Wayanad: விடை கொடுக்கும் ராணுவம் - கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்த மக்கள்! NEWS - 09/08/2024
Description
மீட்பு பணிகளைப் பொறுத்தவரை ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள், கேரளா மற்றும் அண்டை மாநில மீட்பு குழுக்கள், தன்னார்வலர்கள் ஆயிரக்கணக்கானோர் 10 நாள்களாக தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக ராணுவத்தின் சேவை மீட்பு பணியில் மிகப்பெரிய பங்களிப்பாக இருந்தது.
ஆற்றின் குறுக்கே போர்க்கால அடிப்படையில் பெய்லி பாலம் அமைத்தது முதல் சூஜிப்பாறா பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் பலரை உயிருடன் மீட்டது வரை தனது முழு பலத்தையும் மீட்பு பணியில் செலுத்தியது.
மீட்பு பணிகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், 10 நாள்களாக களமாடி வந்த ராணுவம், சிறிய குழுவை மட்டும் களத்தில் விட்டுவிட்டு விடை கொடுத்திருக்கிறது. வரலாறு காணாத இந்த பேரிடரில் தோளோடு தோளாக களத்தில் நின்ற ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளை கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் மக்கள் வழியனுப்பி வைத்துள்ளனர். கேரள அரசும் முழு மரியாதையுடன் பலத்த கைதட்டல்களுடன் வீரர்களை வழியனுப்பியது.