DiscoverSBS Tamil - SBS தமிழ்
SBS Tamil - SBS தமிழ்
Claim Ownership

SBS Tamil - SBS தமிழ்

Author: SBS

Subscribed: 1,705Played: 31,326
Share

Description

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
2453 Episodes
Reverse
ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு வீதமானவர்கள் வெளிநாடொன்றில் பிறந்தவர்கள் என புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Nadhaswara artist Jaishankar Kalimuthu and Thavil artist Mas Soundararajan from Tamil Nadu, India will grace the twelfth annual Chiththirai Festival in Sydney. - பன்னிரண்டாவது வருடமாக நடக்கவிருக்கும் சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்ள நாதஸ்வர கலைஞர் ஜெய்சங்கர் காளிமுத்து, மற்றும் தவில் கலைஞர் மாஸ் சௌந்தரராஜன் ஆகியோர் தமிழ்நாட்டிலிருந்து வருகிறார்கள்.
The land holds a profound spiritual significance for Aboriginal and Torres Strait Islander peoples, intricately intertwined with their identity, belonging, and way of life. - பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ரெயிட் தீவு மக்களுக்கும் இந்த நிலத்துக்கும் இடையிலான ஆழ்ந்த பிணைப்பை வலியுறுத்தும் விவரணம் இது. ஆங்கில மூலம் Yumi Oba. தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றத்தின் மத்தியில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகை; ஊதிய உயர்வு கோரி மலையகப் பகுதிகளில் தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 05 வருடங்களாகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் என்று முக்கிய செய்திகளின் தொகுப்பை “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 26/04/2024) செய்தி.
Ladybirds - those tiny, spotted insects - are beloved of many, with some believing their bright colours and polka dot livery bring good luck. Now, pushing beyond the realm of luck and into the field of agriculture, the small beetle is taking on a new role as a pest-eating assassin, thanks to new research from Murdoch University. The story by Hannah Kwon for SBS News was produced by RaySel for SBS Tamil. - நாட்டில் பயிர்களுக்கு அழிவை ஏற்படுத்தும் பூச்சிகளை கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் முன்வைக்கும் யோசனை: பூச்சிகளை சாப்பிடும் கரும்புள்ளி செவ்வண்டுகளுக்கு பூச்சிகளை சாப்பிடும் பழக்கத்தை கற்றுத் தருவது என்பதாகும். இந்த அறிவியல் தகவலை விளக்கும் விவரணம். ஆங்கில மூலம் SBS-News க்காக Hannah Kwon. தமிழில்: றைசெல்.
வார்த்தைகளை வாளாக வார்த்தவன்; மொழியைத் தேனாக வடித்தவன்; எதிரிகளைக் கவிதையால் அடித்தவன்; கம்பீரத்தால் காலங்கள் கடந்தவன். அவன் – பாரதிதாசன். “காலத்துளி” நிகழ்ச்சி வழி அவர் குறித்த தகவலை முன்வைக்கிறார் றைசெல்.
When consumers shop in a store, offering them a loyalty card or program is a common practice to encourage repeat visits. However, according to Deepa Karthik in Brisbane, there is a strategic business plan behind the discounts customers receive. Produced by RaySel. - நாம் கடையில் பொருட்கள் வாங்கும்போது நாம் தொடர்ந்து அந்த கடைக்கே செல்லவேண்டும் என்ற நோக்கத்தில் வாடிக்கையாளருக்கு லாயல்ட்டி அட்டை அல்லது Loyalty Program தரும் முறை பரவலாக காணப்படுகிறது. ஆனால் இதனால் நமக்கு கிடைக்கும் விலைச் சலுகைக்கு பின்னால் ஒரு பெரும் வர்த்தக தந்திரம் உள்ளது என்கிறார் பிரிஸ்பேன் நகரில் வாழும் தீபா கார்த்திக் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
The share of Sydney suburbs where deaths outnumber births has almost trebled in the past five years as the effects of population ageing reshapes neighbourhoods across the city. Praba Maheswaran presents the news explainer. - சிட்னி புறநகர்ப் பகுதிகளில் பிறப்புகளை விட இறப்புகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளன. இது சிட்னி சனத்தொகையின் வடிவமைப்பினை மாற்றியமைக்குமா? இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
செய்திகள்: 25 ஏப்ரல் 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்
Anzac Day is one of Australia's most important national commemorative occasions. It marks the anniversary of the first major military action fought by Australian and New Zealand forces during the First World War. Kulasegaram Sanchayan presents how the Tamils living in Australia are celebrating that. - ஆஸ்திரேலிய நியூசிலாந்து இராணுவப் போராளிகளை வீரர்களை வாழ்த்தி வணங்கிக் கொண்டாடும், அவர்கள் வாழ்க்கையை நினைவு கூரும், அவர்கள் வீரச் செயல்களையும் எதிர்கொண்ட சவால்களையும் சந்தித்த தோல்விகளையும் பகிரும் நாள், அன்சாக் தினம்.
சிட்னி மற்றும் அதன் தென்மேற்குப் பகுதிகளில் "மத ரீதியாக தூண்டப்பட்ட தீவிரவாத சித்தாந்தத்தை" கடைபிடிப்பதாகக் கூறப்படும் 7 இளைஞர்கள் இன்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.- இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Is the Mahabharata the ultimate epic in shaping the way of life, or is it the Ramayana? Let's listen to the panel discuss the topic. Participants: Kavitha Kuppusamy, Radhakrishnan Shasidharan, Janani Sivamainthan, Saravanan Vijayan and Pushpakumar Arunasalam (Judge) in Perth. Produced by RaySel. - வாழ்வு முறை நெறிப்படுத்தலில் விஞ்சி நிற்கும் இதிகாசம் மகா பாரதமா? அல்லது கம்பராமாயணமா? எனும் தலைப்பில் பட்டிமன்றம் கேட்போம். இதில் கலந்துகொள்கின்றவர்கள்: பெர்த் நகரிலிருந்து கவிதா குப்புசாமி, ராதாகிருஷ்ணன் சசிதரன், ஜனனி சிவமைந்தன், சரவணன் விஜயன் & புஷ்பகுமார் அருணாசலம் (நடுவர்). நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
The dispute between China and the Philippines over the South China Sea has intensified significantly. The United States is actively supporting the Philippines in this matter. In this context, R. Sathyanathan, an experienced media professional, discusses the Sino-Philippine border issue. Produced by RaySel. - தென் சீன கடல் எல்லை தொடர்பாக சீனாவுக்கும் பிலிப்பின்சுக்குமிடையே போர் வெடிக்குமளவு பிரச்சனை பெரிதாகிக்கொண்டே செல்கிறது. இந்த பிரச்சனையில் பிலிப்பின்சுக்கு மிக தீவிர ஆதரவு தருகிறது அமெரிக்கா. இந்த பின்னணியில், சீன-பிலிப்பின்ஸ் எல்லை பிரச்ச்னை குறித்து விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
இந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கேரளா மாநிலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த பின்னணியில், கேரளா மாநில கள நிலவரத்தை விளக்குகிறார், தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள். இந்திய தேர்தல் களம் குறித்த தொகுப்பின் எட்டாம் பாகம்.
Brisbane is Australia's likely property price growth leader for 2024, according to a new national report naming the suburbs and towns expected to boom this year. The Queensland capital climbed eight rankings in Canstar's annual Rising Stars report, released this week, knocking Adelaide from the top spot. Mr Emmanual Emil Rajah-Chief Executive, NewGen Consulting Australasia, sheds light on the current state of the property market. Produced by Renuka Thuraisingham. - 2024 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் வீட்டு விலை அதிகரிப்பில் பிரிஸ்பேன் முன்னணியில் உள்ளதாக இந்த வாரம் வெளியிடப்பட்ட Canstar annual Rising Stars அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியின் பின்னணி தொடர்பிலும், இந்த பட்டியலின்படி நாட்டில் எங்கெங்கு வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளன என்பது தொடர்பிலும் விளக்குகிறார் Property Investor மற்றும் Real Estate துறையில் பல வருடகால அனுபவம் கொண்டவரும், NewGen Consulting Australasia நிறைவேற்று அதிகாரியுமான இமானுவேல் எமில்ராஜா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 24/04/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
10 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான 30 கிலோ cocaine போதைப்பொருளைக் கொண்டுவந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் மெல்பன் விமானநிலையத்தில்வைத்து 3 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Anzac விடுமுறைக் காலத்தையொட்டி ACT மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சாலைவிதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 23/04/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.
loading
Comments (3)

Yogi Yoganand

கையில் வளையம் மாட்டும் திட்டம் பலன் தரும்.

Apr 11th
Reply

Rajasekaran Lakshumanan

Tamil God Song's to be relayed

Sep 9th
Reply
Download from Google Play
Download from App Store