Discover
SBS Tamil - SBS தமிழ்
SBS Tamil - SBS தமிழ்
Author: SBS
Subscribed: 1,829Played: 35,934Subscribe
Share
© Copyright 2025, Special Broadcasting Services
Description
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
3429 Episodes
Reverse
விக்டோரியா மாநிலத்தில் உயர்தரப் பாடசாலை மாணவர்களின் இறுதிப் பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலையில், பரீட்சைகளை நிர்வகிக்கும் VCAA நிறுவனத்தின் இணையத்தளம் இணைய ஊடுருவிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. பரீட்சை வினாத்தாள்கள் திருடப்பட்டுள்ளதாக இணைய ஊடுருவி ஒருவர் கூறியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன. இது தொடர்பான செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.#sbsaudiopodcastVCAA Investigates Cyberattack on Website During Student Exam Period
பார்வை இழப்பு ஏற்படுவதில் Glaucoma என்று அழைக்கப்படும் கண் அழுத்த நோயும் முக்கிய இடம் வகிக்கிறது. இந்தநிலையில் Glaucoma பற்றியும் அதைத் தடுக்க முடியுமா என்பது பற்றியும் விளக்கமளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்#sbsaudiopodcastWhat causes glaucoma?
விடுமுறை காலங்களில், நீண்ட தூரம் வாகனத்தில் பயணிக்கும் போது நாம் திட்டமிட வேண்டிய விடயங்கள் பல உள்ளன. இவை குறித்து சிட்னியில் உள்ள Sydney Auto Repairs இன் உரிமையாளரும் ஆட்டோ மொபைல் துறையில் 30 வருட அனுபவம் உள்ளவருமான போல்ராஜ் மற்றும் மெல்பனில் வசிக்கும் கந்தையா குமாரதாசன் ஆகியோருடன் கலந்துரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். இந்நிகழ்ச்சி ஒரு மறு ஒலிபரப்பு.#sbsaudiopodcastBefore a long drive: What every traveller should know
பிலிப்பைன்ஸ் இல் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி முதல் பன்னிரண்டாம் தேதி வரை நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவை சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி சிறீசேயாநந்தபவன் அவர்கள் இரண்டு தங்கப் பதக்கங்கள், ஒரு வெண்கலப் பதக்கம் மற்றும் 5000 மீட்டர் ஓட்டப் போட்டியில் நான்காம் இடத்தில் வென்றார். அப்போது 72 வயதாகியிருந்த இவர் சிறைச்சாலைகளில் உத்தியோகத்தராகப் பணியாற்றி விட்டு ஓய்வு பெற்றிந்தவர். இவரது பின்னணி குறித்தும், அவரது தடகள சாதனைகள் குறித்தும் 2023ஆம் ஆண்டு குலசேகரம் சஞ்சயன் நடத்திய உரையாடலின் மறு ஒலிபரப்பு.#sbsaudiopodcastNo Shoes, Age is no barrier, yet she wins medals after medals
‘Spirit of Australia’ – ‘ஆஸ்திரேலியாவின் ஆன்மா’ என்று தன்னை அழைத்துக்கொள்ளும் நம் விமான நிறுவனம் Qantas தனது அலுவலகப் பிரிவுகளில் சுமார் 850 பணியிடங்களைக் குறைத்து, அந்தப் பணிகளில் பெரும்பகுதியை இந்தியாவுக்கு மாற்றப் போவதாக அறிவித்திருக்கிறது.இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.#sbsaudiopodcastQantas jobs take flight - 850 roles head to India








