இலங்கையில் தேயிலையின் தந்தை ‘ஜேம்ஸ் டெய்லர்’ | கண்டி சீமை - 2 | இரா. சடகோபன்
Description
இலங்கையில் தேயிலைத் தொழில்துறை அதன் நூற்றி ஐம்பது வருடகால வரலாற்றைப் பதிவு செய்து கொண்ட போது (1867- 2017), தேயிலைத் தொழிலின் தந்தையெனப் போற்றப்படும் ஜேம்ஸ் டெய்லரும் கௌரவிக்கப்பட்டு நினைவு கூரப்பட்டார்.
ஜேம்ஸ் டெய்லரும் ஏனைய தோட்டத்துரைகளை போலவே ஒரு தோட்டத் துரையாக இருந்தவர் தான். ஆனால் ஒரு சராசரி தோட்டத் துரையாக இருந்து விட்டு போய் விடாமல் தனது மிகக் கடின உழைப்பால் தேயிலைப் பொருளாதாரம் உருவாகக் காரணமாக இருந்து, இந்த நாட்டின் வரலாற்றில் நிரந்தரமான ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர். இவர் தனது தோட்டத்தில் கூலி வேலை செய்த தொழிலாளர்கள் மீது அன்பும் பரிவும் காட்டியதனால் அவர்கள் அவரை “சாமித்துரை” என்ற பட்டப்பெயர் வைத்து அவரைப் போற்றிப் புகழ்ந்தனர். இலங்கையின் மலைநாட்டுப் பகுதியில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான கோப்பித் தோட்டங்கள் உருவாகியிருந்தன.
அக்காலத்தில் ஜேம்ஸ் டெய்லரின் தோட்டம் எல்லாவற்றுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தது. ஒவ்வொரு நாளும் அவரையும் அவரது தோட்டத்தையும் பார்த்துவிட்டுப் போகவென பல விருந்தாளிகள் வந்த வண்ணமிருந்தனர். அப்படி வந்து போனவர்கள் தோட்டத்தில் அவரது செயற்பாடுகளைப் பார்த்துவிட்டு அவர்களும் தமது தோட்டங்களில் ஜேம்ஸ் டெய்லரின் செயல்முறைகளைப் பின்பற்றத் தொடங்கினர்.
#realestate #upcountry #kandy #upcountrysrilanka #TeaWorkers #upcountrypoliticians #teaplantation #teaestates #teaharvester #மலையகம் #தோட்டத்தொழிலாளர்கள் #தேயிலைத்தோட்டம் #educationinupcountry #arrack