57. விளங்காததில் வந்த வியப்பு | CONFUSED SURPRISE
Update: 2020-08-16
Description
எண்சாண் உடம்பின்
எண்ணற்ற சினைகளையும்
எழிலுறக் கற்பித்து,
எகாலஜியை இனிமையாய்விளக்கி
எம்பிரியாலஜியை எளிமையாக்கிய
எம்ஆசானின் மூளை
ஆயிரம்மலர்கள் மலர்ந்துமணம்வீசும்
அற்புதசோலை.
கரைபுரண்டோடும் நதிகளிலே
கரைசேர்ந்த கங்கைநதி அது.
ஓங்கி உயர்ந்த மலைகளிலே
மாணவர்களின் கண்மலர்களை
மலர்த்திநோக்க வைத்த
இமயமலை இது - இங்கேயுள்ள
விலங்கியலின் தொகுப்பு
விஞ்ஞானிகளையும் வியக்க
வைக்கும் பதிப்பு!
மொத்தத்தில் இதுஒரு
கன்னிமரா லைப்ரரி!
Comments
In Channel























