DiscoverAtmanandalahari
Atmanandalahari
Claim Ownership

Atmanandalahari

Author: atmanandalahari

Subscribed: 0Played: 0
Share

Description

Self is absolute existence, absolute knowingness and absolute happiness. The real nature of self is Sat, Chit, Ananda. Let us explore the ancient scriptures, Upanishads, Bhagavad Gita, Brahma Sutra and Prakarana Granthas as taught by our teachers in this podcast. Let the light of knowledge remove the darkness of ignorance for everyone. Let the plurality, duality be dismissed and absolute oneness be understood. This will be a multilingual podcast with episodes in English, Tamil and Sanskrit.
எங்கும் நிறைந்த இருப்பாய், மங்காத சித்தாய் பொங்கும் ஆநந்த பொலிவான மெய்ப்பொருளை, ஆத்மாவை, தங்கு தடையில்லா தத்துவத்தை, இரண்டற்ற ஒன்றான அத்வைத கருத்துக்களை இந்த வலையொலிப் பதிவில் பகிர்ந்துகொள்வோம். உபநிடதங்கள், பகவத் கீதை, ப்ரம்மசூத்ர கருத்துக்களையும், வேதாந்த நூல்களையும் ஆராய்வோம். வாழையடி வாழையாய் வந்த இந்த அறிவொளியில், அறியாமை இருள் அகலட்டும். இந்த வலையொலி ஆங்கிலம், தமிழ், மற்றும் வடமொழியில் ஒலிக்கும் .

16 Episodes
Reverse
சூழல் காற்றில் சுற்றும் குப்பை போல திரியும் ஜீவன்  குருவை சரணடைகிறான் . ஆத்ம ஞாநம் கற்று கொள்ள வேண்டிய தகுதிகளுடன்  -தவம் , பக்தி, கேட்க ஆசை, ஸ்ரத்தாவுடன் அவன் கேட்கிறான்.  ஆத்ம வித்தை கேட்க ஆரம்பித்தாலே சம்சாரக் கடல் வற்ற தொடங்கிவிடும்.புழு எப்படி குளவியாய் மாறுகிறதோ அது போல் ஜீவா பரமாத்மாவாகிறான். 
Introduction - Symbolism of Lord Ganesha Form Obstacles from three sources - Adyatmika, Adiboudhika and Adi Deivika to be removed Journey of self from Tamo guna to Rajo guna to Sattva , for the ultimate truth to reflects Podcast Episode in English 
சிஷ்யன் குருவை வணங்கி ஆத்ம ஞானம் வேண்டும் என்று கேட்டல்,  குரு சங்கல்ப தீக்ஷை, சக்ஷு தீக்ஷை, ஸ்பர்ச தீக்ஷை, ஞானதீக்ஷை மூலம் ஆறுதல் அளித்தல், சிஷ்யன் தகுதியை உணர்த்தி  குருவை சரணடைதல். 
நான்கு தகுதிகள் உடையவருக்கு அறிவு உண்டாகும். சிஷ்யனுக்கு உரிய தகுதிகளுடன், அத்யாத்மிக ஆதிதைவிக ஆதிபௌதிக துன்பங்களில் இருந்து விடுபட குருவை அணுகுதல். 
தத்துவ விளக்கப் படலம்  பாடல் 1-3 ஞானம் பெறுவதற்கான தகுதிகள் -விவேகம், வைராக்யம் , சமதம ஆறு கூட்டம், முக்தி அடைய அவா. 
கைவல்ய நவநீதம் நூலினால் என்ன பயன்?  பாயிரம் 6 படர்ந்தவே தாந்த மென்னும் பாற்கடல் மொண்டு முன்னூல், குடங்களில் நிறைத்து வைத்தார் குரவர்க ளெல்லாங் காய்ச்சிக், கடைந்தெடுத்து அளித்தேன் இந்தக் கைவல்ய நவநீதத்தை, அடைந்தவர் விடய மண்தின்று அலைவரோ பசியி லாரே.  
In Sanātana Dharma, there are 18 great Mahāpurāṇas — and among them, the Śrīmad Bhāgavatam shines as the most beloved. The Purāṇas use personification, magnification, and deep symbolism to make timeless truths come alive. Beneath the captivating stories lies the ultimate purpose: guiding us toward the One Reality. In this episode, we explore the Śrīmad Bhāgavatam through the lens of Advaita Vedānta, uncovering the hidden meanings and spiritual insights behind its symbolism. This episode is rendered in English, with select verses in Tamil and Sanskrit.
என்னுடை மனது புத்தி இந்திரிய சரீரம் எல்லாம், என்னுடை அறிவி னாலே இரவிமுன் இமமே ஆக்கி,  என்னுடை நீயும் நானும் ஏகமென்று ஐக்கியம் செய்ய, என்னுடைக் குருவாய்த் தோன்றும் ஈசனை இறைஞ்சி னேனே. Maha Vakya - Tat Tvam Asi is explained in this verse
பாடல் -2 & 3 சகுண ஈஸ்வர உபாசனை  குரு நமஸ்காரம்  
மோட்சம் என்றால் என்ன? கர்மா, பக்தி, ஞாநம் -விளக்கம்  பாயிரம்-1 பொன்னிலம்  மாதர்  ஆசை பொருந்தினர் பொருந்தார்  உள்ளந்    தன்னில் அந்தரத்தில் சீவசாட்சி மாத்திரமாய் நிற்கும்,  எந்நிலங்களிலும்  மிக்க எழு நிலம்  அவற்றின் மேலாம்,  நன்னிலம்  மருவும் ஏக நாயகன் பதங்கள் போற்றி!  
கைவல்ய நவநீதம் -குரு வந்தனம் முன்னுரை இது ஒரு சார்பு நூல். சாஸ்திரத்தில் சொல்லப்பட்டதை இன்னொரு நூலாக எழுதுவது.  எழதியது - தாண்டவராய சுவாமிகள். மனிதப் பிறவியின் நோக்கம் உண்மையை உணர்தல். நான் யார் என்ற  உண்மையை உணரவேண்டும். எல்லாம் பிரம்மமே என்று அறிவதே அறிவு. 
Ulladhu Narpadhu is a collection of forty verses by Bhagavan Sri Ramana revealing the ultimate truth. Poems that blossomed based on this text are shared here. The three poems based verses 1, 3 and 39 will describe the Mahavakya Tat Tvam Asi. This episode will have rendering of verses from Ulladhu Narpadhu in Tamil, Saddarshanam in Sanskrit and poems in English  https://www.amazon.com/Chinmaya-Chintamani-Consciousness-Dr-Varalakshmi-Niranjan/dp/B0CHGHWW2C
ஈன மிகுத்துள பிறவி-இந்த திருப்புகழில் இருக்கும் வேதாந்த கருத்துக்களை இந்த பதிவில் காணலாம். இறையருள் எங்கும் காற்று போல் பரவியிருக்கிறது. வாழ்க்கைப் படகை காற்று வீசும் திசையில் திருப்புவதே சுய முயற்சி. இறையருளும் சுய முயற்சியும் நாணயத்தின் இருபக்கங்கள் போல் அமைந்து வாழ்க்கையை வழிநடத்த வேண்டும். இவற்றுடன் குருவருள், சாஸ்த்திர அருளும்  இணைய  பயணம் இனிதே அமையும் 
உலக பசு பாசம் இந்த திருப்புகழில் இருக்கும் வேதாந்த கருத்துக்களை இந்த பதிவில் காணலாம். மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ள நான்கு தகுதிகள் (சாதன சதுஷ்டயம்) சொல்லப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு  1. விவேகம்  2. வைராக்யம்  3. சமா ஆதி ஷட்சம்பத்தி (சமா,தமா, திதிக்ஷா, உபரதி, ஸ்ரத்தா, சமாதானம்) 4. முமுக்ஷுத்வம்   
அற்றைக்கு இரை தேடி இந்த திருப்புகழில் இருக்கும் வேதாந்த கருத்துக்களை இந்த பதிவில் காணலாம். அறம், பொருள், இன்பம், வீடு ( தர்மம்  அர்த்தம்  காமம் மோட்சம்) இவை நான்குமே புருஷார்த்தம் எனப்படும். இவற்றில் அறத்துடன் பொருளை ஈட்டி , இன்பத்தை நுகரும் மனிதன், ஒரு காலகட்டத்தில் இது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோள் இல்லை. இதற்கு மேல் ஏதோ ஒன்று உள்ளது என்று உணரும் போது அவன் வீடு பேறு அல்லது மோட்சத்திற்கு தயாராகிறான். 
Thiruppugazhil Vedantam -1  இறை வணக்கம் - கைத்தல நிறைகனி இந்த திருப்புகழில் இருக்கும் வேதாந்த கருத்துக்களை இந்த பதிவில் காணலாம். தடைகளை நீக்கும் விநாயகரை வணங்கி நமது வேதாந்த பயணத்தை மேற்கொள்வோம். அத்யாத்ம, அதிபூத, அதிதெய்வ தடைகள் விலகி, சகுண உபாஸனம் மூலம் பக்தியை வளர்த்து, நிர்குண பரப்பிரம்மத்தை உணர்ந்து கொள்வோம்.
Comments