Discover
For All Our Kids Podcast
406 Episodes
Reverse
இந்தப் பகுதியில் திருக்குறளின் 54வது அதிகாரமான பொச்சாவாமையிலிருந்து முதல் ஐந்து குறள்களை பார்க்கப்போகிறோம். பொச்சாப்பு என்றால் மறதியைக் குறிக்கும். பொச்சாவாமை என்றால் எதிலும் மறதி இல்லாமல் விழிப்புடன் இருப்பதைக் குறிக்கும். மறதியால் கடமையைச் செய்யாமல் அலட்சியமாக இருப்பது புகழை அழித்துவிடும். எந்தச் சூழ்நிலையிலும் சோர்வு இல்லாமல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.செல்வம், பதவி, அதிகாரம் இவைகள் மனிதனுக்கு செருக்கைக் கொடுக்கும். இன்பம் ,துன்பம் எதிலும் சமநிலையோடு செயல்பட வேண்டும். அதிக உணர்ச்சிப் பெரு...
சுற்றந்தழால் அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம். சுற்றந்தழால் என்பதற்குப் பொருள் நம்மைச் சுற்றி உள்ளவர்களோடு இணைந்து ஆதரவோடு நடந்து கொள்வது ஆகும். நல்லது, கெட்டது என்று எது நடந்தாலும் நமக்குத் துணையாக இருப்போர்களே சிறந்த சுற்றம் ஆவார்கள். சுற்றத்தின் தேவையையும் அதன் சிறப்பையும் இந்த அதிகாரம் சொல்கிறது.
திருக்குறளின் 53வது அதிகாரம் சுற்றந்தழால்.சுற்றம் என்றால் நமைமைச் சுற்றி உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள். சுற்றந்தழால் என்பதற்குப் பொருள் நம்மைச் சுற்றி உள்ளவர்களோடு இணைந்து, ஆதரவோடு நடந்து கொள்வது ஆகும். நல்லது, கெட்டது என்று எது நடந்தாலும் நமக்குத் துணையாக இருப்பவர்களே சிறந்த சுற்றம் ஆவார்கள். சுற்றத்தின் தேவையையும், அதன் சிறப்பையும் இந்த அதிகாரம் சொல்கிறது.
தெரிந்து வினையாடல் அதிகாரத்தின் முதல்ஐந்து குறள்களை இதற்கு முந்தைய பகுதியில் பாரத்தோம். இந்தப் பகுதியில் தெரிந்துவினையாடல் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களைப் பாரக்கப்போகிறோம். செய்யும் செயல்களின் நன்மை தீமைகளை ஆறாய்ந்து செய்ய வேண்டும். அடைய வேண்டிய இலக்கை அறிந்து செயல்களைச் செய்யவேண்டும. செயல்களைச் செய்பவர்க்கு முழு உரிமை அளிக்க வேண்டும். செயல்கள் செய்யும்போது சிலர் தடம் மாறுவதும் உண்டு. இப்படி இந்த அதிகாரம் அறிவுறைகளை சொல்கிறது.
தெரிந்து வினையாடல். இது திருக்குறளின் 52வது அதிகாரம். இந்த அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை இந்தப் பகுதியில் பார்க்கப்போகிறோம். செய்யும் செயல்களின் நன்மை தீமைகளை ஆராய்ந்து செய்ய வேண்டும்,அடைய வேண்டிய இலக்கை அறிந்து செயல்களைச் செய்யவேண்டும, செயல்களைச் செய்பவர்க்கு முழு உரிமை அளிக்க வேண்டும், செயல்கள் செய்யும்போது சிலர் தடம் மாறுவதும் உண்டு. இப்படி இந்த அதிகாரம் அறிவுறைகளை சொல்கிறது.








