54. கண்ணீர்க் காவியம் | Poem about Tears
Description
கவிதை எழுத எழுதுகோலைக்
கையில் எடுத்தான் கவிஞன்.
முள்ளில்லாத மூளியான அதன்
முனையில் தன்னிதயத்தைப் பதித்தான்.
மையற்ற அதை நிரப்பதன்
கண்ணீருக்கு கரை கட்டினான்.
பலம் முழுதும் பிரயோகித்துப்
பழம்பறித்தும் பறித்தபழம் புளிப்பே!
புளிப்பு மிகுந்ததன் வாழ்வினையும்
புத்திசாலித் தனமாய் ஏடாக்கி,
வழுக்கி விழுந்தச் சறுக்கல்களை,
வகையாக வாழ்க்கை யாக்கி,
பாராட்டி சீராட்டி தாலாட்டி
வளர்த்த தமிழ்த்தாயின் மடியில்
அமர்ந்தவாறு அறுதியிட்டு எல்லாம்கூற
முனைந்த போதுதான் ஏற்கனவே
தான்கையில் எடுத்திருந்த ஏடு
நனைந்து விட்டிருந்தது தெரிந்தது!
பெய்தமழையால் அல்ல சொய்தகண்ணீரால்
மக்களின் கண்ணீர்க் கடலின்
அலையோசை கேட்காது - ஆனால்
அபலைகளின் அழுகைஒலி கேட்கும்.
அதிலேஒரு கண்ணீர்காவியம் பிறக்கும்.
இச்சகத்தில் ஒருவருக்கு உணவில்லையெனில்கூட
இச்சகத்தையே அழிப்போம் என்றகவிமாறி,
இச்சகத்தில் ஒருவருக்குநீதி இல்லையெனில்கூ























