Discover
SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்
Author: SBS
Subscribed: 1,766Played: 34,434Subscribe
Share
© Copyright 2025, Special Broadcasting Services
Description
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
1113 Episodes
Reverse
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 21/10/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
Springtime in Australia brings warmth, blossoms, and longer days—but also the peak of pollen season. For millions of Australians, this means the onset of hay fever and allergy-induced asthma. - வசந்த காலத்தில் ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்கப்படும் கோடிக்கணக்கான மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மகரந்தங்களால் ஏற்படக்கூடிய ஒவ்வாமைகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தொடர்பில் Phil Tucak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
குடும்ப உறவு தொடர்பான தவறான புரிதல் மற்றும் மத நம்பிக்கை காரணமாக தனது மாமாவை கொலை செய்த குற்றச்சாட்டில் பிரிஸ்பன் நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
தீபாவளி விழாவின் மிக முக்கிய அம்சம் உணவு. குறிப்பாக, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தீபாவளி திருவிழாவின்போது பல சமூகங்கள் அசைவ உணவு உண்பது அவர்களின் பண்பாட்டு கூறுகளில் ஒன்றாக உள்ளது. இந்த பின்னணியில், ஆஸ்திரேலியாவில் வாழும் ஐந்து தமிழர்கள் தாங்கள் பிறந்த ஊர்களில் எப்படி தீவாளியைக் கொண்டாடினோம், இங்கு எப்படிக் கொண்டாடுகிறோம் எனும் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர். அனுபவப் பகிர்வு: பிரியா (சிட்னி), உமா (பிரிஸ்பேன்), சுரேஷ் (மெல்பன்), பிரமிளா (சிட்னி) & சிவா (பிரிஸ்பேன்). நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
நாட்டில் வங்கி கிளைகள், ATMகள் குறைவது குறிப்பாக கிராம்புற மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் பணத்தை ஏற்க வேண்டும் என்பதற்கான அரசின் சட்டத்திருத்த விதிமுறைகளின் வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 20/10/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் திடீர் ராஜினாமா - புதிய அமைச்சர்கள் பதவியேற்பு; தமிழகத்தில் விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையுமா?; நீதிமன்றத்தை அவமதித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை காவல்துறை வழக்கு பதிவு; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (12 அக்டோபர் – 18 அக்டோபர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 18 அக்டோபர் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: செல்வி.
ஆஸ்திரேலியாவில் ஆட்கடத்தல், கட்டாய திருமணம் மற்றும் நவீன அடிமைத்தனம் குறித்த முறைப்பாடுகள் இரட்டிப்பாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
தனது மகனை மடியில் வைத்துக்கொண்டு கார் ஓட்டிய குற்றச்சாட்டில் மெல்பன் Maribyrnong மேயருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Violent extremist recruiters are targeting and radicalising young people looking for belonging and connection — and it's not only happening in the dark corners of the internet. - வெறுப்பை புரிந்துக்கொள்ளுதல் தொடரின் இந்த அத்தியாயத்தில், இளைஞர்கள் தீவிர வன்முறை சிந்தனைக் குழுக்கள் பக்கம் திரும்பும் மனப்போக்கைப் பற்றி ஆராய்கிறோம். SBS Examines-இற்காக ஆங்கிலத்தில் Nick Zoumboulis தயாரித்த விவரணத்தை தமிழில் வழங்குகிறார் செல்வி.
நாம் வாழ்நாள் முழுவதும் உழைத்து ஈட்டும் சொத்துகளை நமது பிள்ளைகளுக்கு வழங்குவது என்பது வெறும் பரிசு அல்ல - அது ஒரு நிதி மற்றும் சட்டத் தீர்மானம். உங்களின் சொத்துகளை பிள்ளைகளுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ வழங்கும் வழிமுறைகளை அடுத்ததாக ஒலிக்கும் இந்த விவரணம் அலசுகிறது. தயாரித்து வழங்குகிறார் செல்வி.
இன்று உலகப் பொருளாதாரம் “Critical Minerals” என்று அழைக்கப்படும் ஒரு புதிய துறையில் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியா மிக முக்கிய பங்கு வகிக்க முடியும் நாடாக மாறியுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 17/10/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
திறமை அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்பவர்கள் தங்கள் துறைகளில் உடனடியாக வேலை செய்யக்கூடிய வகையில், அரசு புதிய மாற்றங்களை பரிசீலித்து வருகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
மாகாண சபைத் தேர்தல் குறித்து யாழில் தமிழ் கட்சிகள் கலந்துரையாடல்; இடமாற்றம் கோரி வடக்கில் அரச பணியாளர்கள் போராட்டம் மற்றும் குருந்தூர் மலை விவகாரத்தில் தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாட்டிற்கு கண்டனம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
காசாவில் ஹமாஸ்- இஸ்ரேலிய ஆதரவு குழுக்களிடையிலான பகைமை; பாகிஸ்தான் - ஆப்கான் பதற்றம்; வெனிசுலா அதிபரைக் குறிவைக்கும் அமெரிக்காவின் சிஐஏ; மடகாஸ்கரில் ஆட்சிக் கவிழ்ப்பு; மாஸ்கோவில் ரஷ்ய அதிபருடன் சிரிய அதிபர் சந்திப்பு உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
புதிய தரவரிசைப்படி, ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளில் ஒன்றாகத் தொடர்கிறது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
நமது உடல் ஆரோக்கியம் நாம் சாப்பிடும் உணவில் ஆரம்பமாகிறது ஆகவே உணவு தயாரிக்கும் முறைகள் சுகாதாரமானதாக இருப்பது அவசியம். உணவு பாதுகாப்பு குறித்த விவரணம், தயாரித்து வழங்குகிறார் செல்வி
ஆற்காடு ராமசாமி அவர்கள் தமிழ் மக்கள் மறக்கக் கூடாத ஒருவர். தமிழ் நாட்டில் பிற்படுத்தப் பட்ட மக்கள் இன்று அரசியல் உரிமை பெறும் போராட்டத்தின் விதை தூவியவர்களில் ஒருவர் ராமசாமி அவர்கள். அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.
கையில் வளையம் மாட்டும் திட்டம் பலன் தரும்.
Tamil God Song's to be relayed
https://castbox.fm/channel/Tamil-Bharathi-kavithaigal-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-c584a7c9f6b534a96670e750c668a5712183c5e9?country=us