48. நட்பின் இலக்கணம் | A SYNTAX OF FRIENDSHIP
Update: 2020-08-16
Description
சிந்தையை சிதறடித்து
சிந்திக்க வைக்கும்நட்பு
சிலகாலம் வாழும்!
பந்தயத்தில் வந்தநட்பு
பைத்தியத்தில் போய்முடியும்!
வாதாடும் நட்பு
வாழ்வு காலம்
முழுதும் தொடரும்!
வாய்தா கேட்கும்நட்பு
சிலகாலம் வாழும் - இது
நம்பகமானதல்ல.
சிரிப்பவர்கள் அனைவரும்
சிந்தனையாளர்கள் அல்ல!
பழகுபவர் அனைவரும் - நமக்குப்
பாசத்தை யளிப்பவர்கள்அல்ல!
நாடிவரும் நட்பைவிட
தேடிஅடைந்த நட்பேசிறந்தது!
நகைப்பதைவிட்டு சிந்தித்து
தொடர்ந்த நட்புதனை
கத்தரிக்கத் தேவையில்லை.
உண்மை நட்பு
ஒட்டிய பசைபோல
ஒருசிறு புன்னகையில்
தேங்கி நிற்கும்!
நல்லோர்தம் நட்புகிட்டாவிடினும்
தீயோர்தம் நட்புகலவாமை
நல்ல ஜீவராசிகளுக்கென
விதிக்கப்பட்ட உன்னத
உயரிய கொள்கை
என்பதனை உணருங்கள்!
நலியும் நட்பைவிட
தெளிந்த நட்பே
தேவைநமக்கு - இதுவே
நட்பின் இலக்கணம்.
Comments
In Channel























