DiscoverSouth India Tamil Nadu Spirituality & goodness podகாஞ்சி பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!
காஞ்சி பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

காஞ்சி பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

Update: 2021-05-17
Share

Description

மகா பெரியவா சரணம்

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் மடத்தில் பெரியவா அணுக்கத் தொண்டர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். “இங்கே ஏகாம்பரேஸ்வரர் கோவில் பக்கத்துல ஒரு தெருவுல ஒரு சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் இருக்குன்னு மடத்து குறிப்புக்கள் சொல்றது. உங்க யாருக்காச்சும் அது பத்தி தெரியுமா??”சிஷ்யர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டார்கள். “எங்களுக்கு தெரிஞ்சி அப்படி எதுவும் இல்லியே பெரியவா”

பெரியவா தீர்க்கமாக யோசித்தார். “மடத்து குறிப்புக்கள் தப்பா இருக்காதே…”“நேர்லேயே போய் பார்த்துடுவோமே…” என்றவர் உடனே பரிவாரங்களுடன் மடத்து குறிப்புகள் சுட்டிக்காட்டிய இடத்துக்கு சென்றார்.
அது ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு அருகே உள்ள லிங்கப்பன் தெரு. அங்கு சென்றவுடன் ஒரு குறிப்பிட்ட வீட்டு முன் நின்றார்.

“குறிப்புக்கள் சொல்றது இந்த வீடு தான்!” “இது சந்திரசேகர் ராவ் வீடோல்லியோ…” சிஷ்யர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். நடமாடும் தெய்வமே தங்கள் வீட்டு முன்னர் வந்து நிற்பதை கண்ட அந்த குடும்பத்தினர் பரவசமடைந்தனர்.

“பெரியவா பாதம் என் கிரகத்தில் பட நாங்கள் கொடுத்து வைத்திருக்கனும்…”அவர்களுக்கு தனது ஆசிகளை வழங்கிய பெரியவா சட்டென்று தேங்காய் உடைப்பது போல விஷயத்தை உடைத்தார்.

“உன் வீட்டை மடத்துக்கு விற்க முடியுமா?” மகா பெரியவா இப்படி திடுதிப்பென்று கேட்டவுடன் அந்த கிரகஸ்தரால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.
நாக்குழறி திக்கி திணறி “அது வந்து பெரியவா…. வந்து… இந்த வீடு ஒன்னு தான் எனக்குன்னு இருக்குற ஒரே சொத்து” என்றார்.

பெரியவா புன்முறுவல் செய்தபடி, “உன் குடும்பத்தார் கிட்டே கலந்து பேசு. உனக்கு எப்போ இந்த வீட்டை விற்கணும்னு தோணுதோ அப்போ என்னை வந்து பார்!” என்று கூறிவிட்டு புறப்பட்டார். சிறிது காலம் சென்றது.
ஒரு நாள் சந்திரசேகர் ராவ் பெரியவாவை தரிசிக்க வந்தார். ராவ் சவரம் செய்து பல நாட்கள் ஆகியிருப்பதை உணர்த்தும் விதமாக முகத்தில் தாடி முளைத்திருந்தது. கண்களில் சோகம்.

“சொல்லுப்பா… எப்படியிருக்கே?”“மஹா சுவாமிகளுக்கு தெரியாததா? என் வீட்டை இப்போ விற்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்… என் பையனுக்கு உடம்பு சரியில்லே. ஆப்பரேஷன் செய்யவேண்டியிருக்கு. ட்ரீட்மெண்டுக்கு எதிர்பாராம நிறைய பணம் தேவைப்படுது!”

“ஒரு நல்ல காரியத்துக்காகத் தான் பகவான் இப்படி நாடகமாடுறான். உன் பையனுக்கு ஒன்னும் ஆகாது கவலைப்படாதே. எல்லாரும் சேஷமா இருப்பேள். மடம் சார்பா வேறு ஒரு நல்ல இடத்துல உனக்கு வீடு ஒதுக்கச் சொல்றேன்” என்று கைகளை உயர்த்தி ஆசி கூற, சாட்சாத் அந்த சர்வேஸ்வரனே கூறியது போலிருந்தது சந்திரசேகர் ராவுக்கு.

கண்களில் ஓரமாக வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டு பெரியவாளை வணங்கிவிட்டு புறப்பட்டார். சற்று நேரத்திற்கெல்லாம் கணபதி ஸ்தபதி பெரியவாளை தரிசிக்க வந்தார். “நேரே காமாட்சியம்மன் கோவிலுக்கு போய் அம்பாளை தரிசனம் பண்ணிட்டு, லிங்கப்பன் தெருவில் இருக்குற சந்திரசேகர் ராவ் வீட்டுக்கு போய் நான் சொல்ற இடத்தை யோசிக்காம தோண்டு… ஒத்தாசைக்கு ஆளுங்களை கூட்டின்டு போ” “பெரியவா உத்தரவு” என்று கூறி வணங்கிவிட்டு கணபதி ஸ்தபதி உடனே காமாட்சியை தரிசிக்க சென்றார். அவர் சென்றவுடன் பெரியவா நிஷ்டையில் ஆழ்ந்தார். அவர் மனம் இறைவனின் திருநாமத்தை ஜபித்தபடி இருந்தது.
சந்திரசேகர் ராவ் வீடு.

கணபதி ஸ்தபதி பெரியவா ஆட்களுடன் சென்று பெரியவா குறிப்பிட்ட இடத்தை பார்த்த போது அதிர்ச்சியடைந்தார்.

காரணம் அது கழிவறை. அந்த காலத்து கழிவறை.
“இந்த இடத்திலேயா தோண்டுறது?” கணபதி ஸ்தபதி தயங்கினார். பெரியவா காரணமில்லாம சொல்லமாட்டாரே…”பின்னர் தன்னை சமாதானப் படுத்திக்கொண்டு “ம்…தோண்டுங்க…” ஆட்களை பணித்தார். ஆட்கள் மளமளவென தோண்ட ஆரம்பித்தார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் ‘டங்’ என்று சத்தம் கேட்க, ஆட்கள் தோண்டுவதை நிறுத்தினார்கள்.
பாதுகாப்பாக மண்ணை விலக்கிவிட்டு பார்த்தால் ஒரு அழகிய சிவலிங்கம்…!

“சம்போ மகா தேவா” கணபதி ஸ்தபதி கதறியே விட்டார்.
லிங்கம் இருக்கும் இடம் கழிவறை இருந்த பகுதியில் என்பதால் எத்தனை விரைவாக அதை அப்புறப்படுத்த முடியுமோ அத்தனை விரைவாக அதை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. லிங்கம் அசைந்து கொடுக்கவில்லை.

லிங்கத்தை ஒரு பெரிய கயிற்றில் கட்டி இழுக்க முயற்சித்தார்கள். அப்போதும் முடியவில்லை.
கோவில் யானையை கொண்டு இழுக்கலாம் என்று யாரோ யோசனை கூற, ஏகாம்பரேஸ்வரர் கோவில் யானை கொண்டு வரப்பட்டு, ஒரு பெரிய தாம்புக் கயிற்றில் லிங்கம் கட்டப்பட்டு யானையை கொண்டு இழுக்கப்பட்டது. அப்போதும் லிங்கம் அசைந்து கொடுக்கவில்லை.

கணபதி ஸ்தபதி உடனே பெரியவாவை தரிசிக்க விரைந்தார்.மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க… பெரியவா முன் நின்றவர்…. நடந்ததை விளக்கினார்.
“சரி… வா புறப்படு….”கணபதி ஸ்தபதி திடுக்கிட்டார். “பெரியவா அது வந்து… நீங
Comments 
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

காஞ்சி பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

காஞ்சி பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

Adithya Raghavan