Discover
The Political Pulse | Hello vikatan
The Political Pulse | Hello vikatan
Author: Hello Vikatan
Subscribed: 3Played: 21Subscribe
Share
© Hello Vikatan
Description
The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast
406 Episodes
Reverse
செங்கோட்டையன் தவெக-வில் இணையப் போகிறாரா? விஜய் டீமுடன் டீல் நடந்து வருகிறது. செங்கோட்டையனை சேர்த்துக் கொண்டால், ஒரு 5 வகைகளில், விஜய்க்கு லாபம் என கணக்கிடுகிறார்கள். இன்னொருபக்கம் திமுக பக்கம் கொண்டு வர சேகர்பாபு பேசி வருகிறார். எங்கே சேர்ந்தாலும் அது எடப்பாடி-கு பெரிய இழப்பு தான்.செங்கோட்டையனை சுற்றி என்ன நடக்கிறது?மூவ் என்ன?
கோவை பறந்த ஸ்டாலின். இரண்டு நாள் முன்பு மதுரை சென்ற உதயநிதி. வீக் ஏரியாக்களை strenghthen செய்வது, விஜய் வருகையால், இளம் வாக்காளர்களிடம் கூடுதல் கவனம் செலுத்தும் உதயநிதி , ஸ்டாலினின் எடப்பாடி அட்டாக், இன்னொரு பக்கம் வலிமையான கூட்டணி அமைக்கும் பிளான். முக்கியமாக இளைஞர்களுக்கு 5 அசைன்மென்ட்-களை கொடுத்திருக்கும் உதயநிதி என திமுக நகர்வு.அடுத்து, எந்த திசையை நோக்கி ஓ.பி.எஸ் பயணிக்கிறார்? நேற்றைய கூட்டத்தை தொடர்ந்து இப்போதுவரை அங்கே என்ன நடக்கிறது? குறிப்பாக 3 கேள்விகள் அடங்கிய ஒரு படிவத்தை கொடுத்து, திமுகவா...தவெகவா ? என சர்வே எடுத்த ஓ.பி.எஸ்.
விஜய்-ன் நேற்றைய காஞ்சிபுரம் கூட்டம் decode, கொடுத்த 12 வாக்குறுதிகள், குறிப்பாக விஜய்க்கு, பாடம் கற்றுத் தந்த கரூர்...காஞ்சியில் தொடங்கிய இரண்டாவது இன்னிங்க்ஸ், கோட்டையை கைப்பற்றி கொடுக்குமா?இன்னொரு பக்கம்,ஒருங்கிணைந்த அதிமுக என்கிற குரலின் மூலம், எடப்பாடி-க்கு எதிரானவர்களின் நகர்வு, இதில் 'அண்ணாமலை-டி.டி.வி' சந்திப்பு, விஜய் பக்கம் நகரும் டி.டி.வி, ஓ.பி.எஸ் பிளான், அதிமுகவின் பொதுக்குழு தேதி அறிவிப்பு என அரசியல் பரபரப்புகள்.
பெண்கள் வாக்குகள், இளம் வாக்குகளை குறிவைக்கும் திமுக, அதிமுக, நாதக, தவெக.அவர்கள் திட்டங்கள்.இன்னொருபக்கம், திமுகவை தோற்கடிக்க மந்திரிகளை டார்கெட் செய்யும் பாஜக.கே.என் நேரு, எ.வ வேலு, மாஜி செந்தில் பாலாஜி என பெரிய லிஸ்ட். இதில்ஆர்.என் ரவியின் ரோல் உள்ளது என்கிறார்கள். மோடியை சந்தித்தபோது, DMK Ministers பற்றிய சீக்ரெட் Documents-களை, எடப்பாடி கொடுத்துள்ளார் என்கிறார்கள்.
SIR , ஆளுநர், கோவை, மதுரை மெட்ரோ, நெல் கொள்முதல் கோரிக்கைகளை நிராகரித்த பாஜக ஆட்சி என எதிராக தீவிரம் காட்டும் மு.க ஸ்டாலின். இதற்கெல்லாம் பதிலடியாக களத்தில் தீவிரம் காட்ட, நயினாருக்கு டெல்லியில் இருந்து கட்டளை. 'பீகார் காற்று' வீசுகிறது என PROVE பண்ண தீவிரம்.அந்தவகையில் சட்டம் ஒழுங்கு விவகாரம், எஸ்.ஐ.ஆர் பாசிட்டிவ் விஷயங்கள் என தீவிரம் காட்டும் நயினார்.அதேநேரம் பீகார் வெற்றிக்குப் பிறகு ஆட்சியில் பங்கு என்பதில் தீவிரம் காட்டும் பாஜக. அது நெருக்கடியாக அமைந்துவிடக் கூடாது என்றே 'கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை' என தம்பிதுரை ஓபன் ஸ்டேட்மென்ட்.பீகார் படுதோல்விக்கு பிறகு, காங் கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்பதால் வேறு ரூட் யோசிக்கும் விஜய். அதேநேரம் 60 தொகுதிகளை பெற்று தேஜஸ்வியை படாதுபாடு படுத்திவிட்ட காங், கூட்டணி அமைந்தால் நம்மையும் அப்படிதான் செய்வார்களோ என்று யோசித்து, அடுத்தகட்ட பரப்புரைக்கு தயாராகும் விஜய்.
பீகாரில் வெற்றி ஏற்படுத்திய பெண்களுக்கான ரூ 10,000 திட்டம் . அதேபோல பொங்கல் பரிசு கொடுக்க மு.க ஸ்டாலின் பிளான். 'உரிமைத் தொகையை ரூ 2000/-மாக உயர்த்தலாமா?' என்றும் ஆலோசனை. இன்னொருபக்கம் திமுக, அதிமுக என யாருக்கும் பிடிகொடுக்காமல் இறங்கி ஆடி வருகிறார் பிரேமலதா. நேற்று பழனி கூட்டத்திலும், 'சொன்ன நேரத்துக்கு மாநாட்டுக்கு சென்றவர் கேப்டன். அவர் கூட்டத்தில் 41 பேர் பலியெல்லாம் இல்லை' என விஜய்யை சீண்டியுள்ளார். பிரேமலதாவின் பிளான் என்ன? மு.க ஸ்டாலினும், எடப்பாடியும், ஏன் தேமுதிக-வை எதிர்ப்பார்க்கின்றனர்?
மோடியின் கோவை பயணம் ( இயற்கை வேளாண் மாநாடு), விவசாயிகளை டார்கெட் செய்யும் அரசியல், கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் 21.80 லட்சம் விவசாயிகளுக்கு, மொத்தமாக ரூ436 கோடி ஒதுக்கீடு. முக்கியமாக எடப்பாடியை குஷிப்படுத்தியுள்ளார் ஆனால் மறைமுக மெசேஜையும் தட்டிவிட்டுள்ளார். இதற்கு மு.க ஸ்டாலினின் பதிலடி. முக்கியமாக 'கோவை, மதுரை மெட்ரோவை புறக்கணித்த மோடி' என்று எதிர் பரப்புரை ரூட் எடுத்துள்ளார். அதேநேரம், கோவையை வெல்ல செந்தில் பாலாஜிக்கு சில அசைன்மென்ட்-களை , நேற்றைய உடன்பிறப்பே வா நிகழ்வில் கொடுத்துள்ளார்.
பீகாரில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற NDA. அதே ஃபார்முலாவை தமிழ்நாட்டில் அமல்படுத்த வியூகம் வகுத்துள்ளார் அமித் ஷா. விஜய் பிரிக்கும் வாக்குகளை வைத்து சாதக கணக்கு. இதற்கு பதிலடியாக கமலை வைத்து கணக்குகளை போடும் மு.க ஸ்டாலின். இதில் முக்கியமாக காங்கிரஸ் தோல்வியை வைத்து பாசிட்டிவ் கணக்கும் போடுகிறார்.
கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன். மத்ததை நீங்கள் பாருங்கள் என மாஜிக்களுக்கு உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி. ஒரு தொகுதிக்கு '15' என, சுமார் '4000 வைட்டமின் ப' பர்சேஸ் செய்யும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். மறுபக்கம், ராமதாசுடன் எடப்பாடியும், அன்புமணியுடன் பாஜகவும் கூட்டணி பேசி வருகின்றனர். அப்பா-மகன் பிரிந்திருந்தாலும் இந்த கோட்டாவில் சீட்டு ஒதுக்கி, இதே கூட்டணியில் தொடர வைக்க திட்டம் .அடுத்து 'டார்கெட் எடப்பாடி' என்பதில் 'டிடிவியை' கைவிட்டுவிட்டாரா விஜய்?
விஜய்யுடன் கூட்டணி சேர காங்கிரஸ் முயற்சி செய்கிறது. அப்படி நடந்தால் தென்னிந்தியா முழுக்க மீண்டும் ஒரு தொடக்கமாக இருக்கும் என இங்குள்ள சீனியர்கள் டீம், ராகுல் காந்தியிடம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், விஜய்க்கும் ஒரு தேசிய கட்சி ஆதரவு என்பது, அரசியல் எதிர்காலத்துக்கு உதவும் என்றும், தேர்தல் நேரத்தில் பொருளாதார ரீதியாகவும் சப்போர்ட்டாக இருக்கும் என்றும், டீல் பேசி வருகின்றனர். எந்த முடிவும் சொல்லாமல் இருக்கிறார் விஜய். இன்னொரு பக்கம், திமுகவுடனான கூட்டணியிலிருந்து ராகுல் மாற மாட்டார் என உறுதியாக நம்புகிறார் மு.க ஸ்டாலின் ஆனாலும் அப்படி ஒரு வேளை நடந்தால், மாற்று வழியாக, ஏனைய கூட்டணி கட்சியினருக்கு அதிக தொகுதிகளை வழங்குவது. கமலை வைத்து காங்கிரஸால் ஏற்படும் சேதாரங்களை ஈடு கட்டலாம் என்றும் கணக்கு. முக்கியமாக உதயநிதி ஸ்டாலின் சில முன்னெடுப்புகளை தீவிரப்படுத்துகிறார். முற்போக்கு வழியில் நம்பர் கேமை தொடங்கியுள்ளார். உதயநிதியின் வியூகங்கள் விஜயை வீழ்த்துமா?
'SIR' இதற்கு எதிராக தீவிரப் போராட்டத்தை முன்னெடுத்த இந்தியா கூட்டணி. இதில் SIR ஆபத்து என புள்ளிவிவரங்களை அடுக்கிய PTR. இவையெல்லாவற்றிலும், ஸ்டாலினுக்கு எட்டு லாபக் கணக்கு உள்ளது. அதே நேரம், விருந்தும், வகுப்பும் எடுத்துள்ளார் எ.வ வேலு. இதை எல்லா மாவட்டங்களுக்கும் கொண்டு செல்ல திமுக திட்டம். இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், நிர்மலா சீதாராமனுக்கு சில அசைன்மென்ட்களை கொடுத்துள்ளார் அமித் ஷா. அதை கோவையில், செவ்வென செய்யத் தொடங்கி விட்டார் நிர்மலா சீதாராமன்.
'STALIN 7' முன்பு எடப்பாடி, விஜய், SIR, சீனியர்கள் என நிறைய சவால்கள் உள்ளன. இவை எல்லாவற்றையும் முறியடிக்க கூட்டணியை அனுசரிப்பது, சீனியர்களுக்கு முக்கியத்துவம் என புது ரூட் எடுத்திருக்கும் மு.க ஸ்டாலின். இதில் துரைமுருகனுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. அதே நேரம், மிசா வரலாற்றை வைத்து எம்ஜிஆரை கேள்விக்கு உட்படுத்தியுள்ளார் உதயநிதி. இதற்கு அதிமுக இன்பதுரை பதிலடி கொடுத்துள்ளார். அதேநேரம் எடப்பாடி பதிலடி என்ன?
'ஏன் எடப்பாடி வேண்டாம்' என விஜய் முடிவெடுத்ததற்கு பின்னால் 6 முக்கிய காரணங்கள் உள்ளன. அதேநேரம், 'டெல்லி பேச்சை நம்பி ரொம்ப வெயிட் பண்ணிட்டோமே' என எடப்பாடி சைடில் இருந்து புலம்பல் சத்தம் ஆனாலும் புது ரூட், மாற்றத்தை கொடுக்கும் என நம்புகிறார்கள் அதிமுகவினர்.அடுத்து, மிசா வரலாற்றின் மூலம் ஆதவ் அர்ஜூனாவுக்கு, அரசியல் அடி கொடுத்த மு.க ஸ்டாலின்.தன் ரூட்டில் சீமான். 'தெலுங்கர்களுக்கும் ஏன் சீட்?' என விளக்கி, 50 தொகுதிகளை மையமிட்டு, புது வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார் சீமான்.
மீண்டும் எடப்பாடிக்கு எதிராக அடுக்கடுக்கான அஸ்திரங்களை ஏவியுள்ளார் செங்கோட்டையன். 'கொடநாடுகாக ஏன் சிபிஐ விசாரணை கேட்கவில்லை?' என கேட்டுள்ளார். முக்கியமாக, 'கட்சி ஒருங்கிணைப்பு வேலையை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதே பாஜக தான்' என கோர்த்துவிட்டுள்ளார் செங்கோட்டையன். இன்னொரு பக்கம், 'கொடநாட்டில் இல்லை கோப்புகள், போயஸ் கார்டனில் இருந்தது. படித்துவிட்டு கிழித்து விட்டோம்' என்கிறார் டிடிவி தினகரன். ஏன் கொடநாட்டை கையில் எடுத்து லாக் போடுகிறார்கள்? பிஜேபியை கோர்த்துவிட்டதன் மூலம், திமுகவுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளாரா செங்கோட்டையன்?
ராகுல் அம்பலப்படுத்தும் போலி வாக்காளர்கள் லிஸ்ட். அதிர்வாடைகளை ஏற்படுத்திய H.FILES. அதே நேரத்தில், தமிழ்நாட்டில் தொடங்கிய S.I.R பணிகள். அப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் சந்திக்கும் நெருக்கடிகள் ஏராளம் என்கிறார்கள். ஒரு மாதத்தில் ஆறரை கோடி வாக்காளர்களை சந்திக்க இயலுமா? என அச்சம். தொடர்ச்சியாக விஜய்-ன் சிறப்பு பொதுக்குழு கூட்டம் குறித்து மாஜிக்கள் சிலர், எடப்பாடியிடம் கம்பளைன்ட். மாற்று ரூட் எடுக்கும் எடப்பாடி. ஆளும் கட்சியிலோ, 'நயினாரை தோற்கடிக்க வேண்டும்' என நெல்லை திமுகவினருக்கு ஸ்டாலின் கட்டளை மேலும் நாடார் சமூக வாக்குகளை குறிவைத்து ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை ஒட்டி , மு.க ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு, 38 நாட்களுக்குப் பிறகு, பதில் கொடுத்துள்ளார் விஜய். TVK-ன் சிறப்பு பொதுக்குழு கூட்டம், மூலம் TVK Vs DMK என களத்தை கட்டமைக்க, ரூட் போட்டுள்ளனர். விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதன் மூலம், எடப்பாடியின் கூட்டணி கனவுக்கு, பெரிய லாக் போட்டுள்ளனர்.அதேநேரம் ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் என எடப்பாடிக்கு எதிரானவர்களின் நகர்வுகளை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கும் மு.க ஸ்டாலின்.குறிப்பாக, எடப்பாடியின் பலமான கொங்கு கோட்டையை தகர்க்க, மாவட்டத்துக்கு ஒரு அசைன்மென்ட் கொடுத்திருக்கும் மு.க ஸ்டாலின் கணக்குகள், வொர்க்அவுட் ஆகுமா?
திமுகவில் இணைந்தார் மனோஜ் பாண்டியன். சேகர் பாபு மூலமாக திமுகவில் இணைந்தார் என்கிறார்கள். அடுத்து வைத்திலிங்கத்துக்கு வலை விரிக்கப்படுகிறது என்கிறார்கள். இது ஓபிஎஸ் தரப்பிற்கு ஷாக். மனோஜ் பாண்டியன் இணைந்ததற்கு பின்னணியில் சசிகலா - ஓபிஎஸ் சந்திப்பும் காரணம் என்கிறார்கள். அது மட்டுமில்லாமல் ஓபிஎஸ்ஸின் செயல்பாடு உள்ளிட்ட சில காரணங்களும் உள்ளது. இன்னொரு பக்கம், மீண்டும் துணை பொது செயலாளர் ஆகியிருக்கும் பொன்முடி. அடுத்து அமைச்சர் வெள்ளகோவில் சுவாமிநாதனும் துணை பொது செயலாளர் ஆகியுள்ளார். இதற்கு பின்னணியில் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமுதாய வாக்குகளை குறி வைக்கும் அரசியல் உள்ளது. இன்னொரு பக்கம் மனோஜ் பாண்டியன் உள்ளே வந்தது, தென் மாவட்ட திமுகவுக்குள் சில சலசலப்புகளை உருவாக்கியுள்ளது. அதன் பொறுப்பாளரான கனிமொழி, கவனத்தோடு கையாளத் தொடங்கி உள்ளார். இதற்கிடையே சேலம் மேற்கு பாமக எம்எல்ஏ அருள் கார் தாக்குதலுக்கு உள்ளானது. 'அட்டாக் செய்தது அன்புமணி டீம்' என்கிறார். என்ன நடக்கிறது?
ஸ்டாலின் ஆட்சியில் மீண்டும் சட்டம் ஒழுங்கு கேள்விக்குள்ளாகியுள்ளது. கோவை பகீர் சம்பவம். எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்கின்றன. அதே நேரத்தில் எடப்பாடி சுற்றி ஒரு ஆறு நெருக்கடிகள் உள்ளன. டிடிவி தினகரன் தரும் நெருக்கடி, தனியாக களமாடும் விஜய் என இவை எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக மாற்ற முயற்சிக்கும் மு.க ஸ்டாலின். அதன் தொடர்ச்சியாகவே சென்ட்ரலுக்கு எதிராக எஸ் ஐ ஆர் விவகாரத்தை கையில் எடுத்து களமாடுகிறார். வொர்க்அவுட் ஆகுமா?
செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கி உள்ளார் எடப்பாடி. இதையொட்டி, 'எடப்பாடி முதலமைச்சராக காரணமே நான்தான் என்றும், கொடநாடு ஏ1 எடப்பாடி' என்றும் கடுமையான அட்டாக். இதற்கு, அம்மா ஜெ-வால் பதவி பறிக்கப்பட்டவர் செங்கோட்டையன். திமுக-வின் பி டீம்' என எடப்பாடி பதிலடி அட்டாக். இதில் செங்கோட்டையன் எடுத்து வைக்கும் அடுத்த நான்கு அடிகள், எடப்பாடிக்கு பலமான லாக்காக இருக்கும் என்கிறார்கள். சுதாரித்தவர், சில நகர்வுகள் மூலம் எச்சரிக்கும் எடப்பாடி என்கிறார்கள். எல்லாவற்றையும், ஹாப்பியாக வேடிக்கை பார்க்கும் மு.க ஸ்டாலின். மீண்டும், உச்சத்துக்கு சென்ற, அதிமுக-வின் 'உட்கட்சி வார்!'
கட்சிக்குள் மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என சில முயற்சிகளை முன்னெடுக்கும் வி.கே சசிகலா. அந்த வகையில் எடப்பாடி டீமிடம், சசிகலாவின் தூதுவர்கள் டீல் பேசி வருகின்றனர். மூன்று டிமாண்டுகளை முன்வைக்கின்றனர். 'இதை ஏற்காவிடில், எங்களுக்கு பெரிதாக இழப்பு இல்லை ஆனால் எடப்பாடிக்கு நிறைய இழப்புகள் உண்டு முக்கியமாக தென் மாவட்டங்களில் வெற்றி வாய்ப்பு பறிபோகும்' என சில புள்ளி விவரங்களை அடுக்குகின்றனர். சசிகலாவை மட்டும் ஆதரித்து மற்றவர்களை புறக்கணிக்கலாமா? என எடப்பாடி டீம் உள்ளேயே, சிலர் ஆலோசனை தருகின்றனர். இப்போதைக்கு டிசம்பர் வரை பொறுத்து இருக்கலாம் என முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதற்கிடையே செங்கோட்டையனை, கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் எடப்பாடி.























