பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்த இந்தியர்களும், வெளிநாடுகளில் இந்திய சமூகங்களும் ஓர் ஒப்பீட்டுக் கண்ணோட்டம் -பகுதி 2 | மலையகம் : சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் | முத்துவடிவு சின்னத்தம்
Description
இலங்கையில் இந்திய சமூகமானது இன்று சுமார் பத்து இலட்சம் பேர்களைக் கொண்டதாக உள்ளது. 1946ல் மொத்த சனத்தொகையில் 11.7வீதமாகவிருந்த இவர்களின் பங்கு, சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் பலர் தாயகம் திரும்பியதால், 1981ம் ஆண்டு 5 வீதமாகக் குறைந்தது. மேலும், இலங்கைக் குடியுரிமை பெற்ற பலர் தம்மை இலங்கைத் தமிழரென குடித்தொகைக் கணக்கெடுப்பில் பதிந்து கொள்வதாலேயே உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களில் மேற்படி வீழ்ச்சி காணப்படுகின்றது.
பர்மிய இந்தியரைப் பற்றி எழுதிய சக்ரவர்த்தி, தனது நூலில், பர்மாவில் வாழ்ந்து, கஷ்டப்பட்டு உழைத்து அந்நாட்டினது அபிவிருத்திக்குப் பெரும் பங்கினையளித்த ஒரு சமூகம், இறுதியாகத் தனது வீடுகளையும் தொழில்களையும் விட்டுத்துரத்தியடிக்கப்பட்ட ஒரு சோகமான கதையென அவர்களது வரலாற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
மலேசியா, இலங்கை, பர்மா ஆகிய மூன்று நாடுகளிலேயே இந்தியருக்கு எதிரான கலவரங்கள் நடைபெற்றுள்ளன. பர்மிய தேசிய வாதம் எழுந்த போது 1938ல் சுமார் 400000 இந்தியர்கள் பர்மாவினின்றும் வெளியேற்றப்பட்டனர். இதே விதமான இந்தியரின் வெளியேற்றம் 1948ல் பர்மா பிரித்தானிய குடியேற்ற ஆட்சியினின்று விடுதலைப் பெற்ற வேளையிலும் 1960ம் ஆண்டுகளில் நெவினினது (Nevin) தேசிய கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்ட பொழுதும் இடம்பெற்றன. இலங்கையில் (இந்தியத்) தமிழருக்கெதிரான கலவரங்கள் நாட்டின் சுதேச தமிழர்களின் போராட்டங்களுடன் தொடர்புள்ளனவாகும்.
#ezhuna #upcountry #malaysia #malayalam #மலையகம் #SriLanka #இந்தியா #மலேசியா