25 நிமிடங்களில் பொன்னியின் செல்வன் முழு கதை
Description
நம் வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் வரலாறு இருக்கிறவன் அதை அலட்சியப்படுத்துவான். அதே வரலாறு இல்லாதவன் அதை உருவாக்குவான். நம்முடைய பல வரலாற்றுச் சுவடுகள் நம் கண்முன்னே மாற்றியமைக்க முயற்சித்து வருகின்றனர். அதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது. அதனுடைய சிறு முயற்சியே இந்த கதை சுவடுகள் வலைதளத்தின் நோக்கம். சோழர்கள் வரலாறு கூறவேண்டுமாயின் அதில் தலைசிறந்த மாமன்னர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் புகழ்பெற்ற மன்னர்களில் ஒருவர் தான் ராஜராஜ சோழன். இவருடைய இயற்பெயர் “அருள்மொழி வர்மன்”. ஆனால் வர்மன் என்பது அடைமொழி ஆகும். சோழகுல மன்னர்களிலேயே வர்மன் என்ற அடைமொழியை தன் பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொண்ட ஒரே மன்னரும் இவர் தான். தன் வாழ்நாளில் கண்ட போர்களிலும், செயல்களிலும் தோல்வியே காணாத மன்னர்களில் இவரும் ஒருவர். அவரே! இவ்வுலகம் போற்றும் ராஜராஜ சோழன்.























