S2:E3:இடஒதுக்கீடு (Reservation)
Description
சட்டநாதன் தலைமையில் ஒரு கமிட்டியை அப்போதைய முதல்வர் கருணாநிதி நியமித்தார், அதன் 1970 அறிக்கையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள்ளே சில சொத்து (நிலம், சமூக பொருளாதாரம் ) வாய்ந்த சில சாதியினரை இடஒதுக்கீட்டின் பெரும் பலன்களைப் பெற்று, உண்மையான பிற்படுத்தப்பட்டோரின் வளர்ச்சியைத் தடுப்பதாக கண்டறிந்தார். ஆதனால் இட ஒதுக்கீடு சதவிகிதத்தை அதிகரிக்கவும், தனியாக ‘மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ பிரிவை அடையாளம் காணவும், இடஒதுக்கீட்டின் பலன்களை சில சாதிகளிடம் மட்டும் குவிவதை தடுக்க பொருளாதார அளவுகோல்களை அறிமுகப்படுத்த அவ்வாணையம் பரிந்துரைத்தது. ஆனால் கிரீமி-லேயர் குறித்த பரிந்துரையை திமுக அரசு புறக்கணித்தது. இடஒதுக்கீடு பலன்களில் இருந்து எந்த சாதியும் விலக்கப்படவில்லை (புரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டன), மேலும் ‘மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’என்ற தனிப் பிரிவும் வரையறுக்கப்படவில்லை.
மாறாக 1971 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக அரசால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீடு 25% லிருந்து 31% ஆகவும், SC மற்றும் ST களுக்கு 16% லிருந்து 18% ஆகவும் உயர்த்தப்பட்டது.
நண்பர்களே, 1979-ல் திமுக பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கோரியதற்கான ஆதாரத்தை இத்துடன் நான் இணைக்கிறேன். நெஞ்சுக்கு நீதி என்ற தனது புத்தகத்தில் கருணாநிதி அவர்களே எழுதிய வார்த்தைகள் பின்வருமாறு "அன்றைய தினம் சென்னையிலே கூடிய கழகப் பொதுக்குழுவிலே அ.தி.மு.க. அரசு பிறப்பித்த அபாயகரமான உத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டு மென்றும், பொருளாதார அடிப்படையில் தாழ்ந்து கிடக்கின்ற ஏழைக் குடும்பத்துப் பிள்ளைகளுக்கு, அவர்கள் பிற்படுத்தப்பட்டவர் களானாலும், தாழ்த்தப்பட்டவர்களானாலும், முன்னேறிய வகுப்பினரானாலும் அவர்களுக்கு பொது இட ஒதுக்கீட்டிலிருந்து குறிப்பிட்ட சாரத்தை ஒதுக்குவதற்கான வேறு ஏற்பாடுகளை செய்யச் வேண்டு மென்றும் தீர்மானம் நிறைவேற்றினோம்."
1979ல் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை திமுக ஆதரித்த சம்பவத்தைப் பல பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டன, 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த செய்தி கட்டுரைகள் / இணைப்புகள் நீக்கப்பட்டுள்ளன.