கைவல்ய நவநீதம் -8
Update: 2025-08-28
Description
பாடல் :-7 வணங்கி கேட்டல்
வணங்கிநின் றழுது சொல்வான் மாயவாழ் வெனும்சோ கத்தால்,
உணங்கினேன் ஐய னேஎன் உள்ளமே குளிரும் வண்ணம்,
பிணங்கிய கோச பாசப் பின்னலைச் சின்னம் ஆக்கி,
இணங்கிய குருவே என்னை இரட்சித்தல் வேண்டும் என்றான்.
பாடல் 8 குருவின் ஆறுதல்
அன்னதன் சிசுவை ஐயன் ஆமை மீன் பறவை போலத்,
தன்னகம் கருதி நோக்கித் தடவிச்சந் நிதிஇ ருத்தி,
உன்னது பிறவி மாற்றும் உபாயம்ஒன் றுண்டு சொல்வேன்,
சொன்னது கேட்பா யாகில் தொடர்பவம் தொலையும் என்றான்.
பாடல் : 9 சிஷ்யன் தகுதியை உணர்த்தறான்
தொடர்பவம் தொலையுமென்று சொன்னதைக் கேட்ட போதே,
தடமடு மூழ்கி னான்போல் சரீரமும் குளிர்ந்துள் ளாறி,
அடருமன் பொழுகு மாபோல் ஆநந்த பாஷ்பம் காட்டி,
மடல்மலர்ப் பாதம் மீண்டும் வணங்கிநின் றீது சொல்வான்.
பாடல் : 10- சரணடைதல்
சொன்னது கேட்க மாட்டாத் தொண்டன் ஆனாலும் சுவாமி,
நின்னது கருணை யாலே நீரெனை ஆளலாமே,
உன்னது பிறவி மாற்றும் உபாயமொன் றுண்டென் றீரே,
இன்னதென் றதைநீர் காட்டி ஈடேற்றல் வேண்டும் என்றான்.

Comments
In Channel