Discover
Ramana Maharshi Guidance (Tamil)
Ramana Maharshi Guidance (Tamil)
Author: Vasundhara ~ வசுந்தரா
Subscribed: 0Played: 1Subscribe
Share
© Vasundhara ~ வசுந்தரா
Description
வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு மேம்படுகிறது. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். அது ஒருவருக்கு திருப்திகரமாக வாழ்ந்துக் கொண்டே தமது மெய்யான பேரின்ப ஆன்ம சொரூபத்தை அறிந்து அதிலேயே உய்ந்து இருப்பதற்கு வழிகாட்டுகிறது. அதோடு, தியானம், மூச்சுக் கட்டுப்பாடு, தன்னலமற்ற செயல்கள், மற்றும் பல வித வழிமுறைகள் அளிக்கிறார்.
89 Episodes
Reverse
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. "ரமண மகரிஷியுடன் நேருக்கு நேர்" என்பது பகவான் திரு ரமண மகரிஷியுடன் பக்தர்களுக்கு இருந்த அனுபவங்களாகும். இங்கு பேராசிரியர் சையத் ஹஃபீஸ் ரமணரைப் பற்றி பேசுகிறார் - Prof. Syed Hafiz expresses his experiences with Bhagavan Sri Ramana Maharshi. Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி விளக்குகிறார் : தியானம் செய்யும்போது சில சமயங்களில் எளிதாக இருக்கிறது, சில சமயம் முடியவேஇல்லை, இதை சமாளிப்பது எப்படி? இதயம் என்றால் என்ன? மரணத்திற்கு பிறகு ஜீவனுக்கு என்ன ஆகிறது? தியானம் என்றால் என்ன, செய்வது எப்படி? Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ஒரு பக்தருக்கு பின்வரும் சந்தேகம் எழுகிறது : "ஒருவர் தமது தவறான அகங்கார "நான்" எண்ணத்தை விட்டு விட்டுமெய்யான நிரந்தர பூரண சொரூப நிலையை உணர்ந்துக் கொண்டு விட்டால், பின் மற்றவர்களுக்காக எப்படி பிரார்த்திப்பது?" பகவான் ரமண மகரிஷி இதற்கு மிகவும்தெளிவாக விளக்கம் அளிக்கிறார். Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. இளமையில் பணம் சம்பாதிப்பதிலும் உடல் சார்ந்த இச்சைகளைப் பூர்த்தி செய்வதிலும் மட்டுமே கவனம் செலுத்தும்இளவயதினரால், ஆன்மீகத்தில் ஈடுபட்டு உண்மையான சந்தோஷத்தையும் மன அமைதியையும் நாடி மனதுள் விசாரித்து தேடி அறிவது நடைமுறையில் சாத்தியமா? மகரிஷியின் அறிவுரைகளுடன் விளக்கம் இங்கு அளிக்கப்படுகிறது. ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. தியானத்திலும் வாழ்க்கையிலும் இன்னல்களுக்கும் வலிகளுக்கும் காரணம் என்ன? அவற்றை வெல்வது எப்படி? அதற்குபயிற்சிகள் என்ன? எப்படி பயிற்சி செய்வது? ~ ரமண மகரிஷி விளக்கம் அளிக்கிறார். பகவானின் இனிய சொற்களைக் கேட்கும் போதே, மன உடல் இன்னல்கள் குறைந்துவிடுகின்றன. கடவுள் தான் இந்த விளைவை உண்டாக்க முடியும். Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த சிறந்த அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (3). Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. பிறரின் நலனை விரும்புவது நல்லது தான்; ஆனால் அதற்கு ஒரு வரம்பு உள்ளது. இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வீகசக்திகளை நாடுவது சரியில்லை. கஷ்டம் வரும்போது கடவுளிடம் சரணடைய வேண்டும்; அவரது உதவியை பணிவுடன் வேண்டிக் கொள்ள வேண்டும். ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~ AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (47 - 50) ~ 1) ஆன்மசுய விசாரணை சுயநலமா? அதை விட சுயநலமற்ற காரியங்கள் செய்வது மேலானதா? 2) எவ்வளவு முயற்சி செய்தாலும் "நான்" என்ற எண்ணத்தைக் கண்டுபிடிக்கவேமுடியவில்லை. உண்மையான "நான்" எப்படி அறிவது? 3) ஒருவர் எப்போது ஞானியாவார் என்று பகவான் சொல்வாரா? 4) பரபக்தி என்பதற்கு உதாரணம் என்ன? Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த சிறந்த அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (2). Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. இதயத்தைத் தொடும் பக்தியையும் அனுபவத்தில் உணர்ந்த ஆன்ம ஞானத்தையும் மழை போல் பொழியும் கவிதைவரிசைகளில் பகவான் திரு ரமண மகரிஷி தமது கருணையினால் அளித்து அருள் செய்கிறார். Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியிடமிருந்து ஒரு பக்தருக்குக் கிடைத்த பல அற்புத அறிவுரைகளை, நாம் ஒவ்வொருவரும் அவை நமக்கேகிடைத்தது என்று உணர்ந்து, அவற்றை பின்பற்றி சந்தோஷம் அடைய வேண்டும். பொய் மதத்தையும், பொய் சுவாமிகளையும் வெறுத்த ஒருவரை, ஒரு நொடியில் தமதுஅன்பினால் தமது காலடியில் நமஸ்கரிக்கச் செய்து, அவருக்கு வழிகாட்டிய உண்மையே உருவான பகவான் ரமணருடன், அந்த பக்தருக்கு இருந்த அனுபவங்கள், எல்லோருக்கும் மிகவும் நன்மையும் மன அமைதியும் அளிக்கும்; இதில் சந்தேகமே இல்லை. ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~ AUDIO/VIDEO BOOK ~ காணொலிபுத்தகம் ~ உரையாடல் (44 - 46) ~ பல விஷயங்களை மகரிஷி விளக்குகிறார். 1) ஆன்மீக பயிற்சிக்கு தனிமை அவசியமா? 2) தினசரி வாழ்வு மனச்சிதறலைஉண்டாக்குகிறது. பயிற்சி செய்ய முடியவில்லை. என்ன செய்வது? 3) உலக விவகாரங்கள் புரிந்துக் கொள்ள எளிதாக உள்ளது, ஆனால் ஆன்மீகம் கஷ்டமாக இருக்கிறது. 4) மகரிஷியுடன் இருப்பதென்றால் என்ன? 5) மனதைக் கட்டுப்படுத்துவதும் மனதை ஒருமுக கவனத்தில் ஆழ்த்துவதும் எப்படி? 6) உலக வாழ்வில் தொழில் செய்து சம்பளம்சம்பாதிப்பதையும் ஆன்மீக பயிற்சிகளையும் சமரசப் படுத்தி வாழ்வது எப்படி? ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ மெய்மை, சொரூபம், உள்ளமை-விழிப்புணர்வு-ஆனந்தம் என்னும் "சச்சிதானந்தம்" என்றால் என்ன? இதைஅறிந்து உணர்வது எப்படி?இத்தகைய அற்புதமான, மனதிற்கு இதமான அறிவுரைகளைக் கேட்கும் போது, பகவான் ரமணர் சச்சிதானந்தமே தான் என்பது திடமாகபுரிகிறது. ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
வழங்குவது : வசுந்தரா. "எங்கு இருந்தாலும், மனதில் அண்ணாமலையை நினைத்தாலும் முக்தி கிடைக்கும்." துதிப்பாடல் தீவினைகளை அகற்றும் வழி காட்டுகிறது. பகவான் திரு ரமண மகரிஷி மிக்க உயர்வான பரப்பிரம்மமே ஆனதால், அவரை மனதால் நினைத்தாலும் முக்தி கிடைக்கும்.. ரமண மகரிஷி துதிக்க வேண்டியஅவசியமில்லை. ஆனாலும், அன்பினாலும், கருணையினாலும், தீவிரமான பக்தர்களுக்கு வழிகாட்டுவதற்காக இத்தகைய துதிப்பாடல்களை வழங்குகிறார். உண்மையானபக்தியும், துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான தீவிர ஆர்வமும் எப்படி இருக்க வேண்டும் என்று பக்தர்களுக்கு காண்பிக்கிறார். ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~ AUDIO/VIDEO BOOK ~ காணொலிபுத்தகம் ~ உரையாடல் (43) ~ வாழ்வின் இன்னல்களிலிருந்து மீள்வது எப்படி? மகரிஷி விளக்குகிறார். இன்னும் பல உபயோகமான விஷயங்களைப் பற்றி சிலஅறிவாளர்களின் கேள்விகளுக்கு மகரிஷி பதில் அளிக்கிறார். ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. சில நொடிகளுக்கே நிலைத்து பின் துன்பத்தில் முடியும் இன்பத்தால் என்ன பயன்? உண்மையான சந்தோஷமானால், அதுநிலைத்திருக்க வேண்டும். எந்த இன்னல்களாலும் அது பாதிக்கப்படக் கூடாது. அந்த நிலையான சந்தோஷத்தைப் பெறுவது எப்படி? இதைப் பற்றிய அற்புதஅறிவுரைகளை ரமண மகரிஷி நேரடியாக விளக்குகிறார். ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~ AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (42) ~ ஆன்மவிழிப்புணர்வின் மின்னல் போன்ற ஒளிகளை பெறுவது எப்படி? பெறுவதோடு கூட, அதை வைத்துக் கொள்வது, நீடிக்கச் செய்வது, எப்படி? இந்த அனுபவங்களின் போதுசெய்யும் பயிற்சிக்கு சாதாரண வாழ்விலிருந்து பின்வாங்கவேண்டுமா? ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
வழங்குவது : வசுந்தரா. பகவான் திரு ரமண மகரிஷி ~ உள்ளது நாற்பது (Narrated) ~ பரம்பொருளின் மீது, பரமாத்மனின் மீது, சச்சிதானந்த மயமான சொரூப ஆன்மாவின் மீது, ரமணரின் நாற்பது வரிசைகள். தான் சொரூப ஆன்மாவே தான் என்று உணர மிகச் சிறந்த, நடைமுறை அறிவுரைகளை ரமண மகரிஷி வழங்குகிறார். ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியின் அறிவுரைகள் ~ மனதைக் கட்டுப்படுத்த, மனதுடன் நயந்து பேசி அதை இணங்கச் செய்ய வேண்டும். Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (41) ~ சொர்க்கம் நரகம் உள்ளதா? இன்னும் பலப் பல முக்கிய விஷயங்கள் உள்ளன. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil























