DiscoverSBS Tamil - SBS தமிழ்
SBS Tamil - SBS தமிழ்
Claim Ownership

SBS Tamil - SBS தமிழ்

Author: SBS

Subscribed: 1,786Played: 35,092
Share

Description

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
4231 Episodes
Reverse
2026 முதல் Pharmaceutical Benefits Scheme (PBS) சலுகை பெற்ற மருந்துகளை வாங்கும் போது நோயாளிகள் செலுத்தும் தொகை குறைந்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
சமீபத்திய கருத்துக்கணிப்புகளில், Pauline Hanson தலைமையில் இயங்கும் One Nation கட்சி Liberal–National Coalitionஐ விட அதிகமான மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளதாக Newspoll அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 21/01/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்தக்கோரி இலங்கையின் பல பகுதிகளிலும் பெற்றோர் ஆர்ப்பாட்டதிதில் ஈடுபட்டனர். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Going camping is an incredible way to experience Australia’s great outdoors whilst also taking a break from technology and daily routines. We unpack the benefits of camping, the preparation required, the equipment you should consider taking, and how to be a considerate camper. - கடற்கரையிலிருந்து பாலைவனப் பகுதிவரை, ஆஸ்திரேலியாவின் இயற்கை அழகை அனுபவிக்க camping சிறந்த வழியாகும். இது குறித்து ஆங்கிலத்தில் Phil Tucak எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
மேற்கு ஆஸ்திரேலியா பெர்த்தில் இந்த ஆண்டு மாம்பழங்கள் விளைச்சல் சாதனை அளவை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
ஆஸ்திரேலிய பில்லியனர்களின் செல்வம் கடந்த வருடம் அசாதாரண வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 20/01/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
ஆஸ்திரேலியாவில் பலர் அறியாமல் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான டாலர்களை மின்சார கட்டணமாக கூடுதலாக செலுத்தி வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
தேசிய நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை திட்டம் என்றால் என்ன? அதன் நோக்கம் மற்றும் இந்த பரிசோதனைக்கு யார் தகுதியானவர்கள்? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் சிட்னியில் குடும்ப மருத்துவராக பணியாற்றும் Dr ராஜேஷ் கண்ணன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
அண்மைக் காலமாக, நம் நாட்டில் கடும் வெப்பநிலை கொண்ட நாட்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உயர்ந்து வரும் வெப்பம் தணிய முன்பைவிட நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்வதும், அதனால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதும் நம்மால் உணர முடிகிறது. இதனுடன் சேர்ந்து, காட்டுத்தீ அபாயமும் கவலைக்கிடமான அளவில் உயர்ந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலைகளில், கடும் வெயிலும் காட்டுத்தீ அபாயமும் நிலவும் நாட்களில், நம் சொந்தங்களையும், சொத்துகளையும், செல்லப்பிராணிகளையும் எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த முக்கியமான தகவல்களை, தன்னார்வ தீயணைப்புப் படைவீரராகச் செயல்பட்டு வரும் கார்த்திக் தணிகைமணி அவர்களிடம் கேட்டறிகிறார் குலசேகரம் சஞ்சயன்.
மெல்பனில் கடந்த 12 மாதங்களில் வீட்டு வாடகை குறைந்துள்ளது என Domain வெளியிட்டுள்ள சமீபத்தைய அறிக்கை தெரிவிக்கிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 19/01/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கு; அல்பலா பல்கலைக்கழகத்தின் ரூ.140 கோடி சொத்து முடக்கம்; ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசிய சீமான்; தமிழகத்தில் பெருகி வரும் கஞ்சா கலாச்சாரம் - இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (10 – 17 ஜனவரி 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை மேலும் பரபரப்பாக்கும் நோக்கில், டென்னிஸ் ஆஸ்திரேலியா ரசிகர்களுக்காக 10 மில்லியன் டாலர் பரிசு போட்டியை அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி.
விக்டோரியா மாநிலத்தில் நடைபெறும் பொங்கல் விழா ஜனவரி மாதம் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் நடைபெறுகிறது. இருபத்தி ஏழு தமிழ் அமைப்புகள் இணைந்து மெல்பர்ன் பெருநகரில் நடத்தும் மாபெரும் பொங்கல் விழா குறித்து நம்முடன் கலந்துரையாடுகின்றனர் பொங்கல் விழா ஒருங்கிணைப்பாளர்கள் சத்யன், மது, கோபால், மற்றும் பிரதாப் ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல். நடைபெறும் நாள்: ஜனவரி 25 ஞாயிற்றுக்கிழமை, காலை 9 மணி & இடம்: Event Central, Caribbean Park, Scoresby, Victoria 3179. அதிக தகவலுக்கு: www.tamilfestival.org.au vanakkam@tamilfestival.org.au
ஆஸ்திரேலியாவில் கோடைக்காலம் தொடங்கியதிலிருந்து இதுவரை 33 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு நீரில் மூழ்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் Australian Water Safety Council, “Australian Water Safety Strategy 2030” என்ற திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 16/01/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
இலங்கையில் அதிபர் தலைமையில் யாழில் பொங்கல் விழா; திருகோணமலையில் சட்டத்தை மீறி புத்தர் சிலை அமைத்த விவகாரத்தில் நான்கு பௌத்த பிக்குகள் ஒன்பது பேருக்கு விளக்கமறியல் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
loading
Comments (3)

Yogi Yoganand

கையில் வளையம் மாட்டும் திட்டம் பலன் தரும்.

Apr 11th
Reply

Rajasekaran Lakshumanan

Tamil God Song's to be relayed

Sep 9th
Reply