DiscoverAtmanandalahari
Atmanandalahari
Claim Ownership

Atmanandalahari

Author: atmanandalahari

Subscribed: 0Played: 1
Share

Description

Self is absolute existence, absolute knowingness and absolute happiness. The real nature of self is Sat, Chit, Ananda. Let us explore the ancient scriptures, Upanishads, Bhagavad Gita, Brahma Sutra and Prakarana Granthas as taught by our teachers in this podcast. Let the light of knowledge remove the darkness of ignorance for everyone. Let the plurality, duality be dismissed and absolute oneness be understood. This will be a multilingual podcast with episodes in English, Tamil and Sanskrit.
எங்கும் நிறைந்த இருப்பாய், மங்காத சித்தாய் பொங்கும் ஆநந்த பொலிவான மெய்ப்பொருளை, ஆத்மாவை, தங்கு தடையில்லா தத்துவத்தை, இரண்டற்ற ஒன்றான அத்வைத கருத்துக்களை இந்த வலையொலிப் பதிவில் பகிர்ந்துகொள்வோம். உபநிடதங்கள், பகவத் கீதை, ப்ரம்மசூத்ர கருத்துக்களையும், வேதாந்த நூல்களையும் ஆராய்வோம். வாழையடி வாழையாய் வந்த இந்த அறிவொளியில், அறியாமை இருள் அகலட்டும். இந்த வலையொலி ஆங்கிலம், தமிழ், மற்றும் வடமொழியில் ஒலிக்கும் .

67 Episodes
Reverse
In Sanātana Dharma, there are 18 great Mahāpurāṇas — and among them, the Śrīmad Bhāgavatam shines as the most beloved. The Purāṇas use personification, magnification, and deep symbolism to make timeless truths come alive. Beneath the captivating stories lies the ultimate purpose: guiding us toward the One Reality. In this episode, we explore the Śrīmad Bhāgavatam through the lens of Advaita Vedānta, uncovering the hidden meanings and spiritual insights behind its symbolism. This episode is rendered in English, with select verses in Tamil and Sanskrit.
ஈன மிகுத்துள பிறவி-இந்த திருப்புகழில் இருக்கும் வேதாந்த கருத்துக்களை இந்த பதிவில் காணலாம். இறையருள் எங்கும் காற்று போல் பரவியிருக்கிறது. வாழ்க்கைப் படகை காற்று வீசும் திசையில் திருப்புவதே சுய முயற்சி. இறையருளும் சுய முயற்சியும் நாணயத்தின் இருபக்கங்கள் போல் அமைந்து வாழ்க்கையை வழிநடத்த வேண்டும். இவற்றுடன் குருவருள், சாஸ்த்திர அருளும்  இணைய  பயணம் இனிதே அமையும் 
உலக பசு பாசம் இந்த திருப்புகழில் இருக்கும் வேதாந்த கருத்துக்களை இந்த பதிவில் காணலாம். மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ள நான்கு தகுதிகள் (சாதன சதுஷ்டயம்) சொல்லப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு  1. விவேகம்  2. வைராக்யம்  3. சமா ஆதி ஷட்சம்பத்தி (சமா,தமா, திதிக்ஷா, உபரதி, ஸ்ரத்தா, சமாதானம்) 4. முமுக்ஷுத்வம்   
அற்றைக்கு இரை தேடி இந்த திருப்புகழில் இருக்கும் வேதாந்த கருத்துக்களை இந்த பதிவில் காணலாம். அறம், பொருள், இன்பம், வீடு ( தர்மம்  அர்த்தம்  காமம் மோட்சம்) இவை நான்குமே புருஷார்த்தம் எனப்படும். இவற்றில் அறத்துடன் பொருளை ஈட்டி , இன்பத்தை நுகரும் மனிதன், ஒரு காலகட்டத்தில் இது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோள் இல்லை. இதற்கு மேல் ஏதோ ஒன்று உள்ளது என்று உணரும் போது அவன் வீடு பேறு அல்லது மோட்சத்திற்கு தயாராகிறான். 
Thiruppugazhil Vedantam -1  இறை வணக்கம் - கைத்தல நிறைகனி இந்த திருப்புகழில் இருக்கும் வேதாந்த கருத்துக்களை இந்த பதிவில் காணலாம். தடைகளை நீக்கும் விநாயகரை வணங்கி நமது வேதாந்த பயணத்தை மேற்கொள்வோம். அத்யாத்ம, அதிபூத, அதிதெய்வ தடைகள் விலகி, சகுண உபாஸனம் மூலம் பக்தியை வளர்த்து, நிர்குண பரப்பிரம்மத்தை உணர்ந்து கொள்வோம்.
loading
Comments