வடக்கு – கிழக்கு மாகாணத்தினுடைய வளங்களும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தியும் | வடக்கு - கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தியும் | அமரசிங்கம் கேதீஸ்வரன்
Description
பிரதேச மட்ட வளங்களின் பயன்பாடு குறித்து உச்ச மட்ட கவனத்தில் கொள்ளாது தேசிய மட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார முன்மொழிவுகளினாலேயே சமமற்ற பிராந்திய வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற நியாயத்தைப் புறந்தள்ளிவிட முடியாது. இலங்கையின் மாகாணமட்ட அபிவிருத்தியில், மேல் மாகாணம் அதீத முன்னிலை பெறுவதற்கு இதுவே காரணமாகியுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 46 சதவீதமான பங்களிப்பை தனி ஒரு மாகாணமாக இம் மாகாணம் வழங்கி வருகின்றது. வடக்கு மாகாணம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 711,459 மில்லியன் ரூபாயும் கிழக்கு மாகாணம் 866,121 மில்லியன் ரூபாயும் பங்களிப்புச் செய்து வருகின்றது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10.47 சதவீதம் மட்டுமே. இதில் வடக்கு மாகாணம் 4.7 சதவீத பங்களிப்பையும் கிழக்கு மாகாணம் 5.77 சதவீத பங்களிப்பை மட்டுமே வழங்கி வருகின்றது.
நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ¼ பங்கை கொண்டுள்ள இவ்விரு மாகாணங்களும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்தினை மட்டுமே வழங்கி வருகின்றமை உள்ளூர் வளங்களின் முறையற்ற பயன்பாட்டுத்தன்மையை வெளிக்காட்டும் அல்லது முழுமை பயன்பாட்டையும் பெறவில்லை என்பதனை வெளிக்காட்டும் ஒரு குறியீடாகவே கருத முடிகிறது.
வடக்கு-கிழக்கு மாகாணங்களின் வளங்கள் பற்றிய பகுப்பாய்வும் பொருளாதார உந்தூக்கத்தை தரக்கூடிய நிலம், காடு, காலநிலை, சனத்தொகை, விவசாயம், கால்நடைவளர்ப்பு, மீன்பிடி, பொருளாதார உட்கட்டமைப்புக்கள், சமூகஉட்கட்டமைப்புக்கள், சக்திவளம், நீரும் நீர் மூலங்களும் போன்ற முக்கியமான வளங்களின் கிடைப்பனவும் பயன்பாடும் குறித்த விடயங்களை ஆய்வுக்குரியதாக்க வேண்டியது அவசியமாகும்.
#fishing #fishinglife #fishing #coastalcommunity #coastalcommunities #Jaffna #fishingcommunity #fishingcommunities #northernsrilanka #ruraleconomics #ruraldevelopment #socialimpact #socialgood #resources #poverty #foodsecurity #sustainabledevelopment #communitydevelopment #farming #livestock #poultryfarming