சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- முனைவர் மீனாட்சி பாலகணேஷ் - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன்
Description
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- முனைவர் மீனாட்சி பாலகணேஷ் - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன் பிரதிலிபி இணையத்தளம் ‘கிருஷ்ணன் எனும் சிறுகுட்டன்’ எனும் ஆன்மீக இலக்கியத் தொடர், ‘இனி என்னைப் புதியஉயிராக்கி’ எனும் புதினம், தாகூாின் ‘சண்டாளிகா’, ‘சித்ரா’ எனும் இரு நாடகங்களின் மொழிபெயர்ப்பு, சொல்வனத்தில் தொடராக வந்த டால்ஸ்டாயின் ‘ "காகசஸ் மலைக்கைதி" (Caucasus Prisoner) ’ எனும் குறுநாவலின் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை மின்புத்தகங்களாக வெளியிட்டுள்ளது.மற்றும் மொழிபெயர்ப்புப் போட்டியில் பரிசு பெற்ற ‘சித்ரா’ , குவிகத்தில் “கங்கை எனது தாய்” என்ற குறும்புதினம் போன்ற படைப்புகள் இவரின் இலக்கியப் பயணத்தின் சான்றுகள். தாமரை இலைத் தண்ணீர் வாழ்க்கை!, ஸ்ரீ அரவிந்தரின் ஆக்கங்களும் கவிதைகளும் மொழிபெயர்ப்பு, பருவம் பற்றி கட்டுரைத் தொடர் எழுதியுள்ளார் “தெய்வக் குழந்தைகளைப் பாடும் பிள்ளைத்தமிழ்” என்ற காணொளித் தொடரில் அழகாகப் பாடி அருமையாக விளக்கமும் அளித்துள்ளார் .