சினிமா செய்திகள் (14-12-2025)
Update: 2025-12-14
Description
துப்பாக்கி படத்தில் விஜய்க்கு இணையாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் வித்யூத் ஜம்வால். அதனைத்தொடர்ந்து சூர்யாவின் அஞ்சான், சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் நடித்திருந்தார். தமிழில் வில்லனாக நடித்தாலும், பாலிவுட்டில் ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கினார். இந்நிலையில் ‘ஸ்டிரீட் ஃபைட்டர்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார் வித்யூத். தால்சிம் எனும் கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபரில் வெளியாக உள்ளது.
Comments
In Channel




