Discoverகூடாரவாசி
கூடாரவாசி
Claim Ownership

கூடாரவாசி

Author: இsai அmuthan

Subscribed: 0Played: 29
Share

Description

கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.!
இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....
198 Episodes
Reverse
பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள போஸ்டர் பற்றிய ஓர் புதிய ஆரம்பம் . அதாவது அப்போஸ்தலர்களின் மறைக்கப்பட்ட வரலாறும் சத்தியத்தின் வாழ்வும் பற்றிய சத்திய செய்திகள் தொடர்ந்து பார்ப்போம் . அப்போஸ்தலர்களை தனித்தனி நபராக பிரித்து நாம் பார்க்க போகிறோம் .
.
நற்செய்தியை குறித்து அன்பு சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்களால் கொடுக்கப்பட்ட தேவ செய்தி .......... சத்திய செய்தியை கேளுங்கள் சுவிசேஷத்தை சொல்லுங்கள்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாமத்தில் வாழ்த்துக்கள் ........ இன்றைய தினத்திலும் தேவனுடைய வார்த்தையை கொண்டு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் ..... நாம் அநேக காரியங்களை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம் ..... ஆனால் ஆண்டவர் சொல்லுகிறார் எதைக் குறித்தும் கவலைப்படாதீர்கள் நாளை குறித்தும் கவலைப்படாதீர்கள் என்று கூறுகிறார் ..... ஆயினும் நாம் எதையாவது நினைத்துக் கொண்டு கவலைப்பட்டு கலங்கிக் கொண்டிருக்கிறோம் ....... இதுபோன்று எதைக் குறித்தாவது கவலைப்பட்டுக் கொண்டிருக்கிற நமக்கான செய்தி தான் இது ...... எதைக் குறித்தும் கவலை வேண்டாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை தேடி வந்திருக்கிறார் ..... அவர் உங்கள் காயங்களை ஆற்றி உங்களை சீர்படுத்துவார் ..... உங்க இருதயத்துக்கு ஏற்ற சமாதானத்தை தந்தருளி உங்களை ஆறுதல் படுத்துவார் ........ விசுவாசமாக இருங்கள் எனக்கு உதவி செய்த என் தேவன் உங்களுக்கும் கட்டாயம் உதவி செய்வார் ...... ஆமென்
அன்பு ரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்கான அடையாளம் பற்றி வேத வசனத்தின் அடிப்படையிலும் ..... இவ்வுலக வரலாறுகளின் அடிப்படையிலும் தினம் நடக்கும் அன்றாட நிகழ்வுகளின் அடிப்படையிலும் நமக்கு விளக்கி கொடுக்கிறார் அன்பு சகோதரர் எம்டி ஜகன் அவர்கள் ....... மேலும் இந்த உலகத்தின் முடிவுக்கும் இயேசு கிறிஸ்துவின் வருகைக்கான அடையாளங்களை பற்றி வேதம் கூறும் கருத்துக்களையும் .... இவ்வுலகத்தில் நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளை குறித்தும் வேத வசனத்தின் அடிப்படையில் நமக்கு சுட்டிக் காட்டுகிறார் ...... எனவே இது கடைசி காலமாய் கர்த்தருக்கு பயந்து மனந்திரும்பி வாழ்வோம்..... அநீதியை வெறுத்து நீதியை பற்றிக் கொள்வோம் .... தீமையை வெறுத்து நன்மையை பற்றிக் கொண்டு வாழ கத்தத்தாமே உங்களுக்கு உதவி செய்வாராக ....ஆமென்
ஆவிக்குரிய வளர்ச்சியில் அன்றாடம் தொடர்ந்து வளர மறைவான மன்னா என்ற சத்தியத்தை கேட்போம். பயன்பெறுவோம். நம்மை சீர்படுத்துகிற சத்திய வசனத்திற்காக கர்த்தரை ஸ்தோத்தரித்து காத்திருப்போம் ..... இந்த சத்திய வசனங்களை கேட்டுக் கொண்டிருக்கிற உங்கள் யாவரையும் தேவன்தாமே ஆசீர்வதிப்பாராக
சமாதானம் பண்ணுகிறார்கள் பாக்கியவான்கள் என்கின்ற வேத வசனம் எதைக் குறிக்கிறது ....... சமாதானம் பண்ணுகிறேன் யாவரும் கடவுளுடைய பிள்ளைகளா? ?? ...... வேதம் கூறும் சமாதானம் எது? ??? .......... சமாதானம் செய்வதனால் வரும் நன்மைகள் யாது ??? .......... சமாதானம் நமக்குள் இருந்தால் நாம் எப்படி இருப்போம் ...???.......தேவ சமாதானம் ஒருவனை எப்படி வாழ வைக்கும் ????..... இது போன்ற அநேக கேள்விகளுக்கான சத்திய விளக்கத்தை அன்பு சகோதரர் இந்தச் செய்தியின் வாயிலாக நமக்கு தெரிவிக்கிறார் .... சமாதானத்தோடு இருந்து சர்வ வல்லமையுள்ள தேவனை நாம் மகிமைப்படுத்துவோம்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் ஒரு நொடிப் பொழுதில் நாம் மறுரூபம் ஆக்கப்படுவோம் ..... அந்த ஒரு நொடிப் பொழுதில் நம் வாழ்வில் என்ன நடக்கும் என்பதை பரிசுத்த வேதத்தின் அடிப்படையில் அன்பு சகோதரர் திரு எம் டி ஜெகன் அவர்கள் நமக்கு விரிவாக விளக்கி கொடுத்துள்ளார் ...... எனவே சத்தியத்தை சந்தோஷத்தோடு கேட்டு ஆவி ஆத்மா சரீரத்தை தயார்படுத்தி ஆண்டவருக்கு காத்திருப்போம் அவன் நாமத்தை உயர்த்துவோம் ...... அந்த ஒரு நொடிப் பொழுதுக்காக காத்திருப்போம் .... கர்த்தரின் வருகை மிக சமீபம் ஆகையால் ஆயத்தப்படுவோம் ..... நம் பாவங்களை விட்டு விலகவும் பரிசுத்தமாய் வாழ ஆயத்தப்படுவோம் .......ஜீவனுள்ள தேவன் தாமே பரிசுத்தமாய் வாழ துடிக்கும் ஒவ்வொருவரோடும் கூட இருந்து ஆசிர்வதித்து நடத்துவாராக .....!
நடுவிலே என்ற தலைப்பின் வாயிலாக தேவனுடைய வார்த்தையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் அன்பு சகோதரர் MD.ஜெகன் அவர்கள் .......... சத்தியத்தை அறிந்து கொண்டு நித்தியத்தை நோக்கி பயணத்தை தொடருங்கள் ..!
இன்றைய தினத்திலும் பிசாசின் தந்திரங்கள் என்ற தலைப்பின் கீழாக தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தும் வகையில் தேவ சத்தியத்தை அன்பு சகோதரர் நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்...... எனவே தனது ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து முன்னேற அனேக சத்தியத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து எங்களோடு இணைந்திருங்கள் சத்தியத்தை அறிந்து சத்தியப் பாதையில் பலப்படுங்கள் ...... ஜீவன் உள்ள தேவன் தாமே பிசாசின் தந்திரங்களில் இருந்து உங்களை பாதுகாப்பாராக ....ஆமென்
நீதிமானாகிய லோத்தைக் குறித்து பரிசுத்த வேதம் கூறும் ஆழமான சத்திய வழிபாடு மற்றும் லூத்தி வாழ்க்கையில் தேவ திட்டமும் தேவ வசனமும் எவ்வாறு நிறைவேறினது என்பதை குறித்தும் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் சத்தியத்தின் வாயிலாக எடுத்துரைக்கும் தேவசெய்தி ....... எனவே சத்தியத்தை அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும் ...... கர்த்தர்தாமே உங்கள் அனைவரும் கூட இருந்து ஆசீர்வதிப்பாராக...!
கர்த்தர் கொடுக்கும் பலத்தைக் கொண்டு நாம் சகலத்தையும் செய்ய ஆயத்தமா இருக்க வேண்டும்.
மகா வல்லமை பொருந்திய கணம் பொருந்திய நம் தேவனின் வார்த்தைக்கு நாம் செவி கொடுக்க தயங்க கூடாது ...... ஏனெனில் தேவனுடைய வார்த்தைதான் நம்மை சீர்படுத்தும் ஸ்திரப் படுத்தும் பலப்படுத்தும் நிலை நிறுத்தும் ........... ஆகவே தேவன் நம்மில் வைத்த சித்தத்தை அவருடைய திட்டத்தை அவர் செய்து முடிப்பதற்கு நாம் தேவனின் சத்தத்திற்கு செவி கொடுக்க வேண்டும் .......... நாம் அநேக வார்த்தைகளை பேசுவதை விட தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுப்பதே நலம் .......... என் பிதாவின் சித்தத்தை செய்து முடிப்பதே எனக்கு போஜனமாய் இருக்கிறது என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்னது போல ......நாமும் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சித்தப்படியே வாழ்ந்து அவர் நாமத்தை மகிமைப்படுத்த முயற்சி செய்வோம்................ நமது ஆவியில் பலப்பட ஆத்துமாவை சீர்படுத்துவோம் வல்லமையும் மகத்துவம் உடைய தேவ சத்தத்திற்கு கீழ்ப்படிவோம் ....ஆமேன்
நமது ஆவிக்குரிய வாழ்க்கையை அனுதினமும் நாம் சீர்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் .... ஏனெனில் பிசாசானவன் எவனை விழுங்கலாமோ என்று வகை தேடி சுற்றி திரிகிறான் .... எனவே பாவ சந்தோஷங்களை உதறி பரிசுத்தத்தை பற்றி கொண்டு தேவனுக்கு பிரியமாய் வாழ நினைப்பதே மிகச் சிறந்த பக்தியாகும் ....... இப்படிப்பட்ட பக்தியே முக்திக்கான வழியாக கருதப்படுகிறது எனவே சத்தியத்தை தாகத்தோடு நீங்கள் கேளுங்கள் ......... சத்தியத்தை அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ... ஆமேன்
.
நமது ஆவி ஆத்மா சரீரத்தில் மட்டுமல்லாமல் நமது சபையிலும் எழுப்புதல் என்பது எப்படி வரவேண்டும்? மற்றும் எழுப்புதல் என்றால் என்ன...? எழுப்புதல் எங்கிருந்து ஆரம்பிக்கும் ? ...... எழுப்புதலை தருவது யார்....? எழுப்புதல் என்பது எதைக் குறிக்கிறது ?????....... இதுபோன்ற அநேக நிகழ்வுகளுக்கு வேதத்தின் அடிப்படையில் நமது அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் சத்தியத்தை விளக்கி நமக்கு தந்து உள்ளார்...... எனவே தேவனுடைய ராஜ்யத்தில் இருந்து எழுப்புதல் வர நம்மை நாமே விட்டுக் கொடுப்போம்..?? பரிசுத்த பாதையில் எட்டி நடப்போம் ...!
.
தேவனால் கணவனும் மனைவியாக இணைக்கப்பட்ட அனைவரும் கர்த்தருக்கு பிரியமாய் வாழ்ந்து கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்றுவதே முக்கிய நோக்கமாகும் ... மேலும் கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும்? பரிசுத்தமா எப்படி வாழ வேண்டும்? குடும்பத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் வேத வசனத்தை பிள்ளைகளுக்கு எப்படி போதிக்க வேண்டும் இது போன்ற பல கேள்விகளுக்கு பரிசுத்த வேதாகமத்தின் அடிப்படையில் நம் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் ஒளி கோப்பை பதிவிட்டுள்ளார் .... ஆகவே தேவனுக்கு பிரியமான தேவ ஜனங்களே நீங்கள் யாவரும் இந்த வார்த்தையை கேட்டு இதன் பிரகாரமாக நடந்து கொள்ள கர்த்தரை முன்னிட்டு உங்கள் இடத்தில் அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்.
பாவம் நிறைந்த உலகத்தில் பரிசுத்தமாய் வாழ ஆசைபடு.... யார் உண்மையாய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீ கர்த்தருக்கு பிரியமாய் வாழ்வதை கர்த்தர் கவனித்துக் கொண்டிருக்கிறார்... ஆகவே மனிதனை பார்க்காமல் மனம் மாறுதலை தந்த கர்த்தரை பார்த்து பரிசுத்த பாதையில் பயணம் செய்
தனது சுயபலத்தா அநேக காரியங்களை சமாளித்துக் கொண்டிருக்கிற நாம் தேவ பலத்தால் எப்படி வாழ்க்கையை ஜெய்ப்பது சமாளிப்பது என்பதை குறித்தும் ..... நமது சுய பலத்தால் இந்த உலகத்தோடு போராடினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைப் பற்றியும் ......... இதே உலகத்தை தேவன் தந்தருளும் பலத்தோடு நாம் மேற்கொண்டால் என்ன ஆகும் என்பதை குறித்தும் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் சத்தியத்தின் அடிப்படையில் நம்மோடு பகிர்ந்து உள்ளார் ........ சத்தியத்தை தெரிந்து கொண்ட நாம் சத்தியத்தையே நமது வளமாக கொண்டு இந்த உலகத்தை ஜெயிப்போம் தேவ ராஜ்ஜியம் சேர்வோம் ......!
loading
Comments