கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் ஆற்றுகைகளும் அதன் இன்றைய நிலையும் | வேடர் மானிடவியல் | கமலநாதன் பத்திநாதன்
Description
இலங்கை பூர்வீக குடிகளாக சிங்களவர்களை பேரினவாதச் சிந்தனை பல வரலாற்று புனைவுகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டு வந்திருப்பினும், இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் வேடுவர்களே. அதனடிப்படையில், கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் வேடுவர்களின் இருப்பியல் பற்றி 'வேடர் மானிடவியல்' என்ற இந்தக் கட்டுரைத்தொடர் ஆய்வுப்பாங்கில் விவரிக்கின்றது.
வேடுவர்களுக்கே உரித்தான அடையாளங்களை வெளிக்கொணர்வதாகவும், இதுவரை நாம் அறிந்திடாத வேடுவர் குணமாக்கல் சடங்குகள், இயற்கையுடன் பின்னிப்பிணைந்த அவர்களின் வாழ்வியல், வேடுவர் மீதான ஆதிக்க சாதியினரின் பாகுபாடுகள் என்பன பிரதானமாகக் கண்டறியப்பட்டு, அவை தொடரின் ஊடாக முன்வைக்கப்படுகின்றன. அத்துடன் காலனிய எண்ண மேலாதிக்கத்துள் சிக்குண்டு அழிந்துக்கொண்டிருக்கும் அவர் தம் மானுட நகர்வுகள் முதலான பல விடயங்களும் இதில் பேசப்படுகின்றன.