ஆளுமைகள் + சபைகள் + நண்பர்கள்: வ. ஸ்ரீனிவாசன் உரையாடல்: தெரிந்த இலக்கியவாதிகளும் தெரியாத விஷயங்களும்
Description
கட்டுரையை வாசிக்க: https://solvanam.com/2025/04/13/இறவாமை-பகுதி-இரண்டு/
உரையாடியவர்: சிவா துரை
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி தத்துவம் என்ன?
ஜெயகாந்தன் சபையில் என்ன பேசுவார்கள்?
எழுத்தாளர்கள் விவாதிக்கும் விஷயங்கள் என்ன?
சுஜாதா இலக்கியவாதியா?
கோயம்புத்தூர் தியாகு புத்தக நிலையமும் சிறுவாணி வாசகர் வட்டமும் எவ்வாறு துடிப்புடன் இயங்குகின்றன?
சிற்றிலக்கியமும் சிற்றிதழ் அரசியலும் - நல்ல சொற்பொழிவாளர்கள் நல்ல புனைவாளர்களா?
விமர்சன இலக்கியம் என்றால் எப்படி இருக்க வேண்டும்?
எதற்காக புகழ்பெற்றோரை சந்திக்கிறோம்?
ஏன் மற்றவர்களின் துணையை நாடுகிறோம்?
எதற்காகப் படிக்கிறோம்?
சாட்ஜிபிடி அவதாரங்கள் நமக்கான வழிகாட்டல் துணை ஆகுமா?
இது போன்ற பல கேள்விகளுக்கு வ. சீனிவாசன் விளக்கம் தருகிறார். விவாதிக்கிறார்.
எழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசன் உடைய முதல் கதை 1971ல் வெளிவந்தது. இவரது கதை, கவிதை, கட்டுரைகள் 'கணையாழி', "உயிரெழுத்து', 'நவீன விருட்சம்', 'வார்த்தை', 'சொல்வனம்' இதழ்களில் வெளியாகி உள்ளன.
இவரது நூல்கள் :- 'எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது', 'காணக்கிடைத்தவை' என்கிற கட்டுரை நூல்கள், ' கனவு மழை ' என்கிற சிறுகதைத் தொகுப்பு, வாழ்க்கை பற்றிய அறிவு' ஜே. கிருஷ்ணமூர்த்தி யின் On education நூலின் மொழி பெயர்ப்பு.
இவர் 'சொல்வனம்' இணைய இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர். மாதம் ஒரு நூல் வழங்கும் 'சிறுவாணி வாசகர் மையத்தின் ஆலோசகர்.