DiscoverTamil Poems | Blank Thoughts47. யாசிக்கிறேன் அருள்வாயா | PRAYING FOR GRACE
47. யாசிக்கிறேன் அருள்வாயா | PRAYING FOR GRACE

47. யாசிக்கிறேன் அருள்வாயா | PRAYING FOR GRACE

Update: 2020-08-16
Share

Description

அமைதியில் துயில்கொள்ளும்


ஐயனே! - வாழ்வில்


அமைதியை வேண்டுகிறோம்.


அருள்வாயா?


செத்தபின் சேர்வதெங்கே


மாமணியே! - வீடுபேறு


கிடைக்க வேண்டுகிறோம்


அருள்வாயா?


யாக்கையை என்செய்வாய்


யாதவனே! - எரித்தோ


புதைக்காமலிருக்கவோ வேண்டுகிறோம்.


அருள்வாயா?


பங்கம் விளைவிக்காத


பரமேஸ்வரனோ பரமபிதாவோ


பாவிகள் எங்கள் - உடல்


அழுகாதிருக்க வேண்டுகிறோம்.


அருள்வாயா?


சமுத்திரத்தில் எறிந்தால்


மீனினத்தைப் பெருக்குவாய்


அவற்றிற்கு தீனியாக்க - வரம்


வேண்டிநிற்கிறோம்.


அருள்வாயா?


மண்ணிலே எறிந்தால்


வல்லூறுகளைப் பெருக்குவாய்


எம்முடல் உணவாக….


யாசகம் கேட்கின்றோம் - எம்


யாக்கையை பணயம்வைத்து!


யாசிக்கிறோம் வரம்அருள்வாயா?

Comments 
In Channel
59. விழி | EYE

59. விழி | EYE

2020-08-1601:20

56. செவி | Ear

56. செவி | Ear

2020-08-1600:49

loading
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

47. யாசிக்கிறேன் அருள்வாயா | PRAYING FOR GRACE

47. யாசிக்கிறேன் அருள்வாயா | PRAYING FOR GRACE

Sumathy Gnanasegar