Discoverஎழுநாகனடாவின் பழங்குடி மக்கள் | சமஷ்டி அரசியல் முறைமைகள் | கந்தையா சண்முகலிங்கம்
கனடாவின் பழங்குடி மக்கள் | சமஷ்டி அரசியல் முறைமைகள் | கந்தையா சண்முகலிங்கம்

கனடாவின் பழங்குடி மக்கள் | சமஷ்டி அரசியல் முறைமைகள் | கந்தையா சண்முகலிங்கம்

Update: 2022-12-08
Share

Description

ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா என்ற இரு நாடுகளையும் போன்றே கனடாவும், குடியேறிகள் பெரும்பான்மையினராக அமைந்த குடியேறிகள் சமூகம் (Settler Society ) ஆகும். குடியேறிகள் சமூகங்கள் உள்ள நாடுகளில் குடியேறிய ஐரோப்பியர் சுதேசிகளான பழங்குடியினரை நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு துரத்தி விளிம்பு நிலை வாழ்க்கைக்கு தள்ளினர்.


1763ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசுப் பிரகடனத்தில் சுதேசிகளுக்கும் ஐரோப்பியர்களுக்குமிடையிலான பேச்சுவார்த்தை அடிப்படையில் பங்குடமைச் சமூகமாக கனடா விளங்கவேண்டும் என்று கூறப்பட்டதெனினும், சுதேசிகளின் கீழ்ப்பட்ட நிலை தொடரலாயிற்று. சுதேசிகளின் நிலங்களை ஐரோப்பியர் அபகரித்தல், இந்தியர்களுக்கான ஒதுக்கிடப்பகுதிகளை உருவாக்குதல், பழங்குடியினரின் பாதுகாப்பை வழங்கத் தவறிய உடன்படிக்கைகளைச் செய்தல் போன்ற வழிகளில் பழங்குடியினர் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டனர்.


பழங்குடிமக்கள் விவகாரம் சமஷ்டி அரசாங்கத்தின் பொறுப்பாக இருந்தது. 1876 இல் இந்தியர் சட்டம் (Indian Act 1876) அமுல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் இந்தியர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்குப் பதிலாக அவர்களது உரிமைகளைப் பறித்து காலனித்துவ ஆட்சி முறைக்குள் அவர்களைக் கொண்டு வந்தது. எந்த மக்களைப் பாதுகாக்கவென இந்தச் சட்டம் இயற்றப்பட்டதோ அந்த மக்களை ஒடுக்குவதற்கும் அது பயன்படுத்தப்பட்டது என்று கரோல்ட் கார்டினர் என்பவர் கூறியிருக்கிறார். கனடாவின் மக்கள் இன்று திருத்த வேண்டிய வரலாற்றுத் தவறுகளில் பழங்குடியினர் பிரச்சினை ஒன்றாக உள்ளது.


கனடாவில் அரசியல் யாப்புவாதம் (Constitutionalism) வளர்ச்சியடைவதற்கு பழங்குடிகள் மிகுந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். அரசியல் யாப்பின் மூலமான தீர்வுகளில் தொடர்ச்சி (Continuity), பரஸ்பர அங்கீகாரம் (Mutual Recognition) சம்மதம் (Consent) அரசியல் இணக்கமும் மதிப்பும் ஆகிய கருத்துகள் பரவலாக்கப்படுவதற்கு இவர்களின் பங்களிப்பு உதவியது. நீண்டகாலமாக கனடாவில் இருந்து வந்த காலனித்துவச் சிந்தனையை தோலுரித்துக் காட்டுவதற்கு பழங்குடி மக்கள் தலைவர்களின் அரசியல் பங்களிப்பு உதவியது.


பழங்குடிகளின் இன்றைய அரசியல் இயக்கம் 1960 களில் ஆரம்பித்தது. கியுபெக்கின் முன்மாதிரியால் இது ஊக்கம் பெற்றது. சர்வதேச மட்டத்தில் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சியும், பழங்குடி மக்கள் பிரச்சினைகள் முக்கியத்துவம் பெற்றமையும் பழங்குடியினரின் அரசியல் இயக்கத்திற்கு ஊக்கம் அளித்தன.


1969 ஆம் ஆண்டில் கனடா அரசாங்கம் வெள்ளையறிக்கையொன்றை வெளியிட்டது. இந்த அறிக்கை பழங்குடியினருக்கு எதிரான பாரபட்சம் காட்டுதலை ஒழித்தல் எப்படி என்ற திட்டத்தை முன்வைத்தது. இதன்படி பழங்குடிகள் கனடாவின் ஏனைய பிரஜைகளிற்குச் சமதையான அந்தஸ்தையும் வாழ்க்கையையும் பெறுவர் என்று கூறப்பட்டது. இது உண்மையில் உள்ளீர்த்தல் அல்லது ஒருங்கிணைப்பு சிந்தனையாகும்.


மரபுவழிப் பழங்குடிச் சமூகங்களிற்கு சுயாட்சியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நகர்ப் பகுதிகளில் குடியேறி வாழும் பழங்குடி மக்கள் மீதும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் பிரச்சினைகளைத் தோற்றுவித்தன.

Comments 
loading
In Channel
loading
00:00
00:00
1.0x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

கனடாவின் பழங்குடி மக்கள் | சமஷ்டி அரசியல் முறைமைகள் | கந்தையா சண்முகலிங்கம்

கனடாவின் பழங்குடி மக்கள் | சமஷ்டி அரசியல் முறைமைகள் | கந்தையா சண்முகலிங்கம்

Ezhuna