மருத்துவர் கிறீனின் யாழ்ப்பாண வருகை | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன்
Description
அமெரிக்காவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த 3 ஆவது தகுதிவாய்ந்த மருத்துவர் சாமுவேல் பிஸ்க் கிறீன். கிறீன் 1841 இல் நியூயோர்க்கிலுள்ள மருத்துவர்கள் மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்தார்.
எப்போதும் ஆன்மிகத்திலும் மிசனரி சேவையிலும் நாட்டமுள்ளவராக விளங்கிய மருத்துவர் கிறீன், பிரதேசங்களுக்கு மிசன் தொண்டர்களை அனுப்பும் அமெரிக்க மிசன் பணியகத்துடன் 1846 இல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.
இலங்கையில் அமெரிக்க மருத்துவ மிசனரியின் பணியை ஆற்றுவதற்கு விரும்பிய மருத்துவர் கிறீன், தமது விருப்பத்தைக் கடிதம் மூலம், பிரதேசங்களுக்கு மிசன் தொண்டர்களை அனுப்பும் அமெரிக்க மிசன் பணியகத்துக்கு (ABCFM) அனுப்பினார். கிறீனது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்க மிசன் பணியகம் கிறீனுக்கு அனுமதி வழங்கும் நியமனக் கடிதத்தை அனுப்பியது.
கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, மற்றும் ஜேர்மன் முதலான மொழிகளைக் கற்றிருந்த கிறீன் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவதற்கு முன்பே அமெரிக்காவிலே தமிழ் மொழியைக் கற்க விரும்பினார்.
மருத்துவர் கிறீன், போஸ்ரன் துறைமுகத்திலிருந்து 1847 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி “ஜேக்கப் பேர்க்கின்ஸ்” என்ற கப்பலில் யாழ்ப்பாணம் நோக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தை ஆரம்பித்தார். அந்தக் கப்பல், அத்திலாந்திக் சமுத்திரத்தைக் கடந்து ஆபிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைத் தாண்டி இலங்கைத் தீவைச் சுற்றிச் சென்று 1847 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 4 ஆம் திகதி சென்னையை அடையும் வரை நான்கரை மாதங்கள் எங்குமே தரிக்கவில்லை. மருத்துவர் கிறீன் சென்னையில் அமெரிக்க மிசனரிகளுடன் இரு வாரங்கள் தங்கியிருந்துவிட்டு, 1847 ஆம் ஆண்டு ஓக்ரோபர் மாதம் 6 ஆம் திகதி பருத்தித்துறை வந்தடைந்தார்.
#SamuelFiskGreen #greenmemorialhospital #ABCFM #scudderfamily #TheScudderAssociationFoundation #firstmedicalmissionary #missionaries #missionaryjaffna #Vellore #MCMWorldwide #zenana_missions_srilanka #JaffnaCollege