அரசு ஊழியர்கள் போராட்டம், கூட்டணிக் கட்சிகளின் டிமாண்ட் என பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க தொடங்கி உள்ளார் மு.க ஸ்டாலின். முக்கியமாக 'ஆட்சியில் பங்கு' என குடைச்சல் கொடுக்க தொடங்கி இருக்கும் காங்கிரஸ். இன்னொரு பக்கம் விஜய் குறி வைக்கும் பெண்கள் வாக்குகள். இந்த தலைவலிகளை சமாளிக்க கனிமொழிக்கு புது அசைன்மென்ட் கொடுத்திருக்கும் மு.க ஸ்டாலின்.
'எடப்பாடி - பியூஸ் கோயல்' சந்திப்பு நிகழ்ந்துள்ளது. தொகுதி பங்கீடு, வலுவான கூட்டணி, முக்கியமாக இருமுனை போட்டியை கட்டமைக்க வேண்டும் என பல விஷயங்களை ஆலோசித்துள்ளனர். இதில் 60 தொகுதிகள் வரை பாஜக எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள். முக்கியமாக 'விஜய் நமக்கான வாக்குகளை ஸ்பாய்ல் செய்யக் கூடியவராக இருப்பார் என்றும் அதை தடுக்க என்ன செய்யலாம்?' என்றும் ஆலோசித்துள்ளனர்.
சமத்துவ கிறிஸ்மஸ் விழாவில், விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி. அதற்கு பின்னால் உள்ள அரசியல் கணக்குகள். Minorities Votes, வலிமையான கூட்டணி என சில திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. விஜய்யோடு கைகோர்க்க டிடிவி தீவிரம். விஜய்க்கு செக் வைக்கும் எடப்பாடியின் 'நியூ இயர் அசைன்மென்ட்'. இவை எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்து, மாற்று மைக்ரோ மூவில் மு.க ஸ்டாலின்.
விஜயின் ஈரோடு மீட்டிங் பற்றி நீண்ட நெடிய ஆலோசனை நடந்துள்ளது. 'நம்மை டார்கெட் செய்கிறார். சுதாரிக்க வேண்டும்' என எச்சரிக்கை கொடுக்கும் மாஜிக்கள். இதனால், புது ரூட்டை எடுத்திருக்கும் எடப்பாடி. மேலும் வேலுமணி டெல்லி சென்ற ரகசியம். வழக்கு நெருக்கடியிலிருந்து தப்பிக்க முக்கிய புள்ளிகளை சந்தித்துள்ளார்.இன்னொருபக்கம் செங்கோட்டையனுக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்திருக்கும் விஜய்.
கரூருக்கு அடுத்து, 82 நாட்களுக்குப் பிறகு, ஈரோட்டில் விஜய். 'வாக்குறுதிகளை தவறிய திமுக, தீயசக்தி திமுக' என வழக்கமான அட்டாக் அதேநேரம் வழக்கம்போல பாஜக-அதிமுக-விடம் அடக்கி வாசித்த விஜய்.இதற்குள்ளே, தன் சொந்த பகை தீர்க்கும் கே.ஏ செங்கோட்டையன்.த.வெ.க-வின் ஈரோடு மீட்டிங் வெற்றியா...தோல்வியா..?
'டிசம்பர் 18' ஈரோட்டில் TVK மீட்டிங். இதில் செங்கோட்டையனுக்கு எக்ஸாம் வைத்துள்ளார் விஜய் என்கிறார்கள். இந்த மீட்டிங் சக்சஸானால் ,பல பிரச்சனைகள் தீரும். ரூட் க்ளியராகும்' என கணக்கு போடும் விஜய். இன்னொருபக்கம், 'டிச 29, பல்லடத்தில், திமுக மேற்கு மண்டல மகிளிரணி மாநாட்டை' அறிவித்துள்ளார் மு.க ஸ்டாலின். இதற்கு பின்னால், ' டார்கெட் விஜய்' என்கிற அரசியல் உள்ளது. அதையொட்டியே, களத்திற்கு கனிமொழியை அனுப்பியுள்ளார் மு.க ஸ்டாலின் என்கிறார்கள்.
கரூருக்கு பிறகு 82 நாட்கள் கழித்து, டிசம்பர் 18ஆம் தேதி, ஈரோட்டில் மக்களை சந்திக்கிறார் விஜய். கோட்டை கனவோடு இந்த மீட்டிங்கை முன்னெடுத்தாலும் உள்ளுக்குள் பல்வேறு சிக்கல்கள், விஜயை மிரட்டுகின்றன. அதே நேரத்தில் இதை தடுக்கும் வகையில் கே.ஏ செங்கோட்டையன் ஒரு எட்டு ஃபார்முலாவை வகுத்துக் கொடுத்துள்ளார் . அடுத்ததாக சிறுபான்மையினர், மீனவர் சமூக மக்களை நோக்கி விஜய் பயணத்தை கட்டமைக்கிறார். இதில் முக்கியமாக தேர்தல் வாக்குறுதி தயார்படுத்தும் பணிகளும் தொடங்கியுள்ளது என்கிறார்கள் . விஜய்க்கு சக்சஸ் கொடுக்குமா கே.ஏ.எஸ் ஃபார்முலா 10?
ஒருபக்கம் பாஜக,மறுபக்கம் விஜய், இருதரப்பையும் வீழ்த்தும் வியூகங்களை, திருண்ணாமலையில் வகுத்துள்ளார் மு.க ஸ்டாலின். இதில் இளைஞர்களை வைத்து புது பிளானை போட்டுள்ளார் உதயநிதி. இதை முறியடிக்க, 80 தொகுதிகள் லிஸ்ட் எடுத்த அமித் ஷா. இன்னொருபுறம், பொங்கல் விழாவை முன்னெடுக்கும் மோடி .கருத்தியல்ரீதியிலான வார் ஸ்டார்ட்.
த.வெ.க மா.செ கூட்டத்து மினிட்ஸ். விஜய் தான் சி.எம் வேட்பாளர் என மீண்டும் அறிவித்து சிலவற்றை முன்னெடுக்கிறார்கள். அதிமுக இல்லாமல் மாற்று கூட்டணிக்கான முயற்சிகள் அதில் முக்கியமாக பாமக. இன்னொருபக்கம் எல்லாவற்றுக்கும் கவுன்ட்டர் கொடுக்கும் வகையில் 17 லட்சம் புதிய மகளிருக்கு உரிமைத் தொகை, உதயநிதியின் வடக்கு மண்டல இளைஞரணி மீட்டிங் ( 1.30 லட்சம் நிர்வாகிகள். திருவண்ணாமலையில் டிச 14 ) என மு.க ஸ்டாலின் தீவிரம்
அடுத்த 100 நாட்களில் அமைச்சர்கள் உள்ளே இருப்பார்கள், நாம் 210 தொகுதிகளில் வென்று, தனித்து ஆட்சி அமைப்போம் என்று பேசியுள்ளார் எடப்பாடி. கூட்டணி ஆட்சி எனும் அமித் ஷா கருத்துக்கு, மாற்றாக இதை முன்வைத்துள்ளார்.அதேநேரம் எடப்பாடி-யிடம் பேசி சரிக்கட்ட நயினார் நாகேந்திரன், ஓபிஎஸ்,டி.டி.வி பேசி சரிக்கட்ட அண்ணாமலை என்று காய்நகர்த்துகிறார் அமித் ஷா.எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை என்றாலும் நெகடிவாக எதுவும் அமையவில்லை.வைத்திலிங்கம் உள்ளே வந்தால் நல்லது என்று கணக்கு போடும் விஜய்.
அதிமுக பொதுக்குழுவில் 13 அமைச்சர்களை டார்கெட் செய்தும், துரைமுருகனுக்கு தூண்டில் போடும் வகையில் சிலவற்றை முன்னெடுத்தார் எடப்பாடி.16 தீர்மானங்களில், பாஜக-வுக்கு ஆதரவாக சில விஷயங்களை முன்னெடுத்தாலும், இன்னொரு பக்கம் 'அதிமுக தான் ஆட்சி அமைக்கும்' என அமித் ஷா-வின் கூட்டணி ஆட்சி கனவை தகர்த்துள்ளார் எடப்பாடி. அவரின் இந்த புது வகையான பொதுக்குழு ப்ளூபிரின்ட் வொர்க் அவுட் ஆகுமா?
72 நாட்களுக்கு, புதுவையில், ஓபன் மைதானத்தில் பேசியுள்ளார் விஜய். இங்கும் தூக்கலான திமுக அட்டாக், சாஃப்டான பாஜக அட்டாக். பின்னணியில் சில கணக்குகள்.மறுபுறம் 'ரூ 1020 கோடி முறைகேடு' எனும் அமலாக்கத்துறை கடிதம் மூலம், கே.என் நேருவை டார்கெட் செய்யும் எடப்பாடி.'தமிழ்நாடு-புதுவை' காட்சிகளால், மனம் குளிரும் டெல்லி.
'தமிழ்நாட்டில் திமுக ஆட்சி, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் ஆட்சி இரண்டையும் துடைத்தெறிவோம்' - என அமித் ஷா சபதம். 'இறங்கி சிக்ஸர் அடிப்போம்' என மு.க ஸ்டாலின் பதிலடி. இதில் 'பலமான கூட்டணி, திருப்பரங்குன்றம் விவகாரம், மந்திரிகள் டார்கெட்' என ஆளுக்கு 8 கணக்குகள் போட்டு வேகமெடுகின்றனர். முக்கியமாக, இருதரப்புக்கும், பெரும் நெருக்கடிகளை கொடுக்கும் விஜய்.
விஜயை சந்தித்த காங்கிரஸ் பிரவீன். ராகுலின் நெருங்கிய நண்பர் என்பதால் இதை சீரியசாக பார்க்கும் அறிவாலயம். 'திமுகவிடம் அதிக தொகுதிகளைப் பெற, மீண்டும் தவெகவுக்கு ரூட் எடுத்து பல்ஸ் பார்க்கிறதா காங்கிரஸ்?' என டவுட். அதே நேரத்தில், 'அட்டாக் பிஜேபி' என்கிற ரூட்டில் பாசிட்டிவாக பயணிப்பதால், ரொம்பவே ரிலாக்ஸாக இருக்கிறார் மு.க ஸ்டாலின் என்கிறார்கள். இன்னொரு பக்கம், '80 தொகுதிகள் பாசிட்டிவாக உள்ளதாக விஜய்க்கு வந்த சீக்ரெட் சர்வே ரிப்போர்ட்டால் ஹாப்பி.அதே நேரத்தில், பாமகவிலோ,'மாம்பழ சின்னம் அன்புமணிக்கு கிடைக்கக்கூடாது' என சபதமே போட்டிருக்கும் ராமதாஸ்.
விடாமுயற்சி VKS...கடைசி நம்பிக்கை OPS...டெல்லி சிக்னல்!எக்கச்சக்க புயல்கள்...கரை சேருமா எடப்பாடியின் கப்பல்?
காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழுவினர், மு.க ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு சம்பந்தமாக பேச்சுவார்த்தை. '80 தொகுதிகள் வரை கேட்கும் காங்கிரஸ் மற்றும் ஆட்சியில் பங்கு' இந்த இரட்டை டிமாண்டுகள், அறிவாலயத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேறொரு முடிவில் மு.க ஸ்டாலின். இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ்-ஸிடம் அமித்ஷா கொடுத்திருக்கும் உத்தரவாதம். அதனால் ஓ.பி.எஸ் ரிலாக்ஸ் ஆனால் கொதிக்கும் அவரின் டீம்.
'மாற்று கட்சி ரூட் எடுக்கும் மாஜிக்களை சரிகட்டுவது, செங்கோட்டையனுக்கு கோபியிலேயே செல்வாக்கு இல்லை என நிரூபிப்பது, அவருக்கு கொடுக்கும் அடியின் மூலம், விஜய்க்கு பாடம் புகட்டுவது' என எடப்பாடி, புது புளூபிரிண்டை கையில் எடுத்துள்ளார். இன்னொருபக்கம், 'ஓ.பி.எஸ், டி.டி.வி, வி.கே.எஸ் இவங்கள நம்புனா வேலைக்கு ஆவாது' என த.வெ.க ரூட் எடுத்து எஸ்கேப் ஆகியுள்ளார் செங்கோட்டையன். இதில் இந்த மூன்று தரப்புமே அப்செட்.எடப்பாடி-க்கு நெருக்கடி கொடுக்க வேறு திட்டங்களை போடுகின்றனர்.அட்லீஸ்ட் செங்கோட்டையன் மூலம் த.வெ .க கூட்டணி சேர்ந்து அதிக தொகுதிகளைப் பெற பிளான்.
'50 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன், த.வெ.க-வில் இணைந்தார். விஜயிடம் சில உத்தரவாதங்களை கொடுத்துள்ளார். அதே நேரத்தில், முக்கியமான அசைன்மென்ட் கொடுத்துள்ளார் விஜய். இந்த 'முதல் அசைன்மென்டை' செங்கோட்டையன் சக்சஸ் செய்தால், அது எடப்பாடி-க்கு பெரும் பாதிப்புகளை கொடுக்கும். இன்னொரு பக்கம், எடப்பாடி-க்காக ஃபீல் பண்ணும் மு.க ஸ்டாலின். ஆக்சன் அதிரடி அரசியல் ஸ்டார்ட்.
செங்கோட்டையன் தவெக-வில் இணையப் போகிறாரா? விஜய் டீமுடன் டீல் நடந்து வருகிறது. செங்கோட்டையனை சேர்த்துக் கொண்டால், ஒரு 5 வகைகளில், விஜய்க்கு லாபம் என கணக்கிடுகிறார்கள். இன்னொருபக்கம் திமுக பக்கம் கொண்டு வர சேகர்பாபு பேசி வருகிறார். எங்கே சேர்ந்தாலும் அது எடப்பாடி-கு பெரிய இழப்பு தான்.செங்கோட்டையனை சுற்றி என்ன நடக்கிறது?மூவ் என்ன?
கோவை பறந்த ஸ்டாலின். இரண்டு நாள் முன்பு மதுரை சென்ற உதயநிதி. வீக் ஏரியாக்களை strenghthen செய்வது, விஜய் வருகையால், இளம் வாக்காளர்களிடம் கூடுதல் கவனம் செலுத்தும் உதயநிதி , ஸ்டாலினின் எடப்பாடி அட்டாக், இன்னொரு பக்கம் வலிமையான கூட்டணி அமைக்கும் பிளான். முக்கியமாக இளைஞர்களுக்கு 5 அசைன்மென்ட்-களை கொடுத்திருக்கும் உதயநிதி என திமுக நகர்வு.அடுத்து, எந்த திசையை நோக்கி ஓ.பி.எஸ் பயணிக்கிறார்? நேற்றைய கூட்டத்தை தொடர்ந்து இப்போதுவரை அங்கே என்ன நடக்கிறது? குறிப்பாக 3 கேள்விகள் அடங்கிய ஒரு படிவத்தை கொடுத்து, திமுகவா...தவெகவா ? என சர்வே எடுத்த ஓ.பி.எஸ்.