Discover
SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்
Author: SBS
Subscribed: 1,763Played: 34,356Subscribe
Share
© Copyright 2025, Special Broadcasting Services
Description
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
1078 Episodes
Reverse
குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Cairns நகரின் - Cairns Central Shopping Centre யிலிருந்து SBS ஊடகத்தின் தெற்காசிய மொழி ஒலிபரப்புகளின் “தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி” அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வியாழக்கிழமை நேரடி ஒலிபரப்பாக ஒலித்தது. இந்த நிகழ்ச்சியில் நாம் பிரணவ் அவர்களை சந்தித்தோம். குடிவரவு வழக்கறிஞராக பணியாற்றும் அவர், Cairns எனும் பிராந்திய நகருக்கு குடிபெயர்ந்த கதையையும், Cairns நகரம் எப்படி வாழ்வதற்கு நல்ல தெரிவு என்றும் விளக்குகிறார். அவரை நேரடி ஒலிபரப்பின்போது சந்தித்து உரையாடியவர் றைசெல்.
Indigenous Australian athletes have long inspired the nation, uniting communities and shaping our identity. Olympian Kyle Vander-Kuyp and Matildas goalkeeper Lydia Williams are two such Indigenous athletes that have shaped our national identity. Their stories show the power of sport to foster inclusion, equality, and pride for future generations. - ஒரு தேசத்தை ஊக்கப்படுத்த என்ன தேவை? பல ஆஸ்திரேலியர்களுக்கு, இதற்கான பதில் விளையாட்டு மைதானத்தில் கிடைக்கக்கூடும். கால்பந்து மைதானத்திலிருந்து தடகள அரங்கம் வரை, ஆஸ்திரேலிய பூர்வீகக்குடி பின்னணிகொண்ட விளையாட்டு வீரர்கள் இந்த நாட்டின் விளையாட்டு வரலாற்றை வடிவமைத்துள்ளனர்.பல கலாச்சாரங்களுக்கும் சமூகங்களுக்கும் இடையே இணைப்புகளை உருவாக்கி, ஆஸ்திரேலியாவின் தேசிய அடையாளத்தை வலுப்படுத்தியுள்ளனர்.
‘இதயக்கனி’ விஜயன் அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட தமிழின் மூத்த பத்திரிகையாளர். அச்சு வடிவில் வெளிவரும் இதழ்கள் காணாமற்போகும் இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் பாய்ச்சலில், ‘இதயக்கனி’ எனும் இதழை, ஆசிரியர், வெளியீட்டாளர் என்று கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் விஜயன் அவர்கள். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த அவரை SBS தமிழ் ஒலிபரப்புக்காக SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் ஊடகவியலாளர் ச.சுந்தரதாஸ் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல். பாகம் 2
‘இதயக்கனி’ விஜயன் அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட தமிழின் மூத்த பத்திரிகையாளர். அச்சு வடிவில் வெளிவரும் இதழ்கள் காணாமற்போகும் இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் பாய்ச்சலில், ‘இதயக்கனி’ எனும் இதழை, ஆசிரியர், வெளியீட்டாளர் என்று கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் விஜயன் அவர்கள். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த அவரை SBS தமிழ் ஒலிபரப்புக்காக SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் ஊடகவியலாளர் ச.சுந்தரதாஸ் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல். பாகம் 1
குழந்தை பிறந்த பிறகு இறந்தாலும் அல்லது உயிரிழந்து குழந்தை பிறந்தாலும், பெற்றோருக்கு வழங்கப்படும் முதலாளி நிதியுதவியுடன் கூடிய பெற்றோர் விடுப்பு ரத்து செய்யப்படக்கூடாது என்ற நோக்கில் பெடரல் நாடாளுமன்றத்தில் Fair Work திருத்தச் சட்டம் (Baby Priya) சட்டமுன்வடிவு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 13/10/2025) செய்திகள். வாசித்தவர்: செல்வி.
பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் - சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் களம்; கரூர் கூட்ட நெரிசல் விசாரணை மனுக்கள்: நாளை தீர்ப்பு வழங்குகிறது இந்திய உச்ச நீதிமன்றம்; பாஜக அண்ணாமலை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மோதல்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Cairns நகரின் - Cairns Central Shopping Centre யிலிருந்து SBS ஊடகத்தின் தெற்காசிய மொழி ஒலிபரப்புகளின் “தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி” அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வியாழக்கிழமை நேரடி ஒலிபரப்பாக ஒலித்தது. இந்த நிகழ்ச்சியில் நாம் நடராஜன் அவர்களை சந்தித்தோம். Cairns நகரம் தனது இலக்கை அடையும் நகராக மாறிய கதையை விவரிக்கிறார். அவரை நேரடி ஒலிபரப்பின்போது சந்தித்து உரையாடியவர் றைசெல்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Cairns நகரின் - Cairns Central Shopping Centre யிலிருந்து SBS ஊடகத்தின் தெற்காசிய மொழி ஒலிபரப்புகளின் “தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி” அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வியாழக்கிழமை நேரடி ஒலிபரப்பாக ஒலித்தது. இந்த நிகழ்ச்சியில் நாம் விஜி அவர்களை சந்தித்தோம். Real estate எனப்படும் வீடு விற்பனை முகவராக பணியாற்றும் அவர், Cairns எனும் பிராந்திய நகருக்கு குடிபெயர்ந்த அவரின் கதையையும், பிராந்திய நகரங்கள் எப்படி வாழ்வதற்கும், முதலீட்டுக்கும் நல்ல தெரிவு என்றும் விளக்குகிறார். அவரை நேரடி ஒலிபரப்பின்போது சந்தித்து உரையாடியவர் றைசெல். இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பின்னணியைப் பொறுத்து வீடு தொடர்பான நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (5 அக்டோபர் – 11 அக்டோபர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 4 அக்டோபர் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
Sikhism is a rapidly growing religion in Australia, but it's still poorly understood. How are community leaders responding to misinformation and discrimination? - சீக்கிய மதம் உலகின் ஐந்தாவது பெரிய மதம், மேலும் ஆஸ்திரேலியாவின் சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில், வேகமாக வளர்ந்து வரும் மதக் குழுவாக சீக்கிய மதம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மெக்குவரி தமிழ்ச் சங்கம் நடத்தும் 'தீபாவளி அலப்பறைகள்' என்ற கொண்டாட்ட நிகழ்வு எதிர்வரும் அக்டோபர் 19 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு குறித்த தகவல்களை பகிர்ந்துக் கொள்கிறார்கள் மெக்குவரி தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த ஆதவன் ஸ்ரீனிவாசன், தேஜஸ்வினி ராஜீவ் மற்றும் வைஷ்ணவிப்ரியா சிவகுமார். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் தொடர்பிலான Jobs and Skills ஆஸ்திரேலியா அறிக்கை வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலியர்களில் சிலர் Retail Theft - “கடைகளில் நடக்கும் திருட்டு" சில நேரங்களில் நியாயமானது என்று கருதுவதாகவும் மற்றொரு பக்கம், பெரும்பாலானவர்கள் அதனை இன்னும் குற்றமாகவே காண்பதாகவும் ஆய்வு ஓன்று தெரிவித்துள்ளது. இது பற்றிய செய்தியின் பின்னணியினை வழங்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 10/10/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
யாழ்.தையிட்டி பௌத்த விகாரைக்கு எதிராக தொடரும் போராட்டம் மற்றும் பெருந்தோட்டத்துறை சார் அதிகார சபை நீக்க வேண்டாம் என நாடாளுமன்றத்தில் கோரிக்கை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
VALID அமைப்பினால் முன்னெடுக்கப்படும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்திட்டம் தொடர்பில் விளக்குகிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த அகிலன் குறூஸ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
காசாவில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டஇஸ்ரேல், ஹமாஸ்; தைவான் அருகே ராணுவசெயல்பாடுகளை அதிகரித்திருக்கும் சீனா; வெனிசுலாமீது ராணுவ நடவடிக்கைக்கு தயாராகிறதாஅமெரிக்கா?; சிரிய ராணுவம்- குர்து போராளிகள்இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்; ஆப்கான்வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்கு வருகை;சீனாவிற்கான மாட்டிறைச்சி ஏற்றுமதியை அதிகரித்தபிரேசில்; ஹைதி வன்முறையில் பாதிக்கப்படும் குழந்தைகள் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
விக்டோரியர்கள் இந்த கோடைக்காலத்தில் இரண்டு மாதங்கள் தொடர்ந்து ஒவ்வொரு வார இறுதியிலும் பொதுப் போக்குவரத்தில் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
நாட்டின் 80 சதவீத உருளைக்கிழங்களை உற்பத்தி செய்துவரும் தெற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட அதிக வெப்பநிலை, அதன்பின் ஏற்பட்ட குளிர் மற்றும் பலத்த காற்று ஆகியவை காரணமாக உருளைக்கிழங்கு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
கையில் வளையம் மாட்டும் திட்டம் பலன் தரும்.
Tamil God Song's to be relayed
https://castbox.fm/channel/Tamil-Bharathi-kavithaigal-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-c584a7c9f6b534a96670e750c668a5712183c5e9?country=us