DiscoverCringeMamaS3:E2 சாதிய வன்முறைகளும் தமிழ்நாடும் - திமுக தூங்குறதா ? தூங்கல ! அவங்க தான் காரணமாகவே இருக்காங்க
S3:E2 சாதிய வன்முறைகளும் தமிழ்நாடும் - திமுக தூங்குறதா ? தூங்கல ! அவங்க தான் காரணமாகவே இருக்காங்க

S3:E2 சாதிய வன்முறைகளும் தமிழ்நாடும் - திமுக தூங்குறதா ? தூங்கல ! அவங்க தான் காரணமாகவே இருக்காங்க

Update: 2025-09-15
Share

Description

வேதாரண்யம், கோடியக்கரையில் வன்கொடுமை தாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது வன்கொடுமை வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வேதாரண்யத்தில் சாலைமறியல்நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம், கோடியக்கரை, அண்ணாநகரில் கந்தசாமி வயது 25 என்ற மாற்றுத்திரனாளி வசித்துவருகிறார். இவருக்கு மாற்றுத்திரனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட மூன்று சக்கர வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்த மாண்புமிகு முதலமைச்சர் படம் மழையால் கிழிந்துவிட்ட நிலையில், ஏன் முதலமைச்சர் படம் ஒட்டவில்லை என்று கேட்டு முன்னாள் ஊராட்சி உறுப்பினர் கே.பி.லட்சுமனன் 26.08.25 அன்று கடுமையாக தாக்கியுள்ளார். இதனை கந்தசாமியின் தந்தை மணியன் குடும்பத்தினர் கோடியக்கரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.சுப்பிரமணியனியத்திடம் சென்று முறையிட்டனர். இந்த நிலையில் பட்டியலினத்தைச் சார்ந்த இவர்கள் எங்களை கேள்வி கேட்பதா என்ற கோபத்தோடு, 26.08.25 அன்று இரவு பத்து மணியளவில் முன்னாள் ஊராட்சி உறுப்பினர் இராஜேஸ்வரி இராஜேந்திரன் வீட்டில் புகுந்த பத்திற்கும் மேற்பட்டோர் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலுக்கான ஏற்பாடாடுகளை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.சுப்பிரமணியன் செய்ததாக கூறுகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான கந்தசாமி, ராஜேந்திரன் மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை 27.08.25 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சென்று பார்த்து ஆறுதல் கூறினர். பின்னர் வேதாரண்யம் காவல்நிலையம் சென்று விசாரணை செய்ததற்கு, சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யாததது தெரியவந்தது. சம்மந்தப்பட்ட காவல்நிலைய பொறுப்பு அலுவலரிடம், கோடியக்கரை தலித் மக்கள் மீது தாக்குதல் நடந்ததற்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இயக்கம் நடத்தப்படும் என்று தீண்டாமை ஒழிப்பு தெரிவித்தும், கைது மற்றும் வழக்கு பதிவு செய்யாததைக் கண்டித்து, உடன் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஜனநாயக மாதர் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம், விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று ( 29.08.25 ) வேதாரண்யம் கடைத்தெருவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகிகள் அ.தி.அன்பழகன், ஏ.ராஜா, பி.சுபாஷ் சந்திரபோஸ், சிவகுமார், ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் டி.லதா, எஸ்.சுவதேவி,, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.சித்தார்த்தன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.வேணு, இந்திய தொழிற்சங்கமைய மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.இராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேதாரண்யம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி, வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.அம்பிகாபதி, மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.வெற்றியழகன், ஒன்றிய நிர்வாகிகள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.பின்னர் வேதாரண்யம் வட்டாட்சியர் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் மறியல் நடைபெற்ற இடத்திற்கு வந்து இன்று மாலைக்குள் சம்மந்தப்பட்ட நபர்கள்மீது வன்கொடுமை சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.#TNUEF #களத்தில்_கம்யூனிஸ்ட்கள் #VCK.

Comments 
In Channel
S2:E7: Template Life

S2:E7: Template Life

2024-01-2501:42:07

S2:E6: Digital Politics

S2:E6: Digital Politics

2023-10-0501:32:37

S1:E9:Anime Oru Alasal

S1:E9:Anime Oru Alasal

2022-05-1101:29:48

loading
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

S3:E2 சாதிய வன்முறைகளும் தமிழ்நாடும் - திமுக தூங்குறதா ? தூங்கல ! அவங்க தான் காரணமாகவே இருக்காங்க

S3:E2 சாதிய வன்முறைகளும் தமிழ்நாடும் - திமுக தூங்குறதா ? தூங்கல ! அவங்க தான் காரணமாகவே இருக்காங்க

CringeMama