DiscoverFor All Our Kids Podcast
For All Our Kids Podcast
Claim Ownership

For All Our Kids Podcast

Author: FOR ALL OUR KIDS

Subscribed: 8Played: 234
Share

Description

We cover adoption, early childhood education, and stories for children in English and Tamil.

391 Episodes
Reverse
இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கப் போகிறது திருக்குறளின் 46வது அதிகாரமான் சிற்றினஞ்சேராமை. இதில் சிற்றினம் இதன் பொருள் நல்ல குணங்கள் இல்லாமல், தீய வழக்கங்கள் உடையவர்களைக் குறிக்கும். நாம் யாரிடம் நட்பாக இருக்கிறோமோ அவரின் குணநலன்கள் நம்முடைய எண்ணங்களைப் பாதிக்கும். தீயவர்களுடைய நட்பு துன்பங்களைத் தரும். இந்த அதிகாரம் தீய குணங்களை உடைய சிற்றின மக்களுடன் சேராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.
இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கப் போகிறது திருக்குறளின் 46வது அதிகாரமான சிற்றினஞ்சேராமை. இதில் சிற்றினம் இதன் பொருள் நல்ல குணங்கள் இல்லாமல், தீய வழக்கங்கள் உடையவர்களைக் குறிக்கும். நாம் யாரிடம் நட்பாக இருக்கிறோமோ அவரின் குணநலன்கள் நம்முடைய எண்ணங்களைப் பாதிக்கும். அவர்களுடைய நட்பு துன்பங்களைத் தரும். இந்த அதிகாரம் தீய குணங்களை உடைய சிற்றின மக்களுடன் சேராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.
திருக்குறளின் பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் பார்ப்போம். வயதில் பெரியவர்களுக்கு வாழ்க்கையில் அனுபவம் அதிகமாக இருக்கும். அவர்கள் அறிவிலும், சிந்தித்து செயல்படுவதிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். தவறுகள் நிகழாவண்ணம் செயல்படுவார்கள். இந்த அதிகாரம் பெரியவர்களின் துணையை நாடுவதால் வரும் பயனையும் அப்படி துணையை நாடாமல் இருப்பதால் வரும் குற்றத்தையும் எடுத்துக் கூறுகிறது.
In this episode, Anu Verma, a trauma‑informed coach, explores how parents can respect their child’s choices while setting steady and clear expectations, giving children the confidence they need to advocate for themselves.
இந்தப் பகுதியில் நாம் பாரக்கப்போவது திருக்குறளின் 45வது அதிகாரமான பெரியாரைத் துணைக்கோடல். வயதில் பெரியவர்களுக்கு வாழ்க்கையில் அனுபவம் அதிகமாக இருக்கும். அவர்கள் அறிவிலும், சிந்தித்து செயல்படுவதிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். தவறுகள் நிகழாவண்ணம் செயல்படுவார்கள். இந்த அதிகாரம் பெரியவர்களின் துணையை நாடுவதால் வரும் பயனையும், அப்படி துணையை நாடாமல் இருப்பதால் வரும் குற்றத்தையும் எடுத்துக் கூறுகிறது.
திருக்குறளின் குற்றங்கடிதல் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பாரத்தோம். குற்றங்கடிதல் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் பாரக்கப்போகிறோம் குற்றங்கடிதல் என்றால் நம்மிடம் உள்ள குறைகளை அறிந்து அவைகளை நீக்கிக் கொள்வதாகும். இந்த அதிகாரம் ஒரு தலைவனிடம் உள்ள கோபம், பொறாமை, கர்வம், பிறரக்கு கொடுத்து உதவாமல் பொருள் சேர்ப்பது இப்படி உள்ள தீய குணங்களை நீக்கச் சொல்கிறது. இது தலைவனுக்கு மட்டுமில்லாமல் எல்லோருக்கும் பொருந்தும்.
In today's episode, Anagha Nair from the Centre for Teaching Excellence discusses the Centre’s program on teaching perspectives to seventh graders. When students learn to see a situation through someone else’s eyes, they recognize that people can experience the same event differently based on their background, feelings, and needs. They also become more aware of their own emotions, develop empathy, and think critically as they respond during conflicts.
திருக்குறளின் 44வது அதிகாரமான குற்றங்கடிதலிலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்தப் பகுதியில் பாரக்கப்போகிறோம். குற்றங்கடிதல் என்றால் நம்மிடம் உள்ள குறைகளை அறிந்து அவைகளை நீக்கிக் கொள்வதாகும். இந்த அதிகாரம் ஒரு தலைவனிடம் உள்ள கோபம், பொறாமை, கர்வம், பிறர்க்கு கொடுத்து உதவாமல் பொருள் சேர்ப்பது இப்படி உள்ள தீய குணங்களை நீக்கச் சொல்கிறது. இது தலைவனுக்கு மட்டுமில்லாமல் எல்லோருக்கும் பொருந்தும்.
Ashish John, Director, Centre for Teacher Excellence, discusses how designing instruction with student choice in mind empowers students to develop ownership, confidence, and lifelong learning habits.
இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் அறிவுடைமை அதிகாரத்தின் ஐந்திலிருந்து பத்து வரை உள்ள குறள்கள். இந்த அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பாரத்தோம். நாம் வாழ்க்கையில் அனுபவித்து தெரிந்து கொள்வதை சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு அறிவோடு பயன்படுத்த வேண்டும். கல்வி அறிவும், கேள்வி அறிவும் மட்டுமில்லாமல் உலக அறிவும் வேண்டும். இந்த அதிகாரம் அறிவின் பயனையும், அறிவுடையவர்களின் பண்பையும் கூறுகிறது.
Anuja Katrak, speech-language pathologist and founder of SPARC, Mumbai, discusses language development in late talkers, the impact on the child's reading abilities, and the importance of seeking professional guidance. Anuja also addresses the quandary that parents in urban India face regarding the language of intervention: should they provide services in their mother tongue, the state language, or English, as it is the medium of instruction?
இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் 43வநு அதிகாரமான அறிவுடைமை. இதற்கு முன் திருக்குறளின் 42வது அதிகாரங்களைப் பொருளோடு பாரத்தோம். நாம் வாழ்க்கையில் அனுபவித்து தெரிந்து கொள்வதை சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு அறிவோடு பயன்படுத்த வேண்டும். கல்வி அறிவும், கேள்வி அறிவும் மட்டுமில்லாமல் உலக அறிவும் வேண்டும். இந்த அதிகாரம் அறிவின் பயனையும் அறிவுடையவர்களின் பண்பையும் கூறுகிறது.
இதற்கு முந்தைய பகுதியில் திருக்குறளின் கேள்வி அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள். கேள்வி அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில். பார்க்கப்போகிறோம். கேள்வி என்பதற்குப் பொருள் நாம் அறியாத ஒன்றைத் தெரிந்து கொள்வது, செவி வழியாகக் கற்றறிந்தவரிடம் கேட்டு அறிந்து கொள்வது என்று சொல்லலாம். பல நூல்களைக் கற்று அறிவது போல் செவி வழியாகக் கேட்டும் அறிந்து கொள்ளலாம்.
திருக்குறளின் 42வது அதிகாரமான கேள்வியிலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம். கேள்வி என்பதற்குப் பொருள் நாம் அறியாத ஒன்றைத் தெரிந்து கொள்வது, செவி வழியாகக் கற்றறிந்தவரிடம் கேட்டு அறிந்து கொள்வது என்று சொல்லலாம். பல நூல்களைக் கற்று அறிவது போல் செவி வழியாகக் கேட்டும் அறிந்து கொள்ளலாம்.
கல்லாமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் போன பகுதியில் பார்த்தோம். அடுத்து உள்ள ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கலாம். இந்த அதிகாரம் கல்லாமையினால் வரும் துன்பங்களைப் பற்றிக் கூறுகிறது. ஒரு நாட்டின் சமூகப் பிரச்சனைகள், பொருளாதாரம், வளர்ச்சி போன்றவை மக்களின் கல்வித் திறமையைப் பொறுத்து இருக்கிறது.
இந்த பகுதியில் இடம் பெறுவது திருக்குறளின் 41வது அதிகாரமான கல்லாமை. இதற்கு முந்தைய இரண்டு பகுதிகளில் கல்வியின் சிறப்பைப் பற்றிப் பார்த்தோம். ஒரு நாட்டின் சமூகப் பிரச்சனைகள், பொருளாதாரம், வளர்ச்சி போன்றவை மக்களின் கல்வித் திறமையைப் பொறுத்து இருக்கிறது. இந்த அதிகாரம் கல்லாமையினால் வரும் துன்பங்களைப் பற்றிக் கூறுகிறது.
இதற்கு முந்தைய பகுதியில் திருக்குறளின் 40வது அதிகாரமான கல்வியிலிருந்து முதல் ஐந்து குறள்களை பார்த்தோம். இந்த அதிகாரத்தின் மீதி உள்ள ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம். சமுதாய வளர்ச்சிக்குக் கல்வி மிக இன்றியமையாததாகும். கல்வி அறிவை வளர்க்கும். கற்ற கல்வி அழியாதது. கல்விச் செல்வம் இருந்தால் உலகில் எந்த பகுதியிலும் நம்பிக்கையோடு வாழமுடியும். இந்த அதிகாரம் கல்வியின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது.
இந்த பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் 40வது அதிகாரமான கல்வியிலிருந்து முதல் ஐந்து குறள்கள். சமுதாய வளர்ச்சிக்குக் கல்வி மிக இன்றியமையாததாகும். கல்வி அறிவை வளர்க்கும். கற்ற கல்வி அழியாதது. கல்விச் செல்வம் இருந்தால் உலகில் எந்த பகுதியிலும் நம்பிக்கையோடு வாழமுடியும். இந்த அதிகாரம் கல்வியின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது.
இந்த பகுதியில் இறைமாட்சி அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களைப் பார்ப்போம். இறை என்ற சொல்லுக்குக் கடவுள் என்ற பொருளும் உண்டு. அரசாளுபவன் என்ற பொருளும் உண்டு. எப்படி இறைவன் படைத்தவற்றைக் காப்பாற்றுகிறானோ அரசனும் தன் நாட்டு மக்களைக் காப்பவனாகிறான். இந்த அதிகாரம் அரசனுக்குரிய குணங்கள், கடைமை, திறமைகள் பற்றிச் சொல்கிறது.
இதுவரை திருக்குறளின் அறத்துப்பாலில் இருத்து 38 அதிகாரங்களைப் பொருளோடு பார்த்தோம். இந்த பகுதியிலிருந்து பொருட்பால் ஆரம்பமாகிறது. திருக்குறளின் 39வது அதிகாரம் இறைமாட்சி. இறை என்ற சொல்லுக்குக் கடவுள் என்ற பொருளும் உண்டு. அரசாளுபவன் என்ற பொருளும் உண்டு. எப்படி இறைவன் படைத்தவர்களைக் காப்பாற்றுகிறானோ அரசனும் தன் நாட்டு மக்களைக் காப்பவனாகிறான். இந்த அதிகாரம் அரசனுக்குரிய குணங்கள், கடமைகள், திறமைகள் பற்றிச் சொல்கிறது.
loading
Comments (1)

Mike Horan

My parents and teachers didn't do much to develop my writing skills, so now writing the shortest text is a difficult task for me. Nevertheless, I managed to get into college and here I get a lot of writing assignments. I decided to make my life easier and started using professional essay help at https://essayshark.com/ . I am very satisfied with the professionalism of these writers, because they always complete the assignments perfectly and do it on time.

Nov 10th
Reply