Cupidbuddha

Cupidbuddha's Podcast

50 ஆயிரம் பேர் தவிர்த்த +2

கல்வித்துறையில் முன்னேறிய மாநிலமான தமிழ்நாடு!

03-15
04:14

KARL MARX

Karl Marx a perspective (adaptation from a tamil BBC article )

03-14
04:09

ஒற்றைத் தலைமையும் உணமைத் தொண்டனும்

இது வாரிசு கட்சியல்ல! இக்கட்சியும் அதன் தொண்டர்களும் கட்சிக்கான தலைமையை தன்னெழுச்சியாக தேர்ந்தெடுப்பார்கள்- ஜெ.ஜெயலலிதா

06-25
06:40

விக்ரம் மார்க்கெட்டிங் மந்திரம் - VIKRAM - A New Movie Marketing Mantra

கண்டெண்ட் கிரியேசன் என்கின்ற திரைக்கதை உருவாக்கம் எவ்வளவு முக்கியமோ அதைப் போல் அல்லது அதற்கும் மேல் முக்கியம் மார்க்கெட்டிங் strategeyil content marketting, content distribution, platforms அதாவது மார்க்கெட்டிங்கிற்காக தயாரிக்கப்ப்டும் போஸ்டர்கள், டீசர்கள், மீம்ஸ்கள், ட்ரோல் வீடியோக்கள் போன்றவற்றை எந்த எந்த தளங்களில் பதிவு செய்வது, அதன் டார்கெட்டட் ஆடியன்ஸ் யார், அவர்கள் எந்த நேரத்தில் ஆக்டிவாக இருப்பார்கள், அவர்களுக்கு எது எப்படி எவ்வளவு கொடுத்தால் பிடிக்கும் போன்றவற்றை மிக டீட்டெய்லிங்காக அனலைஸ் செய்து, அதை எவ்வளவு என்கேஜிங்காக ஃபோகஸ்ட் குரூப் டார்கெட்டட் ஆடியன்ஸ், இன்ஃப்லுயன்சர்ஸ், போன்றவர்கள் மூலமாக அளவுக்கு மிகாமலும் குறையாமலும் கொடுத்தனர்.

06-24
05:37

தில்லானா மோகனாம்பாளும் திராவிட சித்தாந்தமும்!!!

ஏ.பி.நாகராஜனின் புராணப்படங்களில் எவ்வாறு பார்ப்பனியம் சுக்குநூறாக்கப்பட்டிருக்கிறது என்பதையும், தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் மூலமாக ஆரிய திராவிட சித்தாந்தங்களை எவ்வளவு எளிதாக புரிய வைக்க முடியும் என்பதற்கான ஒரு சிறு பாட்காஸ்ட். கருத்து நமதல்ல, குரல் மட்டுமே

04-07
05:28

கலவிப்பெருங்கடல்

உலப்பில் இன்பம்: நீலப்பெருங்கடலின் நீலத்தைப் பூச்சாக்கி உன் கண்களில் மய்யோடு என்னையும் பூசிக்கொண்டாய்...... எனதன்பை உனது முதுகுத்தண்டிலேற்றிய அம்பறாத்தூணியில் சேமித்து வைத்து, உன் மோகமுள்ளேற்றுகிறாய்!! நிலவின் தழல் எறிசுடராய் ஏறி, இறங்கி, ஓடித்திமிறி என் ரத்த நாளம் ஒவ்வொன்றிலும் தாவிக்குதித்துக் குலவியிடுகிறாய்.... துடிக்கும் எனது ஸ்வாசமாய் வெடிக்கும் என் இதயமாய் இடம் மாறிய உனதன்பு, என் நரம்பில் தீயாய்ப் பரவித்தகிக்கும் வேளையிலும், உருகும் பனியாய் என் இதயம் உருகித்திளைக்கும் உன் உயிரினுள்! உன் கண்தாமரை பொய்கையில் தடந்தெரியாமல் ஆழமுந்தெரியாமல் வழி தவறிய மீனாய் விழுந்து துடிக்கின்றேன். கனவுகளின் இறகுகளை அன்பின் அலைகளோடு கோர்த்து காதலைப் பூவாய்த் தொடுத்து, காமத்தை உன் காதுவளையத்திலும் கழுத்து மேட்டிலும் உதட்டுப் பிரிவிலும் நாபிக்கமலத்திலும் நட்டு வைத்து பூக்கின்றேன். காதல் வந்தால் கண் சிமிட்டு! கலவி கொள்ளலாமெனில் பொறு! ஒரு மிடறு உன்னைக் குடித்துவிட்டு வருகிறேன். picture courtesy : @katha_nandi

12-04
02:07

Jai Bheem

This episode of CupidBuddha speaks about tamil movie Jaibheem

11-08
07:21

SATYAJIT RAY - Ray - a feeler!

this episode is about the webseries in NetFlix "RAY" - a tribute to the filmaker of the century on his centenary. 4 short stories of Ray to the digital generation!

06-30
05:28

Digital Media Political Propaganda / Campaigns மெய்நிகர் அரசியல் பரப்புரைச் சித்தாந்தம்!!

டிஜிட்டல் மீன்களை சமூக வலை தளங்களில் பிடிக்க முடியும் என்று நம்புகின்ற கார்ப்பொரேட் கம்பெனிகள் கட்சிகளை ஒரு நிறுவனமாகவும் அதன் தலைவர்களை ஒரு ப்ராடக்டாகவும் மாற்றி சோஷியல் மீடியாவில் விற்கத்தொடங்கியுள்ள ஒரு சூழலில் இது ஒரு வகையான "கொரில்லா யுத்த முயற்சி" என்று கணித்து 2016 எழுதிய ஒரு கட்டுரையின் குரலுரை இது! மெய்யுலகிற்கும் மெய்நிகர் உலகிற்கும் அடிக்கடி கூடுவிட்டு கூடு பாய்ந்து கொண்டிருக்கும் நவீன டிஜிட்டல் சித்தர்கள் என்று சொல்கிறார் குரலுரையாளர்.

06-29
11:36

Khusboo & Federalism

மாநில சுயாட்சி பற்றி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு திடீர் ஞானம் வந்துச்சு என ரொம்ப நக்கலா குஷ்பு அவர்கள் கேட்டு இருக்காங்க! அவுங்க திமுக கொள்கை பரப்பு செயலாளரா கொஞ்ச நாள் இருந்தாங்க.

06-24
10:57

The Gibberish S:1 E: 24 Who The Fish You want to become?

நீங்கள் யாராக மாற முயற்சி செய்கிறீர்கள்….. ?

06-22
03:30

The Gibberish S:1 E: 23 The YoGa day!

Cupid buddha talks about what is yoga and who is the real Yogi. And also slight hint about fraudster babas yogis and sanghees

06-21
19:48

The Gibberish S:1 E:22 நீட் தேர்வு குறித்து ஒரு பார்வை

நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு -ஒரு பார்வை!!!! (தேசிய அளவிலான தகுதி அறி நுழைவுத்தேர்வு) (National Eligibility Cum Entrance Test - NEET) "நீட் மருத்துவ நுழைவு தேர்வு மசோதா" அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது!!!! இதன் மூலம் இந்தியா முழுமைக்கும் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்க்கு ஒரே பொதுவான நுழைவு தேர்வு நடைபெறும். எதற்க்காக NEET ??? 1,மருத்துவ கல்லூரி சேர்க்கையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க வேண்டும், 2,கட்டாய நன்கொடையை ஒழிக்க வேண்டும், 3,தகுதி (Merit) அடிப்படையில் மாணவர் சேர்க்கையை அமைக்க வேண்டும், 4,மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்காக, ஏராளமான நுழைவுத்தேர்வுகளை எழுதும் கொடுமையிலிருந்து மாணவர்களை விடுவிக்க வேண்டும் – இந்தக் காரணங்களைக் கூறியே ‘நீட்’ நுழைவுத்தேர்வை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. மேலோட்டமாக இதை பார்த்தால் மிகச்சரியானதொரு முடிவாக இருக்கும், ஆனால் இதில் இருக்கும் உள்ளீடுகளைப்பார்த்தால் மிக நுண்ணிய அரசியல் சதி வலை பின்னப்பட்டிருப்பதை நாம் அறியலாம். தமிழ்நாட்டில் அமையப்பெற்றிருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் MBBS ல் 85% மும் ,MD படிப்பில் 50% மும் நுழைவுத் தேர்வுகள் ஏதும் இல்லாமலே மாநில அரசின் +2 மதிப்பெண் அடிப்படையில் நம் தமிழக மாணவர்களுக்கே கிடைக்கும்படியான ஒரு எளிதான தேர்வு முறையை தமிழகத்தில் அமல்படுத்தியுள்ளார்கள். இதன் மூலம், ஏறக்குறைய தமிழகத்தில் இருக்கும் 3000 மருத்துவ கல்லூரி இடங்களின் 2500 இடங்களுக்கு மேல் நம் தமிழ்நாட்டு குழந்தைகளுக்கே கிடைத்துக் கொண்டிருந்தது, அதாவது 260 மாணவர்களில் ஒருவர் மருத்துவ படிப்பை பெற முடியும். NEET தேர்வு முறையால் தமிழ்நாட்டிற்க்கும் தமிழக மாணாக்கர்களுக்கு ஏற்படும் பாதிப்பு!!! * குறையும் வாய்ப்புகள்:- ஆனால் NEET என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின், தமிழகத்தின் ஒரு மாணவன்/மாணவி ஒரு மருத்துவ கல்லூரி இடத்திற்க்காக இந்திய முழுவதிலிருக்கும் ஏறத்தாழ 3000 மாணவர்களுடன் போட்டியிட வேண்டும். * போட்டித்தேர்வா??? தகுதி அறியும் தேர்வா??? நீட்’ நுழைவுத்தேர்வில் ஒரு குறிப்பிட்ட ”குறைந்தபட்ச” மதிப்பெண்ணை பெற்றால்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்கே தகுதி பெற முடியும். ஒரு போட்டித்தேர்வை (Competitive Examination), தகுதி அறியும் தேர்வாகவும் (Qualifing Examination) மாற்றுவது சமூக நீதியையும், இடஒதுக்கீட்டையும் பாதிக்கும். * மாநில கல்வித்திட்டத்தின் கேள்விக்குறி:- மத்தியக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்த நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுவதால், தமிழ்நாடு கல்வி வாரியம் மூலம் படித்தவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும். * அரசு மருத்துவமனைகளில் போதிய முதுநிலை மருத்துவர்கள் இல்லாத நிலை ‘நீட்’ நுழைவுத்தேர்வை முதுநிலை மருத்துவக் கல்வியில் திணித்தால், அரசு மருத்துவர்கள் பாதிக்கப்படுவர். தொடர்ந்து மக்களுக்கு இரவு பகலாக சேவை செய்யும் அவர்களால், ‘நீட்’ தேர்வில் நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச மதிப்பெண்ணை பெற முடியாமல் போகலாம். இதன் காரணமாக அரசு மருத்துவர்கள் முதுநிலை மருத்துவக் கல்வி பயில்வது குறைந்து விடும். இதனால் அரசு மருத்துவமனைகளில் போதிய முதுநிலை மருத்துவர்கள் இல்லாத நிலை ஏற்படும். இது அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள ஏழை எளிய நோயாளிகளைப் பாதிக்கும். இந்த மருத்துவ நுழைவு தேர்வு AIIMS, ஜிப்மர் போன்ற மத்திய அரசின் மருத்துவ மனைகளுக்கு கிடையாது,தமிழகத்தில் AIIMS மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகள் இல்லை!!! ஜிப்மரில் உள்ள 150 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு 1.35 லட்சம் மாணவர்களும், 3085 அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு 6.3 லட்சம் மாணவர்களும் , எய்ம்ஸ் – மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 682 இடங்களுக்கு 80 ஆயிரம் மாணவர்களும் கடந்த ஆண்டு போட்டித்தேர்வு எழுதினர் டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் நமது தமிழக மாணவர்கள் 1995முதல் 2012 வரை வெறும் 6 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.இது மிகவும்கவலைக்குறிய ஒரு தகவலாகவே நாம் பார்க்க வேண்டும். மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை முறைகேடுகளைத் தடுக்கவே நீட் என மத்திய அரசு கூறிக்கொள்கிறது. ஆனால்,முறைகேடுகளை வளர்க்கும் வகையில் அண்மையில் மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை இந்திய மருத்துவக் கழகத்தின் விதிமுறைகளில் மாற்றம் செய்ய வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் மத்திய அரசு,மாநில அரசுகள், சொசைட்டி அல்லது டிரஸ்ட் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற அமைப்புகள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளை தொடங்கிட அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட , தனியார் கம்பெனிகளும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கிட வழிவகுக்கும் அறிவிக்கை 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

06-21
12:42

The Gibberish S:1 E: 21 The Translators

எதாவது ஒரு புது மொபைல் ஆப் வந்துட்டா போதும் நம்ம பயலுகலுக்கு…… உடனே அதுக்கு தமிழ்ல என்ன பேரு வைக்கலாம்னு சின்ராசு மாதிரி தமிழார்வளர்கள் ஓடி வந்துடுவானுங்க….. அவனுங்களுக்கான ஒரு டிகாக்சன் தூக்கலா போட்டகாஸ்ட் சாரி போட்காஸ்ட்

06-15
11:08

The Gibberish S:1 E:20 First Generation Entrepreneur!!

நானும் சுய தொழில் செய்கின்றேன் அதுவும் தனியாக பெற்றவர்களோ அல்லது மற்றவர்களின் எந்த வித பண உதவியோ அல்லது பின் புலமோ இல்லாது சுய தொழில் செய்கின்றேன் என்ற ஒரு நம்பிக்கையில் சுய தொழில் செய்யலாம் என எத்தனிக்கும் அனைவருக்கும் எனது புரிதலையும் அறிதலையும் பதிகிறேன்.........

06-12
06:35

The Gibberish S:1 E: 19 The rainy day

மழை தினங்கள்!!!! என் நினைவில் நனையும் மழை தினங்கள் ஏராளம்!! சாளரத்தின் வழி சாரல்களை உரசியபடி உறிஞ்சி குடித்த தேநீர் தினங்கள்!!! உயிர் நனைய மழை நனைந்து பின் உயிர் ஒழுகிய ஜலதோஷ தினங்கள்!!! தூறல் தானே என எண்ணி வெளியே செல்ல..... நீரில் கண் தெரியாது.... சாலை என நினைத்து சாக்கடையில் விழுந்த பய தினங்கள்!!! தோழியோடு முதல தினம் கடல் காண போக..... என்னையும் அவளையும் இணைத்த காதல் தினங்கள்!!! இப்படி எத்தனையோ மழை தினங்கள் மனதில் மலர்ந்தாலும், என்னை மழை போல கரைய வைத்த மழை தினம்..... அன்றொருநாள் சாலையின் சகதியின் ஓரத்தில் மழையில் ஒதுங்கி உறங்கிய சிறுவனை கேட்டேன்!! சோகம் இல்லையா தம்பி.......??? அவன் சொன்னது ”வார்த்தை” அல்ல ”வாழ்க்கை”!!! "நாளைக்கு காலைல தான் மழை நின்னு போயடும்ள அண்ணே".....

06-09
01:08

The Gibberish: S:1 E:18 The secret swamiG!!! யார் இந்த ஜக்கி வாசுதேவ்?

ஆன்மிக குருக்கள், யோக சொல்லிக்கொடுக்கும் இன்ஸ்டண்ட் அங்கிள் மற்றும் ஆண்டிக்கள் , ஆழ்நிலை தியானம் சொல்லிக்கொடுக்கும் குண்டலினி எழுப்பிவோர்கள் என்று பல போலி சாமியார்கள், குருமார்கள், என்கின்ற போர்வையில் சுற்றி வருகின்றனர். இவர்களைப் பயன்படுத்தி மதம் வளர்க்கும் பார்ப்பனியக் கூட்டம் இவர்களை மீண்டும் கோயிலுக்கு வெளியேயே நிப்பாட்டி வைக்கும். குண்டலினி எழும்பினாலும் நீ அந்த குதம்பனைப் பக்கத்தில் தரிசிக்க முடியாது! ஆரியச்சதி!

06-08
03:13

The Gibberish S:1 E:17 கடவுள் எங்கே இருக்கிறார்?

குரங்கிலிருந்து மனிதன் பிறக்க முடியும் என்கின்ற பொழுது மனிதனில் இருந்து கடவுள் பிறக்க வாய்ப்பு இருக்கின்றது.

06-07
09:37

மாநில சுயாட்சி

இந்திய ஒன்றியம் அதாவது United States Of India

06-06
10:31

World Environment Day -2021 Restoration of Eco System

இன்று உலக சுற்றுச்சூழல் தினம். அப்படின்னு சொன்ன உடனேயே நெறைய பேரு உடனே ரெண்டு வெதையத் தூக்கிட்டு 4 செடிய கையில புடிச்சுட்டு மரம் நடுவோம்னு கெளம்பிடுவானுங்க... மரம் நடுவது நன்மை தரும்தான் இல்லை என்று இல்லை. பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைக் காக்க உதவும் என மரங்கள் பல பலனை தரும். ஆனால் ஒரு இடத்திற்கு தகுந்தாற்போல ஒரு மரத்தை நடவில்லை என்றால் அதுவே தவறாக முடிந்துவிடும் என்கின்றனர் லண்டனில் உள்ள க்யூ தாவரவியல் பூங்காவை சேர்ந்த நிபுணர்கள். நமது பழைய தமிழ் இலக்கியங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகை நிலங்களை வகுத்து ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய மரங்கள், பறவைகள் போன்றவற்றையெல்லாம் பேசுகிறது. இன்று அந்த நிலப் பகுப்புகளும் அவற்றிற்குரிய விலங்குகளும் பறவைகளும் எங்க இருக்குன்னு யாருக்கும் தெரியாது ஆனால் உலக சுற்றுச்சூழல் பத்தி எல்லாம் நாம் பேசுவோம். நிலாவில் போயி கால் வைத்த மனிதன், தன்னோட வீட்டுக்கு வெளியே கால் வைக்கத் தயங்கும்நிலை உருவாகிவிட்டதை இப்போது உலகெங்கிலும் பார்க்கிறோம். வனங்களைக் காப்பாற்றத் தவறிவிட்டோம். புகை மண்டலத்தால் இந்த உலகம் முழுவதும் மாசுபடச் செய்கிறோம். நிலம், நீர், காற்று போன்ற இயற்கை வளங்கள் பழுதுபட்டுள்ளன. வனங்களில் மரங்கள் வரைமுறையே இல்லாமல் வெட்டித் தள்ளப்படுகின்றன. கானக விலங்குகள் வாழ இடமின்றித்தத்தளிக்கின்றன. நதிகளில் மணல் கொள்ளை. தொழிற்சாலைகளிலிருந்தும் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை காற்றில் கலந்து சுற்றுச்சூழல் நாள்தோறும் நாசமாக்கப்படும் அவலம். இதனால் இயற்கைச் சமநிலை மாறுபடுகிறது. பருவ காலங்கள் தவறுகின்றன. கடலில் ஆழிப் பேரலை எழுகிறது. நிலநடுக்கம் உருவாகிறது. மனித சமுதாயத்தின் நலன்கருதி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தோட்டம் இப்போது உலகெங்கும் முன்வைக்கப்படுகிறது. காடும் காடுசார்ந்த இடமும் வயலும் வயல்சார்ந்த இடமுமெல்லாம் மிகவும் குறுகி விட்டது என்று சொல்லலாம். பால்கனி தோட்டங்கள் க்ரோட்டன்ஸ் செடிகள், போன்சாய் மரங்கள் என்று ஃபேஷனுக்காக போட்டோ எடுத்து போட்டோஷாப் செஞ்சுட்டு இண்ஸ்டாகிராமில் சுடச்சுட ஒரு போஸ்ட் போட்றனும் நமக்கு. சிங்கப்பூரில் இருக்கும் பொழுது சட்டத்துக்கும் அபராதத்தொகைக்கும் பயந்துட்டு ஒரு சின்ன பேப்பரைத் தூக்கி எறியத்தயங்கிய நான் இந்தியா வந்த உடனேயே அப்பாடான்னு சுதந்திரக்காற்றை உள்வாங்கி குப்பத்தொட்டிய பாத்துக்கிட்டே ஸ்டைலா குப்பைய ரோட்ல போட்டுறுவேன். திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது அதைச்சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது திருடனாப்பாத்து திருந்தாவிட்டா திருட்ட ஒழிக்க முடியாது அந்த மாதிரி தனித்தனியா ஒவ்வொரு மனிசனும் யோசிக்கனும். கூட்டத்துல இருக்குறப்ப கூல் ட்யூட் மாதிரி என்விரான்மெண்டல் டிஸாஸ்டர் பத்தி பேசிட்டு தனியா இருக்குறப்ப அந்த என்விரான்மெண்டல் டிஸாஸ்டர் பன்ற கும்பல் கிட்டயே காசு லஞ்சமா வாங்குற பல லாப்யிஸ்டுகளையும் தன்னார்வலர்களையும் அரசியவாதிகளையும் அதிகாரிகளையும் நாம பாத்துகிட்டுத்தான் இருக்குறோம் கஷ்டமான ஒரு சூழல் தான் அதுதானே நம்ம சுற்றுச்சூழல். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்... இந்த வருடம் 2021ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக `சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு' என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு என்பது, சுற்றுச்சூழல் மோசமடைவதை தடுப்பது, அம்மாதிரியான செயல்களை நிறுத்துவது மற்றும் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய பணியாற்றுவது என ஐநா தெரிவித்துள்ளது. எனவே தான் இந்த வருடத்திற்கான கருப்பொருளாக "மறுமுறை யோசிப்பது. மீண்டும் உருவாக்குவது, பாதுகாப்பது" என்பதை நிறுவி உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலை மறுசீரமைப்பது என்றால் என்ன ? ஆங்கிலத்தில் Ecosystem Restoration என்று சொல்கிறார்கள். இந்த வருடம் துவங்கி 2030 வரையிலான அடுத்த பத்தாண்டுகளில் பல ஹெக்டேர்கர்கள் அளவிலான காடுகள், மலைகள், கடல் விவசாய நிலங்கள் என்று அனைத்தையும் பாதுகாத்தும் மறுநீரமைத்திட வேண்டும் என்கின்ற அறைகூவலுடன் இவ்வருட சுற்றுப்புறச் சூழல் தினம் துவங்கவுள்ளது. இயற்கையோடு மனிதா்கள் தங்கள் உறவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், சுற்றுச்சூழலை மறுசீரமைப்பது சம்பந்தமான உரையாடல்கள், மற்றும் அதற்கான செயல் திட்டங்கள் போன்றவை வலியுறுத்தப்படவுள்ளது. ஆனால் அடிப்படையில் ஒரு உண்மையினை ஆழமான வாழ்வியல் தத்துவத்தை மனிதர்கள் உணரத்தவறவிட்டனர். நமக்கும் இப் புறச்சூழலுக்குமான உறவினை மறந்து விட்டனர். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று வள்ளுவம் சொல்லியிருக்கின்றது. பல்லுயிர் என்பது bio diversity பகுத்துண்டு என்றால் நம்மிடம் இர

06-05
05:22

Recommend Channels