்துவமும் மறைந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? வெறும் பாடலாக மட்டும் கேட்காமல், அதன் உண்மையான பொருளை உணர்ந்து படிக்கும்போது நம் மனதில் ஏற்படும் அமைதியும் நம்பிக்கையும் மிகப்பெரியது.இந்த வீடியோவில், தேவராய சுவாமிகள் இயற்றிய கந்த சஷ்டி கவசம் பாடலின் முழுமையான தமிழ் விளக்கத்தை மிக எளிமையாகவும் தெளிவாகவும் தெரிந்துகொள்ள போகிறீர்கள். Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏
ராமாயணக் கதை அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறோம்... ஆனால் அதில் மறைந்திருக்கும் இந்த உண்மைகள் பலருக்கும் தெரியாது!ராமாயணம் வெறும் கதை அல்ல... இது பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களை நல்வழிப்படுத்தும் ஒரு மாபெரும் வாழ்க்கை தத்துவம்! ராமன் காடேகியது, சீதை சிறைபிடிக்கப்பட்டது, ராவண வதம் என மேலோட்டமாக நாம் அறிந்த இந்த காவியத்திற்குள், நாம் இதுவரை கவனிக்கத் தவறிய பல அதிர்ச்சியான உண்மைகளும், நுட்பமான அரசியலும், தர்மத்தின் சவால்களும் மறைந்து கிடக்கின்றன.இந்த வீடியோவில், ராமாயணத்தின் முழுமையான கதையை ஓர் ஆழமான, சுவாரஸ்யமான ஒலிப்புத்தக அனுபவமாக (Audiobook) உங்களுக்காக வழங்குகிறோம்.Lead Narration & Script: Deep Talks DeepanSpecial Character Voices (Kosalai, Sumithirai): Nancy ThoorigaVideo Post-Production: Vishnu Varathan
தமிழ் கதைகளுக்காக கைகோர்ப்போம்: https://rzp.io/rzp/ForTamilAudiobooksபிறக்கும்போதே தாயால் நதியில் வீசப்பட்டான், திறமை இருந்தும் சூத புத்திரன் என உலகத்தால் கொடூரமாக அவமானப்படுத்தப்பட்டான். தன் உயிரினும் மேலான நண்பனுக்காக, சொந்த தம்பிகளையே போர்க்களத்தில் சந்தித்த மாவீரன் கர்ணனின் கண்ணீர் கதை. அர்ஜுனனை கொல்ல வாய்ப்பிருந்தும் கர்ணன் ஏன் கொல்லவில்லை, நிராயுதபாணியாக நின்றவனை கொல்ல கிருஷ்ணர் போட்ட அந்த Masterplan என்ன? மகாபாரதத்தின் மாவீரன் கர்ணன் கதையை கேளுங்கள்.
ராஜேஷ்குமார் அவர்களின் அதிரடி கிரைம் த்ரில்லர் நாவலான "இப்படிக்கு ஒரு இந்தியன்" நாவலின் சுவாரஸ்யமான கதையை தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.துப்பறியும் நிபுணர்களான விவேக் மற்றும் விஷ்ணு கையில் எடுக்கும் ஒரு விசித்திரமான கேஸ். "கால பைரவன்" பெயரில் வரும் மர்மமான மரண எச்சரிக்கை மற்றும் 5 டெலிபோன் எண்கள். இதற்கிடையில், பரபரப்பை ஏற்படுத்திய பத்திரிகையாளர், திடீரென காணாமல் போகிறார். இந்த மர்மங்களுக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன? விவேக் மற்றும் விஷ்ணுவின் புலனாய்வு எப்படி நகர்கிறது என்பதை இந்த கதை வழியாக பாருங்கள். கிரைம் நாவல்கள் மற்றும் துப்பறியும் கதைகள் உங்களுக்குப் பிடிக்குமென்றால், இந்த வீடியோவை இறுதிவரை பாருங்கள்.#RajeshkumarNovels #TamilCrimeThriller #IppadikkuOruIndian #DeepTamilAudiobooks
பழந்தமிழர்களின் வரலாறு என்பது வெறும் வாள், வேல், அம்புகளின் கதை அல்ல. அது ஒரு முழுமையான போர் அறிவியல், ஆயுதத் தொழில்நுட்பம், படை அமைப்பு, கோட்டை பாதுகாப்பு மற்றும் போர்த் தந்திரங்களின் வரலாறு. சங்க காலத் தமிழர்கள் பயன்படுத்திய வில், அம்பு, வேல், வாள், சூலம், மழு, ஈட்டி போன்ற போர்க்கருவிகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன? அவற்றின் வடிவமைப்பிலும் பயன்பாட்டிலும் இருந்த நுட்பம் என்ன?புறநானூறு, சங்க இலக்கியங்கள், நிகண்டுகள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, நம் முன்னோர்களின் போர் உலகத்திற்குள் இந்தப் பயணம் செல்கிறது.வாள், வேல், அம்பு போன்ற ஆயுதங்களைத் தாண்டி, ஒரு நாட்டின் பாதுகாப்பு, படை அமைப்பு, கோட்டை, போர் வியூகம் மற்றும் கடற்படை வரை தமிழர்கள் உருவாக்கியிருந்த அமைப்பு எவ்வளவு விரிவானது?அதை முழுமையாகத் தெரிந்துகொள்ள இந்த காணொளியை முழுவதும் பாருங்கள்.
loading
Comments