Amit shah போட்ட ஃபோன்கால், Vijay-க்கு தூண்டில்? | Elangovan Explains
Description
நீதிமன்றம் விஜய்க்கு கண்டனம் தெரிவித்திருந்த வேளையில், இன்னொரு பக்கம் விஜய்க்கு ஆதரவான குரலை வெளிப்படுத்துகிறார் எச். ராஜா. விஜய் தாமதமாக வந்ததில் என்ன தவறு? என கேட்கிறார். அதுதான் மோசமான துயரத்துக்கு முதன்மை காரணமாக அமையவில்லையா? என சமூக ஆர்வலர்களிடமிருந்து கேள்விகள் எதிரொலிக்கிறது. அதே நேரம், இரங்கல் டவீட் , பாஜகவின் எம்பிக்கள் குழு என விஜய்க்கு நேசக்கரம் நீட்டும் பாஜக. இதற்கு பின்னணியில் என்டிஏ கூட்டணியில் விஜய் இணைந்து கொள்ள வேண்டும் என ஒரு டீம் டீல் பேசி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், அமித் ஷாவுக்கு சென்ற தனியார் ஏஜென்சிஸ் சர்வே ரிப்போர்ட். அப்படி ஒரு கூட்டணி அமைந்தால், அதில் நமக்கு என்ன நன்மை, தீமை? என ஆலோசனையில் இறங்கியுள்ள மு.க ஸ்டாலின். இதில் புது ட்விஸ்டாக,Soft Corner அரசியலை வெளிப்படுத்தும் காங்கிரஸ். அதற்குள் இருக்கும் சீட் பேர அரசியல் என கரூர் துயர சம்பவத்துக்கு பின் தமிழ் நாட்டு அரசியல் களத்தில் ஓயாத பரபரப்பு.