மூலிகை மருந்துகள் | யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் | முனைவர் பால. சிவகடாட்சம்
Description
அரபு நாட்டவர்களால் அருமருந்தாக எண்ணப்படுவது கருஞ்சீரகம். சாவு ஒன்றைத்தவிர மீதி எல்லா நோய்களையும் தீர்த்துவைக்கும் ஆற்றல் கருஞ்சீரகத்துக்கு உண்டு என முகம்மது நபி அவர்கள் கூறியதாக ஒரு செய்தியும் உள்ளது. ஏராளமான இரசாயனப்பொருட்கள் கருஞ்சீரகத்தில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சதகுப்பை மூலக்கடுப்பு, தலைவலி, காய்ச்சல் என்பவற்றுக்கு மருந்தாகப் பயன்படும். வயிற்றோட்டம், வாய்வு, செமியாக்குணம், வயிற்றுவலி, சுரம் போன்ற சாதாரண சுகவீனங்களுக்கு சதகுப்பை வீட்டுமருந்தாகப் பயன்படுகிறது. சதகுப்பையின் இலைகள், கனிகள் இரண்டுமே மருந்தாகப் பயன்படுகின்றன.
நெஞ்சில் சளிக்கட்டு, சுவாசிப்பதில் கஷ்டம் போன்ற சுவாசத்தொகுதி சம்பந்தமான நோய்களுக்கு அரத்தை மருந்தாகப் பயன்படுகின்றது. அரத்தையில் சித்தரத்தை, பேரரத்தை என்னும் இரு இனங்கள் உள்ளன. இரண்டும் மருந்தாகப் பயன்படுகின்றன.
#சித்தமருத்துவம் #சித்தர்கள் #இரசவர்க்கம் #பெருங்காயம் #Asafoetida #Ginger #இஞ்சி #உள்ளி #Garlic #இலவங்கப்பட்டை #cinnamon #சாதிக்காய் #nutmeg