DiscoverPattikkaadu
Pattikkaadu
Claim Ownership

Pattikkaadu

Author: durai arasu

Subscribed: 0Played: 0
Share

Description

Become a Paid Subscriber: https://podcasters.spotify.com/pod/show/durai-arasu/subscribe

ஒரு எளிய கிராமத்தானின் பார்வையில் இந்த உலகம் எப்படி இருக்கிறது என்பதே எனது இந்தக் களம்.
ஆர்வம், ஆர்வக்கோளாறு, அறிவுத் தீட்சண்யம்(!), கடுமை, இனிமை, எளிமை, கறார் என்று எல்லாம் கலந்த கதம்ப சாதம் இது.
128 Episodes
Reverse
பெங்களூருவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதழியல் பணியில் சிறப்பாக இயங்கி வருபவர் திரு.முத்துமணி நன்னன் அவர்கள். கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தை உருவாக்கி திறம்பட நடத்திவருபவர். தொடர்ச்சியாகத் தமிழ்ப்புத்தகத் திருவிழாக்களை நடத்துகிறார். சிறந்த ஆய்வாளர். தமிழ்ப்பற்றாளர். எனது நெருங்கிய நண்பர். அவரிடம் ஒரு பெரிய அறிவுச் செல்வமே இருக்கிறது. அவருடன் ஒரு நீண்ட உரையாடல்…
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த 12 ஆம் தேதி (அக்.12, 2024) லிட்மஸ் 2024 என்ற நிகழ்வு நடத்தப்பட்டது. அறிவியல் பார்வை, சமூக நல்லிணக்கம், பகுத்தறிவு சிந்தனை, ஜனநாயகம் ஆகியவற்றை வலியுறுத்தும் எஸென்ஸ் என்ற அமைப்பு இதனை ஆண்டுதோறும் நடத்துகிறது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கு சங்கர் என்ற அருமையான தோழரைச் சந்தித்தேன். ‘மதங்களற்ற மனிதர்கள்’ என்ற பெயரில் ஒரு அமைப்பை எர்ணாகுளத்தில் நடத்திவரும் நல்லவர் சங்கர். மனித நேயம்தான் வாழ்க்கையின் பொருளே என்று கூறும் அவருடன் ஒரு சிறிய உரையாடல்.  அது இங்கே உங்களுக்காக…
மலையாளத்திரை உலகில் பெண்கள் பாலியல் ரீதியிலாகவும் உழைப்பின் அடிப்படையிலும் கடுமையாகச் சுரண்டப்படுவதாக நீதியரசர் ஹேமா கமிட்டி அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. முற்போக்குப் பார்வையும் கல்வியறிவும் சமூக நல்லிணக்க மனோபாவமும் கொண்ட கடவுளின் சொந்த தேசம் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது?  என்ன செய்யப்போகிறது?
இலக்கியக்கூட்டங்களுக்குச் செல்வதே ஒரு சுகானுபவம். செண்டிமெண்ட், ஆக்ரோஷம், கதாநாயகர் வருகை, ரசிகர்களின் விசில், வெட்டு குத்து சண்டைகள், குரோதம், கோடை வாசஸ்தல பின்னணியில் பாடல்கள், ஆடல்கள் என்று எல்லாம் கலந்த கலவை சாதம் அது.  (pix courtesy: pixabay)
முடி திருத்தும் அழகு நிலையம் பேசும் கவிதைகள் இவை…
ஏ.டி.எச்.டி என்பது உண்மையில் ஒரு நோயா? எதற்காக இந்தப் புரளி?
பொறியியலில் என்னென்ன படிப்புகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது. (pic courtesy: Pixabay)
பத்தாம் வகுப்புக்கு பின்னர் இதுதானே முக்கிய கேள்வி…
பிடியுங்கள் ஆலோசனைகளை!
நமக்குத் தெரியாத எண்ணற்ற படிப்புகளை கலை, அறிவியல் படிப்புகள் வழங்குகின்றன.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிக்குப் பிறகு அடுத்து என்ன செய்வது? என்ன செய்ய வேண்டும்?
சாதிவாரிக்கணக்கெடுப்பு, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான பிரதிநிதித்துவம் என்ற பிரம்மாஸ்திரத்தை ராகுல் காந்தி கையில் எடுத்திருக்கிறார். இந்தியா கூட்டணியின் இப்புதிய வியூகத்தின் பின்புலம் என்ன?
சுகாதாரமற்ற சூழல், பழைய எண்ணெய், தரமற்ற மூலப்பொருட்கள் என்று பல அம்சங்களும் சேர்ந்து உணவுத்தொழிலையும் நுகர்வோரையும் அச்சுறுத்திவருகின்றன. (Image by Mariya from Pixabay)
ஒரு தனிமனிதன்,பாலுறவுக்காட்சிகளை தனது செல்பேசியில் தனிமையில் பார்ப்பது குற்றமல்ல என்று கேரள உயர்நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அப்படியென்றால் இந்திய தண்டனைச் சட்டத்தின் 292 ஆவது பிரிவு சொல்வதுதான் என்ன? (Image by Saji Mohamed from Pixabay)
1990கள்வரை உங்களுக்குப் பள்ளிப் பருவம் இருந்திருந்தால் நிச்சயம் வாடகை சைக்கில் ஓட்டிய பழக்கம் உங்களுக்கு இருந்திருக்கும். குரங்குப் பெடல் தொடங்கி, சைக்கிள் சாகசம் வரைக்கும் எல்லாமே வாடகை சைக்கிள்களில்தான் நடக்கும். (Photo courtesy: toodlingstudio)
கிராம்ப்புற் கைவினைஞர்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட இருக்கும் விஸ்வகர்மா திட்டத்தை ஏன் தி.க. உள்ளிட்ட அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் எதிர்க்கின்றன?
அறிவியல் அறிஞர்முதல் தொழிலதிபர்வரை... வெற்றிபெற்ற மனிதர்களின் சாதியை ஆராயும் அளவுக்கு தமிழன் தரம் தாழ்ந்து போயிருக்கிறானா?
காலில் விழும் கலாச்சாரம் குறித்து திரும்பவும் பேசத்தொடங்கியிருக்கிறோம். ஒரு மனிதன், இன்னொரு மனிதனின் காலில் விழுவது சரிதானா? (Image by freepik)
திருச்சியில் பிறந்து, அமெரிக்காவில் வெற்றிகரமான தொழில் முனைவோராக உயர்ந்திருப்பவர் திரு.டெல்.கணேசன். ரூ.500 கோடி மதிப்புள்ள கைபா குழுமத்தின் தலைவர். தகவல் தொழில்நுட்பம், திரைப்பட தயாரிப்பு, விநியோகம், துணிகர முதலீடு என்று பல முனைகளிலும் இயங்கிவரும் நிறுவனம் அவருடையது. அவர் அண்மையில் The Pursuit: A manifesto from the American Dream Guru என்ற பெயரில் ஒரு நூலை வெளியிட்டிருந்தார். அதனையொட்டி அவருடன் இணையவழியில் ஒரு நேர்காணல் செய்தேன். அதுவே இது!
நீதிமன்றம் தொடர்பான அனைத்து ஆவணங்கள், தீர்ப்புகள், மனுக்களிலும் பெண்களை சட்டப்படியான சொற்களைவைத்துத்தான் விளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி காட்டியிருக்கிறது. எந்தெந்த சொற்களைப் பயன்படுத்தவேண்டும் என்ற கையேட்டையும் வெளியிட்டிருக்கிறது. Image by Gordon Johnson from Pixabay
loading
Comments