https://youtu.be/nlPqArYDPdg கண்ணன் பாட்டுகண்ணம்மா -- என் குழந்தை(பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு) Song Produced, Arranged and Performed by Sid Sriram Lyrics - Mahakavi Subramaniya Bharathiyar ராகம் -- பைரவி தாளம் -- ரூபகம்ஸ ஸ ஸ -- ஸா ஸா -- பபப தநீத -- பதப -- பாபபப -- பதப -- பமா -- கரிஸாரிகம --ரிகரி -- ஸாஎன்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக் கொண்டு மனோபாவப்படி மாற்றிப் பாடுக. சின்னஞ் சிறுகிளியே, -- கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே!என்னைக் கலிதீர்த்தே -- உலகில் ஏற்றம் புரியவந்தாய்!1பிள்ளைக் கனியமுதே, -- கண்ணம்மா! பேசும்பொற் சித்திரமே!அள்ளி யணைத்திடவே -- என் முன்னே ஆடிவருந் தேனே!2பு{[மு-ப.]: ஸ ஸ ஸ -- ஸா ஸா ஸா -- ப ப பா}ஓடி வருகையிலே, -- கண்ணம்மா! உள்ளங் குளிரு தடீ;ஆடித்திரிதல் கண்டால் -- உன்னைப்போய் ஆவி தழுவு தடீ.3உச்சி தனை முகந்தால் -- கருவம் ஓங்கி வளரு தடீ;மெச்சி யுனையூரார் -- புகழ்ந்தால் மேனி சிலிர்க்கு தடீ.4கன்னத்தில் முத்தமிட்டால் -- உள்ளந்தான் கள்வெறி கொள்ளு தடீ;உன்னைத் தழுவிடிலோ, -- கண்ணம்மா! உன்மத்த மாகு தடீ.5சற்றுன் முகஞ் சிவந்தால் -- மனது சஞ்சல மாகு தடீ;நெற்றி சுருங்கக் கண்டால் -- எனக்கு நெஞ்சம் பதைக்கு தடீ6உன்கண்ணில் நீர்வழிந்தால் -- என்னெஞ்சில் உதிரங் கொட்டு தடீ;என்கண்ணில் பாவையன்றோ? -- கண்ணம்மா! என்னுயிர் நின்ன தன்றோ?7சொல்லு மழலையிலே, -- கண்ணம்மா! துன்பங்கள் தீர்த்திடு வாய்;முல்லைச் சிரிப்பாலே -- எனது மூர்க்கந் தவிர்த்திடுவாய்.8இன்பக் கதைக ளெல்லாம் -- உன்னைப்போல் ஏடுகள் சொல்வ துண்டோ?அன்பு தருவதிலே -- உனைநேர் ஆகுமொர் தெய்வ முண்டோ?9மார்பில் அணிவதற்கே -- உன்னைப்போல் வைர மணிக ளுண்டோ?சீர்பெற்று வாழ்வதற்கே -- உன்னைப்போல் செல்வம் பிறிது முண்டோ? Written, Directed, Edited by Akshay Sundher Cinematography, Grading by Raghav Adhithya Producer: Billroth Hospitals Production House: Sameer Bharat Ram (SuperTalkies) Creative Producer - Arun Koushik (Film Dailies) Executive Producer - Sakthi vel Mixing and Mastering - Shamanth Nag Cast - Abhirami, Santhosh Prathap Makeup and Styling - Pavithra Balakrishnan Associate director - Madhumitha Venugopal Associate cinematographer - Sanjay Hari Assistant director - Diwagar Sv Production Executive - Sandeep Intern - Priya Special Thanks - Jagadeesh Sundaramurthy, Prashant Gunasekaran, Prakash Karunanithi, Surya Label: Ondraga Music Digital Partner: Divo
தலைப்பு: இறைவா! இறைவா! குரல் - பாம்பே ஜெய்ஸ்ரீ. https://youtu.be/vbsKIoo--7A கவிதை: எத்தனை கோடி இன்பம் வைத்தாய்?-எங்கள் இறைவா!இறைவா!இறைவா! (ஓ-எத்தனை) சரணங்கள் சித்தினை அசித்தடன் இணைத்தாய்-அங்கு சேரும் ஐம் பூதத்து வியனுல கமைத்தாய். அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய்.(ஓ-எத்தனை) முக்தியென் றொருநிலை சமைத்தாய்-அங்கு முழுதினையு முணரும் உணர் வ்மைத்தாய் பக்தியென் றொருநிலை வகுத்தாய்-எங்கள் பரமா!பரமா!பரமா!(ஓ-எத்தனை)
கண்ணன் பாட்டு கண்ணம்மா-என் காதலி காட்சி வியப்பு காட்சி வியப்பு (செஞ்சுருட்டி-ஏகதாளம். ரசங்கள்: சிருங்காரம்; அற்புதம்) https://youtu.be/fNJuHWUY9cA by A. R. Rahman & Hariharan சுட்டும்விழிச் சுடர்தான், -- கண்ணம்மா! சூரிய சந்திரரோ? வட்டக் கரியவிழி, -- கண்ணம்மா! வானக் கருமைகொல்லோ? பட்டுக் கருநீலப் -- புடவை பதித்த நல்வயிரம் நட்ட நடுநிசியில் -- தெரியும் நக்ஷத்தி ரங்களடீ! சோலைமல ரொளியோ -- உனது சுந்தரப் புன்னகைதான்? நீலக் கடலலையே -- உனது நெஞ்சி லலைகளடீ! கோலக் குயிலோசை -- உனது குரலி னிமையடீ! வாலைக் குமரியடீ, -- கண்ணம்மா! மருவக் காதல்கொண்டேன். சாத்திரம் பேசுகிறாய், -- கண்ணம்மா! சாத்திர மேதுக்கடீ? ஆத்திரங் கொண்டவர்க்கே, -- கண்ணம்மா! சாத்திர முண்டோடீ? மூத்தவர் சம்மதியில் -- வதுவை முறைகள் பின்புசெய்வோம்; காத்திருப் பேனோடீ? -- இது பார், கன்னத்து முத்தமொன்று!
தலைப்பு: பாரத ஜனங்களின் தற்கால நிலைமை கவிதை: நொண்டிச் சிந்து நெஞ்சு பொறுக்கு திலையே!-இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்கள் என்பார்-இந்த மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார் துஞ்சுது முகட்டில் என்பார்-மிகத் துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு) மந்திர வாதி என்பார்-சொன்ன மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார், யந்திர சூனி யங்கள்-இன்னும் எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்! தந்த பொருளைக் கொண்டே-ஜனம் தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்; அந்த அரசியலை-இவர் அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார். (நெஞ்சு) சிப்பாயைக் கண்டு அஞ்சுவார்-ஊர்ச் சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார், துப்பாக்கி கொண்டு ஒருவன்-வெகு தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார், அப்பால் எவனோ செல்வான்-அவன் ஆடையைக் கண்டுபயந் தெழுந்துநிற் பார், எப்போதும் கைகட்டு வார்-இவர் யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார். (நெஞ்சு) நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால், கொஞ்சமோ பிரிவினைகள்?-ஒரு கோடிஎன் றால் அது பெரிதா மோ? ஐந்துதலைப் பாம்பென் பான்-அப்பன் ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட் டால் நெஞ்சு பிரிந்திடுவார்-பின்பு நெடுநாள் இருவரும் பகைத்திருப் பார்.(நெஞ்சு) சாத்திரங்கள் ஒன்றும் காணார்-பொய்ச் சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே கோத்திரம் ஒன்றா யிருந்தாலும்-ஒரு கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார், தோத்திரங்கள் சொல்லி அவர்தாம்-தமைச் சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்; ஆத்திரங் கொண்டே இவன் சைவன்-இவன் அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார். (நெஞ்சு) நெஞ்சு பொறுக்கு திலையே-இதை நினைந்து நினைந்திடினும் வெறுக்கு திலையே, கஞ்சி குடிப்பதற் கிலார்-அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமி லார் பஞ்சமோ பஞ்சம் என்றே-நிதம் பரிதவித் தேஉயிர் துடிதுடித்துத் தே துஞ்சி மடிகின் றாரே-இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே.(நெஞ்சு) எண்ணிலா நோயுடையார்-இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் கண்ணிலாக் குழந்தை கள்போல்-பிறர் காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள் வார், நண்ணிய பெருங்கலைகள்-பத்து நாலாயிரங் கோடி நயந்துநின் ற புண்ணிய நாட்டினி லே-இவர் பொறியற்ற விலங்குகள் போலவாழ் வார்.(நெஞ்சு)
தலைப்பு: போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும் கவிதை: (போகின்ற பாரதத்தைச் சபித்தல்) வலிமையற்ற தோளினாய் போ போ போ மார்பி லேஒடுங்கினாய் போ போ போ பொலிவி லாமுகத்தினாய் போ போ போ பொறி யிழந்த விழியினாய் போ போ போ ஔங்யி ழந்த குரலினாய் போ போ போ ஒளியி ழந்த மேனியாய் போ போ போ கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ இன்று பார தத்திடை நாய்போல ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ சென்று போன பொய்யெலாம் மெய்யாகச் சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக விழிம யங்கி நோக்குவாய் போ போ போ வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ நூறு நூல்கள் போற்றுவாய் மெய்கூறும் நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ மாறு பட்ட வாதமே ஐந்நூறு வாயில் நீள ஓதுவாய் போ போ போ சேறுபட்ட நாற்றமும் தூறுஞ்சேர் சிறிய வீடு கட்டுவாய் போ போ போ ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ தரும மொன்றி யற்றிலாய் போ போ போ நீதி நூறு சொல்லுவாய் காசொன்று நீட்டினால் வணங்குவாய் போ போ போ தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே தீமை நிற்கி லோடுவாய் போ போ போ சோதி மிக்க மணியிலே காலத்தால் சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ.
தலைப்பு: போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும் (வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்) ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா களிப டைத்த மொழியினாய் வா வா வா கடுமை கொண்ட தோளினாய் வா வா வா தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா ஏறு போல் நடையினாய் வா வா வா மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு வேதமென்று போற்றுவாய் வா வா வா பொய்ம்மை கூற லஞ்சுவாய் வா வா வா பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா நொய்ம்மை யற்ற சிந்தையாய் வா வா வா நோய்க ளற்ற உடலினாய் வா வா வா தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த் தேச மீது தோன்றுவாய் வா வா வா இளைய பார தத்தினாய் வா வா வா எதிரிலா வலத்தினாய் வா வா வா ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும் உதய ஞாயி றொப்பவே வா வா வா களையி ழந்த நாட்டிலே முன்போலே கலைசி றக்க வந்தனை வா வா வா விளையு மாண்பு யாவையும் பார்த்த ன்போல் விழியி னால் விளக்குவாய் வா வா வா வெற்றி கொண்ட கையினாய் வா வா வா விநயம் நின்ற நாவினாய் வா வா வா முற்றி நின்ற வடிவினாய் வா வா வா முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா கருதிய தியற் றுவாய் வா வா வா ஒற்றுமைக்கு ளுய்யவே நாடெல்லாம் ஒரு பெருஞ் செயல் செய்வாய் வா வா வா
தலைப்பு: அச்சமில்லை கவிதை: அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே துச்சமாக எண்ணி நம்மைச் தூறு செய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
தலைப்பு: மனதில் உறுதி வேண்டும் கவிதை: மனதி லுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்; தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும். கண் திறந்திட வேண்டும், காரியத்தி லுறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும், மண் பயனுற வேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும். ஓம் ஓம் ஓம் ஓம்
தலைப்பு: பாரத தேசம் கவிதை: பாரத தேசமென்று பெயர்சொல்லு வார்-மிடிப் பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார். வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்-அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.(பாரத) சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதிசமைப் போம் வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால் மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம்.(பாரத) வெட்டுக் கனிகள் செய்து தங்கம்முத லாம் வேறு பலபொருளும் குடைந்தெடுப் போம், எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவைவிற் றே எண்ணும் பொருளனைத்தும் கொண்டுவரு வோம். (பாரத) முத்துக் குளிப்பதொரு தென்கடலி லே, மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந் தே, நத்தி நமக்கினிய பொருள்கொணர்ந்தே நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே. (பாரத) சிந்து நதியின்மிசை நிலவினிலே சேரநன் னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத் துத் தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.(பாரத) கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம் சிங்க மராட்டியர்தம் கவிதைகொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப் போம். (பாரத) காசி நகர்ப்புலவர் பேசும்உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம் ராசபுத் தானத்து வீரர்தமக் கு நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம். (பாரத) பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும் பண்ணி மலைகளென வீ திகுவிப் போம் கட்டித் திரவியங்கள் கொண்டு வரு வார் காசினி வணிகருக்கு அவைகொடுப்போம் (பாரத) ஆயுதம் செய் வோம்நல்ல காகிதம்செய் வோம் ஆலைகள்வைப் போம் கல்விச் சாலைகள் வைப்போம் ஒயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம் உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத) குடைகள் செய் வோம்உழு படைகள் செய் வோம் கோணிகள் செய் வோம் இரும் பாணிகள் செய் வோம் நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம் ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத) மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம் வானையளப் போம் கடல் மீனையளப் போம் சந்திரமண் டலத்தியல் கண்டு தெளி வோம் சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம். (பாரத) காவியம்செய் வோம் நல்ல காடுவளர்ப் போம் கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம் ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம் உலகத்தொழிலனைத்து முவந்துசெய் வோம். (பாரத) சாதி இரண்டொழிய வேறில்லையென் றே தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென் போம் நீதிநெறி யினின்று பிறர்க்குத வும் நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர். (பாரத)
தலைப்பு: கண்ணமாவின் நினைப்பு கவிதை: நின்னை யே ரதியென்று நினைக்கிறேனடி-கண்ணம்மா! தன்னையே சகியென்று சரணமெய்தினேன்!(நின்னையே) பொன்னை யே நிகர்த்த மேனி மின்னை ய, நிகர்த்த சாயற் பின்னை யே!-நித்ய கன்னியே! கண்ணம்மா!(நின்னையே) மார னம்புக ளென்மீது வாரி வாரி வீச நீ-கண் பாரா யோ? வந்த சேரா யோ? கண்ணம்மா?(நின்னையே) யாவு மே சுக முனிக் கொர் ஈசனா னெக்குன் தோற்றம் மேவு மே-இங்கு யாவு மே,கண்ணம்மா!(நின்னையே)
தலைப்பு: பாப்பாப் பாட்டு கவிதை: ஓடி விளையாடு பாப்பா!-நீ ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா! கூடி விளையாடு பாப்பா!-ஒரு குழந்தையை வையாதே பாப்பா! சின்னஞ் சிறுகுருவி போலே-நீ திரிந்து பறந்துவா பாப்பா! வன்னப் பறவைகளைக் கண்டு-நீ மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா! கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக் கூட்டி விளையாடு பாப்பா! எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்கு இரக்கப் படவேணும் பாப்பா! பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப் பசுமிக நல்லதடி பாப்பா! வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அது மனிதர்க்கு தோழனடி பாப்பா! வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லு வயலில் உழுதுவரும் மாடு, அண்டிப் பிழைக்கும் நம்மை,ஆடு,-இவை ஆதரிக்க வேணுமடி பாப்பா! காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு-என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா! பொய்சொல்லக் கூடாது பாப்பா!-என்றும் புறஞ்சொல்ல லாகாது பாப்பா தெய்வம் நமக்குத்துணை பாப்பா!-ஒருன தீங்குவர மாட்டாது பாப்பா! பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம் சோர்ந்துவிட லாகாது பாப்பா! அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா! சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!-தாய் சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா! தேம்பி யழுங்குழந்தை நொண்டி,- திடங்கொண்டு போராடு பாப்பா! தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா! சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே!-அதைத் தொழுது படித்திடடி பாப்பா! செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத் தினமும் புகழ்ந்திடடி பாப்பா! வடக்கில் இமயமலை பாப்பா!-தெற்கில் வாழும் குமரிமுனை பாப்பா! கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன் கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா! வேத முடையதிந்த நாடு,-நல்ல வீரர் பிறந்ததிந்த நாடு; சேதமில் லாதஹிந்து ஸ்தானம்-இதைத் தெய்வமென்று கும்பிடடி பாப்பா! சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்; நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு நிறை உடையவர்கள் மேலோர். உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும் வயிர முடையநெஞ்சு வேணும்;-இது வாழும் முறைமையடி பாப்பா!
தலைப்பு: நந்த லாலா கவிதை: காக்கைச் சிறகினிலே நந்த லாலா!-நின்தன் கரியநிறந் தோன்று தையே நந்த லாலா! பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா!-நின்தன் பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா! கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா!-நின்தன் கீத மிசக்குதடா நந்த லாலா! தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா!-நின்னைத் தீண்டு மின்பந் தோன்று தடா நந்த லாலா!
பாரத சமுதாயம் கவிதை: பாரத சமுதாயம் வாழ்கவே!-வாழ்க வாழ்க! பாரத சமுதாயம் வாழ்கவே!-ஜய ஜய ஜய (பாரத) அனுபல்லவி முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை ஒப்பிலாத சமுதாயம் உலகத் துக்கொரு புதுமை-வாழ்க!(பாரத) மனித ருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?-புலனில் வாழ்க்கை இனியுண்டோ?-நம்மி லந்த வாழ்க்கை இனியுண்டோ? இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணரும் பெருநாடு, கனியும் கிழங்கும் தானி யங்களும் கணக்கின் றித்தரு நாடு-இது கணக்கின் றித்தரு நாடு-நித்த நித்தம் கணக்கின் றித்தரு நாடு-வாழ்க!(பாரத) இனியொரு விதிசெய் வோம்-அதை எந்த நாளும் காப்போம், தனியொருவனுக் குணவிலை யெனில் ஜகத்தினை அழித்திடு வோம்-வாழ்க!(பாரத) எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்றுரைத்தான் கண்ண பெருமான், எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை இந்தியா உலகிற் களிக்கும்-ஆம் இந்தியா உலகிற் களிக்கும்-ஆம் ஆம், இந்தியா உலகிற் களிக்கும்-வாழ்க!(பாரத) எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்திய மக்கள், எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர் விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர்-நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்-வாழ்க!(பாரத)
https://youtu.be/U1CH6qYMbrE தோத்திரப் பாடல்கள் கண்ணம்மா (2) பல்லவி நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி -- கண்ணம்மா! தன்னையே சசியென்று சரண மெய்தினேன். (நின்னையே) சரணங்கள் பொன்னையே நிகர்த்தமேனி மின்னையே நிகர்த்த சாயற் பின்னையே -- நித்ய கன்னியே, -- கண்ணம்மா! (நின்னையே) 1 மாரனம் புகளென்மீது வாரிவாரி வீச நீ -- கண் பாராயோ -- வந்து சேராயோ, -- கண்ணம்மா! (நின்னையே) 2 யாவு மே சுகமுனிக் கொர் ஈசனா மெனக்குன் தோற்றம் மேவு மே இங்கு யாவுமே, -- கண்ணம்மா! (நின்னையே) 3
https://youtu.be/kMGkvl2M7RE தோத்திரப் பாடல்கள் கண்ணம்மா (2) பல்லவி நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி -- கண்ணம்மா! தன்னையே சசியென்று சரண மெய்தினேன். (நின்னையே) சரணங்கள் பொன்னையே நிகர்த்தமேனி மின்னையே நிகர்த்த சாயற் பின்னையே -- நித்ய கன்னியே, -- கண்ணம்மா! (நின்னையே) 1 மாரனம் புகளென்மீது வாரிவாரி வீச நீ -- கண் பாராயோ -- வந்து சேராயோ, -- கண்ணம்மா! (நின்னையே) 2 யாவு மே சுகமுனிக் கொர் ஈசனா மெனக்குன் தோற்றம் மேவு மே இங்கு யாவுமே, -- கண்ணம்மா! (நின்னையே) 3
https://youtu.be/5p1JMZr139o தோத்திரப் பாடல்கள் கண்ணம்மா (2) பல்லவி நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி -- கண்ணம்மா! தன்னையே சசியென்று சரண மெய்தினேன். (நின்னையே) சரணங்கள் பொன்னையே நிகர்த்தமேனி மின்னையே நிகர்த்த சாயற் பின்னையே -- நித்ய கன்னியே, -- கண்ணம்மா! (நின்னையே) 1 மாரனம் புகளென்மீது வாரிவாரி வீச நீ -- கண் பாராயோ -- வந்து சேராயோ, -- கண்ணம்மா! (நின்னையே) 2 யாவு மே சுகமுனிக் கொர் ஈசனா மெனக்குன் தோற்றம் மேவு மே இங்கு யாவுமே, -- கண்ணம்மா! (நின்னையே) 3
https://youtu.be/iZ1MnFqWVRg தோத்திரப் பாடல்கள் கண்ணம்மா (2) பல்லவி நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி -- கண்ணம்மா! தன்னையே சசியென்று சரண மெய்தினேன். (நின்னையே) சரணங்கள் பொன்னையே நிகர்த்தமேனி மின்னையே நிகர்த்த சாயற் பின்னையே -- நித்ய கன்னியே, -- கண்ணம்மா! (நின்னையே) 1 மாரனம் புகளென்மீது வாரிவாரி வீச நீ -- கண் பாராயோ -- வந்து சேராயோ, -- கண்ணம்மா! (நின்னையே) 2 யாவு மே சுகமுனிக் கொர் ஈசனா மெனக்குன் தோற்றம் மேவு மே இங்கு யாவுமே, -- கண்ணம்மா! (நின்னையே) 3
https://youtu.be/y7buvEjj3CU தோத்திரப் பாடல்கள் கண்ணம்மா (3) காற்று வெளியிடைக் கண்ணம்மா -- நின்றன் காதலை யெண்ணிக் களிக்கின்றேன்; -- அமு தூற்றினை யொத்த இதழ்களும் -- நில வூறித் ததும்பும் விழிகளும் -- பத்து மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் -- இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை வேற்று நினைவின்றித் தேற்றியே -- இங்கோர் விண்ணவ னாகப் புரியுமே -- இந்தக் (காற்று வெளி) 1 நீயென தின்னுயிர் கண்ணம்மா -- எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் -- துயர் போயின, போயின துன்பங்கள் -- நினைப் பொன்னெனக் கொண்ட பொழுதிலே -- என்றன் வாயினி லேயமு தூறுதே -- கண்ணம் மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே -- உயிர்த் தீயினி லேவளர் சோதியே -- என்றன் சிந்தனையே என்றன் சித்தமே! இந்தக் (காற்று வெளி) 2
https://youtu.be/i1Bv8qm2hhw தோத்திரப் பாடல்கள் கண்ணம்மா (3) காற்று வெளியிடைக் கண்ணம்மா -- நின்றன் காதலை யெண்ணிக் களிக்கின்றேன்; -- அமு தூற்றினை யொத்த இதழ்களும் -- நில வூறித் ததும்பும் விழிகளும் -- பத்து மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் -- இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை வேற்று நினைவின்றித் தேற்றியே -- இங்கோர் விண்ணவ னாகப் புரியுமே -- இந்தக் (காற்று வெளி) 1 நீயென தின்னுயிர் கண்ணம்மா -- எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் -- துயர் போயின, போயின துன்பங்கள் -- நினைப் பொன்னெனக் கொண்ட பொழுதிலே -- என்றன் வாயினி லேயமு தூறுதே -- கண்ணம் மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே -- உயிர்த் தீயினி லேவளர் சோதியே -- என்றன் சிந்தனையே என்றன் சித்தமே! இந்தக் (காற்று வெளி) 2
https://youtu.be/QL82ZcCcM4E தோத்திரப் பாடல்கள் கண்ணம்மா (3) காற்று வெளியிடைக் கண்ணம்மா -- நின்றன் காதலை யெண்ணிக் களிக்கின்றேன்; -- அமு தூற்றினை யொத்த இதழ்களும் -- நில வூறித் ததும்பும் விழிகளும் -- பத்து மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் -- இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை வேற்று நினைவின்றித் தேற்றியே -- இங்கோர் விண்ணவ னாகப் புரியுமே -- இந்தக் (காற்று வெளி) 1 நீயென தின்னுயிர் கண்ணம்மா -- எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் -- துயர் போயின, போயின துன்பங்கள் -- நினைப் பொன்னெனக் கொண்ட பொழுதிலே -- என்றன் வாயினி லேயமு தூறுதே -- கண்ணம் மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே -- உயிர்த் தீயினி லேவளர் சோதியே -- என்றன் சிந்தனையே என்றன் சித்தமே! இந்தக் (காற்று வெளி)
prasad
எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ, குற வள்ளி
shantybps krishnasamy
கண்ணன் பாட்டு - கண்ணனை காட்டிலே தேடுதல்
Kumar Subramaniam
I can’t read tamil but you’re love for it is astonishing
Balakrishnan sk
அருமையான இந்த பதிவுக்கு நன்றி
Ramjee Nagarajan
அழகிய பாடல் தேர்வு, தெளிவான உச்சரிப்பு... பகிர்வுக்கு நன்றி.