Discover
SBS Tamil - SBS தமிழ்
SBS Tamil - SBS தமிழ்
Author: SBS
Subscribed: 1,782Played: 34,842Subscribe
Share
© Copyright 2025, Special Broadcasting Services
Description
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
1291 Episodes
Reverse
Clinical Oncology Society of Australia ( COSA) எனும் தேசிய அமைப்பின் தலைவராக பேராசிரியர் சபே சபேசன் அவர்கள் தெரிவாகியுள்ளார். Townsville cancer centre இயக்குனராகவும், James Cook (JCU) பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் எனப் பன்முகம் கொண்ட தமிழரான Dr சபே சபேசன் அவர்கள் தலைமைத்துவப் பண்புகள், அவரின் வேலைத்திட்டங்கள் மற்றும் பல விடயங்கள் பற்றி எம்முடன் பகிர்ந்துகொண்டார். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன். Professor Sabe Sabesan has been elected as the President of the Clinical Oncology Society of Australia (COSA). A distinguished Tamil Australian, he also serves as the Director of the Townsville Cancer Centre and as a Professor at James Cook University (JCU). In this interview, Professor Sabesan shares his insights on leadership, his strategic priorities, and various aspects of his professional journey. The conversation was conducted by Praba Maheswaran.
‘ஈவில் ட்வின்’ எனப்படும் போலி வைஃபை வலையமைப்புகளை உருவாக்கி தனிப்பட்ட தகவல்களை திருடிய மேற்கு ஆஸ்திரேலிய நபருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
ஆஸ்திரேலியாவின் குடிவரவு தடுப்பு முறைமை இந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பணிக்குழுவொன்றின் தீவிர ஆய்வுக்குட்படுகிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். ஆங்கில மூலம்: SBS Newsயின் Gabrielle Katanasho.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 03/12/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
Cholesterol plays an essential role in our health, but when its balance is disrupted, it can lead to various health issues. We are speaking with a Consultant Cardiologist, staff specialist in General Medicine Dr Victor D Joseph to gain important insights about cholesterol and its impact on our wellbeing. The interview is conducted by Praba Maheswaran. - கொலஸ்ட்ரால் என்பது நமது உடல்நலத்தில் முக்கிய பங்கு வகிப்பதோடு, சரியான சமநிலை குலைந்தால் பல நோய்களுக்கு காரணமாகவும் முடியும். இதன் பின்னணியில், இதயநோய் நிபுணர் (Consultant Cardiologist), staff specialist in General Medicine வைத்தியர் விக்டர் ஜோசப் அவர்களுடன் உரையாடுகிறோம். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன். Cholesterol plays an essential role in our health, but when its balance is disrupted, it can lead to various health issues. We are speaking with a Consultant Cardiologist, staff specialist in General Medicine Dr Victor D Joseph to gain important insights about cholesterol and its impact on our wellbeing. The interview is conducted by Praba Maheswaran.
இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களும் சீரற்ற காலநிலையினால் பெரும் பாதிப்புக்குள்ளாகிய நிலையில் 400 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தும் 300ற்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளார்கள். இந்த அனர்த்தத்தில் மத்திய மலைநாட்டு பகுதி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
இலங்கை முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய Ditwah புயலால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 410 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
சிட்னியில் புதிய மெட்ரோ நிலையமான Gadigal Metro Station, 2025 ஆம் ஆண்டின் உலகின் அழகான பயணிகள் நிலையங்கள் பட்டியலில் Prix Versailles மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 2/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
Ethnic Communities Council of NSW (ECCNSW) முன்னெடுத்துள்ள சமூக சாலை பாதுகாப்பு திட்டம் குறித்து விளக்குகிறார் ECCNSW-இல் தமிழ் இருமொழி ஆசிரியராக கடமையாற்றும் மணி ராமசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
2025 செப்டம்பர் மாதம் வரையிலான 12 மாதங்களில் 73,000க்கும் மேற்பட்ட நியூசிலாந்து குடிமக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
Airbus A320 விமானங்களில் அவசர மென்பொருள் மாற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதை அடுத்து உலகளவில் விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 01/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய திட்வா புயல் தமிழகத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள்; அன்புமணி தான் பாமக தலைவர் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு; முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
தோல் புற்றுநோய் குறித்து நம்மிடையே நிலவும் தவறான புரிதல்கள் குறித்தும், தோல் புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாப்பது எப்படி என்பது குறித்தும் விளக்குகின்றனர் சிட்னியில் குடும்ப மருத்துவர்களாக பணியாற்றும் டாக்டர் நளாயினி சுகிர்தன் & டாக்டர் பரன் சிதம்பரகுமார் ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.
மெல்பனின் நீண்டநாள் எதிர்பார்க்கப்பட்ட metro tunnel- சுரங்கத்திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலியாவிலுள்ள மாணவர்கள் தமது எதிர்கால தொழில்துறையாக எதைத் தெரிவுசெய்யலாம் என்பதில் சில குழப்பங்கள் இருக்கக்கூடும். அப்படியானவர்களுக்கு உதவும் நோக்கில் சில முக்கியமான தொழில்துறைகள் தொடர்பில் நாம் நிகழ்ச்சிகளைப் படைக்கவுள்ளோம். அந்தவகையில் Physiotherapy தொடர்பில் அறிந்துகொள்வோம். Physiotherapy சார்ந்த பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சிட்னியைச் சேர்ந்த physiotherapist பிரியா ஞானகுமாரன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
அமெரிக்கா, வெனிசுவேலா மீது தாக்குதலை நடத்த ஆயத்தமாக இருப்பதாக பரபரப்பாகப் பேசப்படுகிறது. இதன் பின்னணி தொடர்பிலும் தற்போதைய நிலை என்ன என்பது தொடர்பிலும் விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் மூத்த ஒலிபரப்பாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albaneseயும் அவரது இணையான Jodie Haydonனும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (23 – 29 நவம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: செல்வி.
























கையில் வளையம் மாட்டும் திட்டம் பலன் தரும்.
Tamil God Song's to be relayed
https://castbox.fm/channel/Tamil-Bharathi-kavithaigal-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-c584a7c9f6b534a96670e750c668a5712183c5e9?country=us